தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மருத்துவத்தில் இறை சக்தி

Go down

மருத்துவத்தில் இறை சக்தி Empty மருத்துவத்தில் இறை சக்தி

Post  meenu Mon Feb 25, 2013 2:47 pm


நரம்பியல் நிபுணர் சீனீவாசனுடன் நேர்காணல் - பகுதி 1

த‌மி‌ழ்.வெ‌ப்து‌னியா.கா‌ம்: தலைசிறந்த நரம்பியல் நிபுணர்களில் ஒருவராகக் கருதப்படுபவர் நீங்கள். அந்த அடிப்படையில், பொதுவாகப் பார்த்தால் எங்களுடைய அனுபவத்தில் நாங்கள் பார்த்தது, விஞ்ஞான ரீதியிலான அலோபதி மருத்துவத்தில் ஈடுபடக்கூடியவர்கள் பொதுவாக, ஆன்மிகம் அல்லது யோகம் அல்லது இறை சக்தி போன்றவற்றை முழுமையாக நம்பாதவர்களாக, முழுமையாக அறிவியல் ரீதியாக கண்டுபிடிக்கப்பட்ட கருவிகளால்தான் மனிதனைக் குணப்படுத்த முடியும் என்கின்ற எண்ணத்தில்தான் பேசிக்கொண்டும், செய்துகொண்டும் இருக்கிறார்கள். ஆனால், ஒரு வித்தியாசமாக நீங்கள், இறை சக்தியும் மருத்துவத்தின் ஒரு அங்கம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு போயிருக்கிறீர்கள் என்றால், அடிப்படையில் எது உங்களை அந்த மாதிரி சிந்திக்கத் தோன்றியது. ஏனென்றால், நீங்களும் அறிவியல் பூர்வமான கல்வி கற்று, அதன் அடிப்படையில் பட்டம் பெற்று, பிறகு அதையே மருத்துவத் துறையில் பயன்படுத்தி புகழ்பெற்று வந்துள்ள நிலையில், அதையும் இதோடு சேர்த்து பயன்படுத்த வேண்டும் என்ற உந்துதல் உங்களுக்கு எப்படி ஏற்பட்டது? ஏன் ஏற்பட்டது?

FILE
நர‌ம்‌பிய‌ல் ‌நிபுண‌ர் ‌சீ‌னிவாச‌ன்: இது ஒரு முக்கியமான கேள்வி. விஞ்ஞானமும், மெய்ஞானமும் சேருமா சேராதா? அல்லது விஞ்ஞானம் முடிந்தால் மெய்ஞானம்தான் என்று சொல்வார்கள். Philosophy Starts when Science Ends என்று சொல்வார்கள். ஆனால், என்னுடைய கருத்து, Philosophy Starts not when Science End. Science Blend with Philosophy என்பதே. நரம்பியல் தந்தை என்று சொன்னால் நாதன் ஹென்மேன், ஷெரிங்டன் அவருடைய முக்கியமான சீடர்கள் எல்லாருமே முதலில், மனமும் மூளையும் ஒரே ஆர்கன் என்று நினைத்து, கடைசியில் இரண்டுபட்டது என்ற முடிவிற்கு வெளிப்படையாக ஒப்புக்கொள்ளவில்லை என்றாலும், மனம் என்பது மனிதனை இயக்குகின்ற ஒரு முக்கியமான கருவி. இந்த மனம் மூளையை இயக்குமேயொழிய, மூளையினால் மனதை இயக்க முடியாது. இதை விஞ்ஞானப் பூர்வமாக சொல்ல வேண்டுமென்றால், Mind is the Function of the Brain. மைண்டுக்கு மூளையில் ஒரு வடிவம் (Structure) கிடையாது.

அப்படியென்றால் மனம் என்றால் என்ன என்று ஒரு கேள்வி எழுகிறது. மனம் என்றால் ஒரு சிலந்திக் கூடு போன்றது. நான் என்கின்ற எண்ணம்தான் முதல் இழை. அந்த இழைகளால் பின்னப்பட்ட சிலந்திக் கூடுதான் மனம். அந்த மனம் பல்வேறுபட்ட வகைகளில் உள்ளது. விஞ்ஞானம் இந்த மனதை என்னவென்று சொல்கிறதென்றால், அணுவைப் பிரித்து அணுவிற்குள் இருக்கும் அணுவிற்குள் போகும் அளவிற்கெல்லாம் விஞ்ஞானம் முன்னேறியிருக்கிறது, பெளதீகத்திலும், இரசாயனத்திலும். அந்தத் தன்மையில், மேக்ராஸ்கோபிக்காக பார்க்கும் போது விஞ்ஞானம் உண்மை என்பது மாதிரி இருக்கும். மைக்ராஸ்கோபிக்கில் பார்க்கும் சமயத்தில், குவாண்ட்டம் பிசிக்ஸ் என்று வந்தால் எல்லாமே கெஸ்தான். நாம் எப்படி நினைக்கிறோமே அதைத்தான் ரிசல்ட்டாக எடுத்துக் கொள்கிறோம்.

ஏனென்றால், நாம் உணருகின்ற தன்மை. இந்த மாதிரி சமயத்தில் மருத்துவர்களுக்குதான் முக்கியமாக அவர்கள் செயலாற்றுகிற திறன், அந்த செயலாற்றுகின்ற திறனில் எவ்வளவு தூரம் இயற்கை விளையாடுகிறது என்று அவர்கள்தான் அனுபவப்பூர்வமாக அறிய முடியும். ஏனென்றால், ஒரு சில நோயாளிகள் கண்டிப்பாக வீடு சென்று சேருவார்கள் என்று நினைக்கிறோம்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum