தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords

temple  


மருத்துவ சோதனை: இறந்தவர்களுக்கு இழப்பீடு இல்லை!

Go down

மருத்துவ சோதனை: இறந்தவர்களுக்கு இழப்பீடு இல்லை! Empty மருத்துவ சோதனை: இறந்தவர்களுக்கு இழப்பீடு இல்லை!

Post  meenu on Mon Feb 25, 2013 2:38 pm


பன்னாட்டு மருந்து உற்பத்தி நிறுவனங்கள் இந்தியாவில் மனிதர்களை வைத்து மருத்துவப் பரிசோதனைகள் நடத்துவதில் மரணங்கள் நிகழ்வது ஒரு புறம் பெரிய சர்ச்சையைக் கிளப்பியுள்ள வேளையில் இழப்பீடு கொடுப்பதிலும் பன்னாட்டு நிறுவனங்கள் பாரபட்சம் காட்டுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

"கிளினிக்கல் ட்ரையல்" மூலம் சாவுகள் அதிகரித்துள்ள அதே வேளையில் பன்னாட்டு நிறுவனங்களின் மருத்துவ ஆய்வுப் பரிசோதனைகளும் அதிகரித்துள்ளதாக இந்தத் துறையைச் சார்ந்த நிபுணர்கள் கூறியுள்ளனர்.

கிளினிக்கல் ட்ரையல்கள் மூலம் 2007ஆம் ஆண்டு 137 பேரும், 2008இல் 288 பேரும், 2009-இல் 637 பேரும் 2010-இல் 668 பேரும் பலியாகியுள்ளனர் என்பது அதிகாரபூர்வ தகவல்.

ஆனால் இது மிகவும் குறைவாகக் கட்டப்பட்ட சாவு எண்ணிக்கை என்று கருதப்படுகிறது. கிளினிக்கல் ட்ரையலால் உயிரிழந்தவர்கள் பற்றிய முழு எண்ணிக்கை இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு தலைமை ஆணையத்திற்கு தெரிவிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாற்றுகள் எழுந்துள்ளன.

அதாவது கிளினிகல் ட்ரையல்களால் இறந்தவர்கள் ஏதோ சாதாரணமாக இறந்தது போல் காட்டப்படுவதும் தொடர்கிறது என்று பொருள்.

காரணம் என்னவெனில் இந்த விசாரணைகளை மேற்கொள்பவர்களில் சிலர் பன்னாட்டு நிறுவனங்களால் "கவனிக்கப்படுகின்றனர்"! இவர்கள்தான் சாவு எவ்வாறு நிகழ்ந்தது என்பதை தீர்மானிக்கின்றனர்.

இதில் மற்றொரு கொடுமை என்னவென்றால் சில நாடுகளில் கிளினிக்கல் ட்ரையல்களால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது மரணமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு அளிப்பதில் பன்னாட்டு நிறுவனங்கள் பாரபட்சம் காட்டி வருகின்றனர் என்பதே.

அமெரிக்காவிலும் கிளின்க்கல் ட்ரையல் நடக்கிறது, ஆனால் அங்கு இழப்பீடுகள் முறையாக கொடுக்கப்படுவதும் பதிவாகியுள்ளது. "கேஸ் ஹிஸ்டரி"-யை எடுத்துப்பார்த்தால் பன்னாட்டு நிறுவனங்கள் வளர்ந்த நாடுகளில் இழப்பீட்டிற்கு ஒரு தொகையையும், இந்தியாவுக்கு ஒரு தொகையையும் நிர்ணயிப்பதாக எம்.ஐ.எம்.எஸ். என்ற மருத்துவ இதழின் ஆசிரியர் டாக்டர். சி.எம்.குல்ஹத்தி தெரிவித்துள்ளார்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum