தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords

temple  


மாதவிடாய்க்கு முந்தைய மன அழுத்தம்

Go down

மாதவிடாய்க்கு முந்தைய மன அழுத்தம் Empty மாதவிடாய்க்கு முந்தைய மன அழுத்தம்

Post  meenu on Mon Feb 25, 2013 2:16 pm

ப்ரீ மென்ஸ்ட்டுரல் சிண்ட்ரோம் (Pre-Menstrual Syndrome)
பெண்களுக்கு மாதபோக்கு மாதந்தோறும் தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பு மனஅழுத்தம் , உடல்வலி , கைகால்வலி, தலைவலி ஏற்படும். அதனை ' (ப்ரீ மென்ஸ்ட்டுரல் சிண்ட்ரோம்) என்பார்கள்.

உடல் கணம் , மார்புகள் கனமாகி வலித்தல், தூக்கமின்மை, கோபம், எரிச்சல் போன்றவை இதன் அறிகுறிகளாகும்.

ப்ரீ மென்ஸ்ட்டுரல் சிண்ட்ரோம் பிரச்சினைகள் பற்றி தொடர்ந்து ஆய்வுகள் செய்து வந்த மருத்துவ விஞ்ஞானிகள், அதில் அதிகபட்ச பாதிப்பு ஏற்படுவதற்கு 'பி.எம்.டி.டி' (ப்ரீ மென்ஸ்ட்டுரல் டிஸ்மோர்பிக் டிசார்டர்) என்று பெயரிட்டிருக்கிறார்கள்.

இது கொஞ்சம் ஆபத்தும் கலந்தது. இந்த பாதிப்பு ஏற்படும் பெண்கள் கணவரோடு அதிகபட்ச வாக்குவாதத்தில் ஈடுபடுவது, குழந்தைகளிடம் கோபம், அடிப்பது , பக்கத்து வீட்டினரோடு சண்டை போடுவது போன்றவைகளில் ஈடுபடலாம்.

இந்த பி.எம்.டி.டி. பாதிப்பின் காலகட்டத்தில் தான் பெண்கள் தற்கொலை போன்ற முடிவுகளை எடுக்கிறார்கள், வன்முறை செயல்களிலும் ஈடுபடுகிறார்கள் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மாதபோக்கு ஒரு வாரம் முன்பு பெண்களுக்கு பல்வேறு வலிகள் ஏற்படுவதுண்டு(கால்வலி வயிற்றுவலி, தலைவலி) . கூடுதலாக மனஅழுத்தம், சத்தம் போட்டு கத்தும் மனநிலை, அடுத்து என்ன செய்யபோகிறோம் என்ற முடிவுகளின்றி இருப்பது, பொது நிகழ்ச்சிகளில் பங்கு பெறத் தயங்கி வீட்டுக்குள்ளே இருப்பது, அதிகமான சோர்வு போன்றவைகளும் இருந்தால் அவை பி.எம்.டி.டி. பாதிப்பிற்கு அறிகுறிகள் .

அப்போது கணவரோடு தாம்பத்ய வாழ்க்கையில் ஆர்வமின்மையும், எரிச்சலும் ஏற்படலாம். வேலை பார்க்கும் இடங்களில் கவனமின்மை, குழந்தைகளிடம் அலட்சியம்,கோபம், மாணவிகளாக இருந்தால் படிப்பில் பின்தங்குவார்கள்.

தனிமையை நாடுதல், தற்கொலையைப் பற்றி சிந்தித்தல் போன்றவை ஏற்படலாம். மாதபோக்கு காலத்தில் இதுபோன்ற அறிகுறிகள் தோன்றினால் உடனடியாக மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது.

இந்த அறிகுறிகள் மாதபோக்கு முடிந்த 14-ம் நாளில் தொடங்கி, ஐந்து நாட்களுக்கு முன்பு மிகவும் அதிகரித்து, மாதவிலக்கு முடிந்த பிறகு ஐந்து நாட்கள் வரை நீடிக்கும்.
- வேலையிலும், மற்றவர்களோடு பழகுவதிலும் கவனம் செலுத்தாமல் இருப்பது.

- கோபம் தொடர்ந்து நீடித்தல்.

- சின்னச் சின்ன விஷயங்களையும் பெரிய அளவில் விவாதங்களாக்கி விடுதல்.

- காரணமில்லாமல் அழுதல்.

- எதுவுமே முடியாது என்று தன்னம்பிக்கை குறைதல்.

- கடுமையான சோர்வு.

- தூக்கம் இல்லாமல் போதல்.

- பசியில்லாமல் போதல்.

- கட்டுப்பாடற்ற சில செயல்பாடுகள் போன்றவை பி.எம்.டி.டி.யின் இதர அறிகுறிகள்.

சிலருக்கு மாதவிலக்கு முடிந்த பிறகும் இந்த அறிகுறிகள் தொடரும். அப்படி தொடர்ந்தால் அவர்களுக்கு ஏற்கனவே மனஅழுத்த நோய் இருக்கும் என்றும் புரிந்து கொள்ளலாம்.

பெண்களில் 30 சதவீதம் பேருக்கு பி.எம்.எஸ். பிரச்சினை இருந்தால் அவர்களில் 4 சதவீதம் பேருக்கு அதன் தாக்கம் அதிகரித்து பி.எம்.டி.டி.யாக மாறும்.

ஒரு பெண் அளவிற்கு அதிகமாக கோபம் கொண்டால் அதற்கு அவளது உடல் ரீதியான சில மாற்றங்களும் காரணமாக இருக்கும். அவளது உடலில் ஏற்படும் ஹார்மோன் வித்தியாசங்களால் உடலில் இருக்கும் 'சிரோட்டோத்தின்" அளவு குறையும். இந்த குறைபாட்டிற்கு கோபத்தை தூண்டிக்கொண்டே இருக்கும் ஆற்றல் உண்டு.

பி.எம்.டி.டி. பாதிப்பை கட்டுப்படுத்தும் சிகிச்சைகள் என்னென்ன?

ஏரோபிக் உடற்பயிற்சிகள், யோகா, தியானம் போன்றவை ஓரளவு பலன் தரும்.

ஆங்கில மருத்துவம்

பெரும்பாலானவர்களுக்கு மருத்துவ சிகிச்சை தேவைவப்படும். பி.எம்.டி.டி. பாதிப்புகள் உருவாக ஹார்மோன் சமச்சீரற்றதன்மை தான் காரணம் என்பதால், அந்த ஹார்மோனை மையப்படுத்தியே சிகிச்சைகளும் கொடுக்கப்படுகின்றன.

சிலருக்கு, மாதவிலக்கு தொடங்கிய 14 நாளில் இருந்து மாதவிலக்கு முடிந்த ஒன்றிரண்டு நாட்கள் வரை மருந்து சாப்பிட வேண்டியதிருக்கும். சிலருக்கு எல்லா நாட்களும் மருந்து சாப்பிட வேண்டிய நிலை ஏற்படலாம்.

ஹோமியோபதி

ஹார்மோன் சமச்சீரற்றதன்மையை ஹோமியோபதி மருந்துகளால் நிரந்தரமாக குனபடுத்தலம்.

மாதபோக்கு வரும் முன்பு எற்படும் தலைவலி,மனம் சார்ந்த கோபம், மன அழுத்தம், உடல் வலி, அணைத்து பிரச்சனைகளையும் ஹோமியோபதி சிகிச்சை மூலம் குனபடுத்துகிறோம்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum