தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords

temple  


வெயில் கால நோய்கள்

Go down

வெயில் கால நோய்கள் Empty வெயில் கால நோய்கள்

Post  meenu on Mon Feb 25, 2013 2:14 pm

வெயிலில் அலுவலகத்தை அடையும் சிலருக்கு தோலில் சற்று அரிப்பு ஏற்படும். சில நேரங்களில் திட்டுத்திட்டாகவும் தோலில் அலர்ஜி ஏற்படும்.

இதற்கு 'போட்டோ அலர்ஜி' அல்லது 'போட்டோ டெர்மடைட்டிஸ்' அதாவது 'சூரிய ஒளி ஒவ்வாமை' என்று பெயர். சூரிய ஒளியில் இருக்கின்ற புற ஊதாக் கதிர்கள் தான், இந்த பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

புற ஊதாக் கதிர்களில் 'ஏ', 'பி' என்று இரண்டு வகை உண்டு. இரண்டுமே தோலை பாதிக்கும். ஆகவே, 'ஸன்ஸ் கிரின் லோஷன்' பயன்படுத்துவது நல்லது. அந்த லோஷன்களில் 'ஜிங்க் ஆக்ஸைடு' மற்றும் 'டைட்டானியம் டைஆக்ஸைடு' இருக்கிறதா என்று பார்த்து வாங்க வேண்டும்.

இந்த ஸன்ஸ் கிரின் லோஷன்கள் அதிகபட்சம் நான்கு மணி நேரம்தான் பயன் அளிக்கும். இந்த இடைவெளியில் மறுபடியும் அவற்றை உபயோகிப்பது நல்லது.

வெயில் கொப்புளங்கள் (Summer Boils)

வெயில் கொப்புளம் என்கிற தோல் பாதிப்பு நிலையும் ஏற்படும் வெயில் கலங்களில் முடியின் வேர் பகுதியில் பக்டீரியா கிருமி தொற்று ஏற்படுவதால் வெயில் கொப்புளங்கள் உருவாகிறது.

சூரிய ஒளி ஒவ்வாமை

தினமும் காலையிலும், மாலையிலும் குளிர்ந்த நீரில் குளிப்பதன் மூலம் சொறி, சிரங்கு, வேர்க்குருவை தடுக்க முடியும். சொறி, சிரங்கால் பாதிக்கப்பட்டவர்கள் தனியாக சோப்பு மற்றும் டவல்களை பயன்படுத்துவது நல்லது.

வேர்க்குருவால் பாதிக்கப்பட்டவர்கள் குளித்துவிட்டு வேர்க்குரு பவுடரை உடம்பு முழுவதும் பூசிக்கொள்வது நல்லது. காளான் போன்ற படர்தாமரை நோய்களை தவிர்க்க இறுக்கமான ஆடைகளை அணியாமல் மெல்லிய கைத்தறி ஆடைகளை அணிவதே நல்லது.

குளிர்ச்சியான பழங்கள், அதிகமாக மோர், எலுமிச்சை ஜூஸ், தர்பூசணி (water melon) தினமும் சேர்க்கலாம் .
உணவில் சின்ன வெங்காயம் சேர்க்கவும்.

ஹோமியோபதி மருத்துவம்

ஹோமியோபதி மருத்துவத்தில் வெயில் கொப்புளங்கள்- kali bich 30 என்ற மருத்து 3 வேலை சாப்பிட முற்றிலும் குணமாகும் வெயில் கொப்புளங்கள் பாதிக்கப்பட்ட இடத்தில மீண்டும் முடி வளரும் .

வெயில் கால தோல் அரிப்பை, தடுக்கவும், காக்கவும் நிறைய 'மருந்துகள் உள்ளன. இவை தோலை வியர்வையின்றி பாதுகாக்கும். தோலுக்கு ஏற்ற மிகச் சிறந்த மருந்து ஹோமியோபதி மருந்துகள் என்றால் அது மிகையில்லை.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum