தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...
Keywords

temple  


விந்துப்பை புற்றுநோய் வாய்ப்பை குறைக்கும் ‘பிஸா’

Go down

 விந்துப்பை புற்றுநோய் வாய்ப்பை குறைக்கும் ‘பிஸா’ Empty விந்துப்பை புற்றுநோய் வாய்ப்பை குறைக்கும் ‘பிஸா’

Post  meenu on Mon Feb 25, 2013 12:59 pm

பிசா
FILE
நியூயார்க்கின் லாங்க் ஐலேண்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களான சுப்ரியா பவதேகர் என்ற இந்தியர் மற்றும் அவரின் சக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர்.

அதில், ஓமம் (Oregano) சேர்க்கப்பட்டு தயாரிக்கப்பட்ட பிஸா சாப்பிடுவதால் ஆண்களுக்கு ஏற்படும் ப்ரோஸ்டேட் கேன்சர் எனப்படும் விந்துப்பை புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு குறையும் என்று அறிந்துள்ளனர்.

விந்துப்பை புற்றுநோய் எப்படி உருவாகிறது என்றால், ஆண்கள் வயது முதிரும் நிலையில் விந்து நீர் சுரப்பி பெரிதடைகிறது. இதனால் சிறுநீர் கழித்தலில் தடைகள் ஏற்படுகின்றன. அதுமட்டுமல்லாமல் இதன்காரணமாக புற்றுநோய் உருவாகிறது.
அமெரிக்காவில் 36 பேரில் ஒருவர் விந்துப்பை புற்று நோயால் இறக்கிறார்கள்

இந்த புற்று நோய்க்கு அறுவைசிகிச்சை , ரேடியேஷன் தெரப்பி, ஹார்மோன் தெரப்பி உள்ளிட்ட சிகிச்சைகள் இருந்தாலும், அவைகளினால் மோசமான பக்க விளைவுகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது.

இந்நிலையில் விந்துப்பை புற்று நோய் உருவாக்கும் செல்களை கொல்லும் தன்மை ஓமத்தில் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

ஓமத்தில் கேர்வக்ரோல் (Carvacrol) என்ற வேதிப்பொருள் உள்ளது. இதுதான், புற்றுநோய் செல்களை கொல்கின்றன.

தற்போது, இதுக்குறித்த ஆய்வு தொடக்க நிலையில் உள்ளது. மேலும், அடுத்தடுத்த சோதனைகள் வெற்றிகரமாக அமைந்தால் விந்துப்பை புற்றுநோய்க்கான சிகிச்சைக்கு ஓமம் சிறந்த மருந்தாகும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இந்த ஓமம் கலந்து செய்யப்படும் பிஸா சாப்பிடுவதனால் விந்துப்பை புற்றுநோயை கட்டுபடுத்தலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அதற்காக பிஸா மட்டுமே சாப்பிட்டால் புற்றுநோயை கட்டுப்படுத்தலாம் என்பது அர்த்தமாகி விடாது.

குறிப்பாக இயற்கை தாவரங்கள், பழங்கள், காய்கறிகளில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன.

இவற்றை கலந்து செய்யப்படும் உணவுகளால் நமக்கு நன்மை ஏற்படுகிறது என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum