புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில்
Page 1 of 1
புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில்
தஞ்சையில் இருந்து சுமார் நான்கு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள தலம் புன்னைநல்லூர். இத்தலத்தில் தேவியானவள் மாரியாகவும், முத்துமாரியாகவும், மகாமாரியாகவும் அருள் பாலித்து வருகிறாள். மூலஸ்தான அம்மனுக்கு எதிரில் உற்சவ அம்மன் அருள் புரிகிறாள்.
பால் சுரந்த பசுவால் பூமியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட விஷ்ணு துர்க்கை, அம்பாளின் வலப்புறத்தில் வடக்கு நோக்கிக் காட்சி அளிக்கிறாள். அனைத்து அபிஷேகங்களும் உற்சவ அம்பாளுக்கும் விஷ்ணு துர்க்கைகளும் மட்டுமே நடைபெறும். மூலவருக்கு தைலாபிஷேகமும் புஷ்பாபிஷேகமும் மட்டும் நடைபெறும்.
தென்கிழக்கு திசையில் பேச்சியம்மன் சன்னதி உள்ளது. பரிவார தேவதைகளாக காத்தவராயன், வீரன், லாடசன்னாசி, முனி ஆகியோர் அம்பாளைப்பார்த்த வண்ணம் மேற்கு திசை நோக்கிக்காட்சி அளிக்கிறார்கள். இந்த சன்னதியின் தென் பக்கச்சுவரில் "பாவை விளக்கு அம்மன்'' உள்ளாள். இங்கு பக்தர்கள் மாவிளக்குப்படையலிட்டு வழிபடுகிறார்கள்.
மூன்றாம் பிரகாரத்தில் தென்மேற்கு பகுதியில் காணப்படும் பாம்பு புற்றுக்கு பக்தர்கள் பால், முட்டை ஆகியவற்றை வைத்து வணங்குகின்றனர். 12 அடிக்குமேல் நீளம் உள்ள பாம்பு ஒன்று 6.4.1988-ல் இங்கு சட்டை உரித்து விட்டுச்சென்றிருக்கிறது.
இதை பொதுமக்களின் பார்வைக்காக கண்ணாடிப் பெட்டியில் பாதுகாப்பாக வைத்துள்ளனர். நாகதோஷ உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட்டால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை. ஸ்தல விருட்சம் வேம்பு, புன்னை வனத்தின் நினைவாக முத்துப்பல்லக்கு குழுவினரால் மூன்றாம் பிரகாரத்தில் புன்னை மரம் வளர்க்கப்படுகிறது.
மூன்றாம் பிரகாரத்திலிருந்து வெளியே வரும்போது சன்னதிக்கு உள்ளிருக்கும் மிக ஆழமான வெல்லக்குளம் உள்ளது. வேண்டுதல் செய்து கொண்டவர்கள் குளத்தில் வெல்லம் போடுவர்.
கோவில் நடை திறக்கும் நேரம்:
கோவில் நடை காலை 5.30 மணிக்கு திறக்கப்பட்டு வேத ஆகம முறைப்படி நான்கு கால பூஜைகள் நடைபெறுகின்றன. (பூஜை நேரங்கள்: காலை 9.00 மணி, நண்பகல் 12.00 மணி, மாலை6.00, இரவு 9.00 மணி) விசேஷ காலங்களிலும் விழாக்காலங்களிலும் நேரம் சிறிது மாற்றமடையும், மதியத்தில் நடை சாற்றப்படுவதில்லை என்பது இக்கோவிலின் சிறப்பு.
ஆடி மாதம் மூன்றாவது வெள்ளிக்கிழமை பூச்சொரிதல் விழா சுக்கிர வார வழிபாட்டுக் குழுவினரால் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன்
» வல்லங்குளம் மாரியம்மன் கோவில்
» வல்லங்குளம் மாரியம்மன் கோவில்
» சந்தைக்கடை மாரியம்மன் கோவில்
» சீதளாதேவி மகா மாரியம்மன் கோவில்
» வல்லங்குளம் மாரியம்மன் கோவில்
» வல்லங்குளம் மாரியம்மன் கோவில்
» சந்தைக்கடை மாரியம்மன் கோவில்
» சீதளாதேவி மகா மாரியம்மன் கோவில்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum