சம்மர் ஹேர்ஸ்டைல்!
Page 1 of 1
சம்மர் ஹேர்ஸ்டைல்!
சம்பிரதாயங்கள் கடைப்பிடிக்கப்படுவதில் தவறில்லை. அது வும் அந்த சம்பிரதாயம் சிகை அலங்கார மாக இருந்தால் கவலையே இல்லை. ஆண்டு தோறும் கோடைக்காலம் வருகிறதோ இல்லையோ, வெயில் காலத்துக்கு ஏற்ற ஹேர்ஸ்டைல் கண்டிப்பாக நம்மூரில் அறிமுகமாகிவிடும். அந்த அறிமுகமும் உலகம் தழுவியதாக இருக்கும் என்பதுதான் ப்ளஸ். ஆமாம்,லேட்டாக அல்ல... லேட்டஸ்ட்
டாக உலக டிரெண்ட் நம்மூரில் கால்பதித்துவிடும்.வியர்வையிலிருந்து தப்பிக்கும் அதேநேரம் அழகாகவும் காட்சிதர வேண்டும் என்பது பெண்களின் எதிர்பார்ப்பு. இந்தாண்டும் அந்த ஆசை பூர்த்தியாகும் என்கிறார் பிரபல சிகை அலங்கார நிபுணர் நஜீப்.
‘‘இந்த வருடம் இரண்டுவிதமான ஹேர்ஸ்டைல்கள் பாப்புலர் ஆகும். பெமினைன் மற்றும் காஷுவல். பெமினைனில் பூதுவார், பங் காடெஸ் மற்றும் நியூ ரெபல் என மூன்று விதம். இதில் பூதுவாரில் முடி நீளமாகவும், துள்ளிக் குதிப்பது போலவும் பளிச்சென்று இருக்கும். நியூ
ரெபல், இந்திய பெண்களுக்கு ஏற்ற ஹேர் ஸ்டைல். முடியின் நீளத்தைக் குறைக்காமல் அழகுபடுத்த முடியும். பங் காடெஸ் என்பது
பெமினைன் மற்றும் காஷுவல் இரண்டின் கலவை. இதில், முடி நீளமாகவும் அதே சமயம் கொஞ்சம் வித்தியாசமாகவும் இருக்கும்.
குட்டை அல்லது பாப் ஹேர்ஸ்டைலையே காஷுவல் என்று சொல்லலாம்.இதில் சைபர் ஸ்போர்ட், யூனிபார்ம் என இரண்டு வகை இருக்கிறது. தோள்பட்டை யில் முடியைத் தவழ விடும் பாப் ஸ்டைலையே சைபர் ஸ்போர்ட் என்கிறோம். அதாவது முடியை ஒட்ட வெட்டாமல் கொஞ்சம் பறக்க விடுவது. ஆனால் யூனிபார்ம் என்கிற ஹேர்ஸ்டைல், கழுத்துக்கு மேல் ஒட்ட ஒட்ட வெட்டப்படுவது. ஆண்கள் வெயில் காலத்தில் கழுத்தின் பின்பகுதியில் நன்கு வழித்து எடுத்திருப்பார்கள். அதே போல் பெண்களுக்கான ஹேர்ஸ்டைல்தான் யூனிபார்ம். காஷுவல் மற்றும் பெமினைன் இரண்டுக்கும் நெற்றி மேல் பிரிஞ்ச் இருக்கும். அதாவது நெற்றி பகுதியில் புருவத்துக்கு மேல் வரை முடிகளை வெட்டி விடுவது. இது அவரவர் முகத்துக்கு ஏற்ப மாறுபடும்.ஹேர்ஸ்டைல் ஒரு பக்கம் என்றால் முடிக்கு சாயம் பூசுவது மறுபக்கம். ஹேர்கலரிங்கும் சீசனுக்கு ஏற்பமாறும். நியான், வயலெட், சிவப்பு, க்ரே, நீலம் மற்றும் பச்சை போன்ற நிறங்கள் ஆல்டைம் ஃபேஷன். நம்மூர் பெண்களுக்கு இந்த நிறங்களை அடர்த்தியாகப் பூசினால் எடுபடாது. காரணம், முடியின் நிறம் அவரவர் சருமத்தின் நிறத்துக்கு ஏற்ப அமைய வேண்டும். அப்போதுதான் அது அவர்களை எடுப்பாகக் காட்டும்.எனவே அவரவர் தேர்ந்தெடுக்கும் ஹேர்கலரிங்குக்கான நிறங்களை சாம்பல் நிறத்துடன் சேர்த்துப் போடுவதே நல்லது. அப்போதுதான் அவ்வளவு அடர்த்தியாகத் தெரியாது. பர்கண்டி, பேஜ்,பிரவுன் போன்ற நிறங்களும் இந்திய பெண்களுக்கு சூட்டாகும்.தலைமுடியை அழகாக மாற்றினால் மட்டும் போதாது, அதற்கு ஏற்ப பராமரிக்கவும் வேண்டும். வெயிலில் செல்லும்போது
சூரியனில் இருந்து வெளியாகும் அல்ட்ரா வயலெட் கதிர்கள் முடியை சொரசொரப்பாக்கும். அதைத் தடுக்க, முடிகளுக்கு பயன்படுத்தக் கூடிய சன் ஸ்கிரீனை உபயோகப்படுத்தலாம். இது முடிக்கு தேவையான புரதச் சத்தை தருவதுடன், சூரிய ஒளியிலிருந்தும் பாதுகாக்கும்.
முடிக்கு கலரிங் செய்திருந்தால் கண்டிஷனர் பயன்படுத்துவது நல்லது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» முடிக்கு ஏற்ற ஹேர்ஸ்டைல் போடலாமே...
» தல’ தோணியின் எந்த 'ஹேர்ஸ்டைல்' உங்களுக்குப் பிடிக்கும்?
» சேட்டையின் சம்மர் சால்ட்
» ஆயில் ஃப்ரி சம்மர் கர்ரி
» சம்மர் ஹாலிடேக்கு தள்ளிப் போகும் சேட்டை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum