பாலக், பச்சை பட்டாணி ஸ்டஃப்டு பூரி
Page 1 of 1
பாலக், பச்சை பட்டாணி ஸ்டஃப்டு பூரி
மேல் மாவுக்கு...
கோதுமை மாவு & 1 கப், மைதா மாவு & 1 கப், தண்ணீர் & தேவையான அளவு, எண்ணெய் & 2 டீ ஸ்பூன், உப்பு & தேவைக்கேற்ப.
ஸ்டஃப்பிங் செய்ய...
வேகவைத்து மசித்த பச்சை பட்டாணி & 1 கப், சீரகம் & அரை டீ ஸ்பூன், மிளகாய்த்தூள் & டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் & டீஸ்பூன், துருவிய இஞ்சி & டீஸ்பூன், உப்பு & தேவையான அளவு, சர்க்கரை & ஒரு சிட்டிகை, பூரி பொரிப்பதற்கு தேவையான எண்ணெய்.
பாலக் (கீரை), பச்சை மிளகாய் இரண்டையும் நன்றாகக் கழுவி தேவையான அளவு தண்ணீரை கொதிக்க வைத்து அதில் ஐந்து நிமிடங்கள் போட்டெடுத்து, உடனே ஐஸ் வாட்டர் அல்லது குளிர்ந்த தண்ணீரில் அலசி விழுதாக அரைக்கவும். இப்படிச் செய்தால் பச்சைநிறம் அப்படியே இருக்கும்.
இத்துடன் கோதுமை மாவு, மைதா மாவு மற்றும் மேல் மாவிற்கு வேண்டியவைகளை சேர்த்து பூரி மாவு பதத்திற்கு பிசைந்து அரைமணி நேரம் வைக்கவும்.
ஸ்டஃப்பிங்கிற்கு தேவையானவற்றை நன்றாக கலந்து வைத்துக்கொண்டு மேல் பூரி மாவிலிருந்து ஒரு எலுமிச்சம்பழம் அளவு எடுத்து செப்பு போல் செய்து உள்ளே பட்டாணி மசாலாவை வைத்து உருட்டி பூரி கல்லில் தேய்த்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
கட்டி தயிர் அல்லது சாஸ் உடன் பரிமாறவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum