தஹி கோஃப்தா
Page 1 of 1
தஹி கோஃப்தா
கோஃப்தாவுக்கு:
உருளைக் கிழங்கு - 2,
கேரட் - 1,
வெங்காயம் - 1,
பச்சை மிளகாய் - 2,
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப,
எலுமிச்சை சாறு - கால் டீஸ்பூன்,
கரம் மசாலா - கால் டீஸ்பூன்,
எண்ணெய் - தேவைக்கேற்ப.
தஹி கலவைக்கு:
தயிர் - 2 கப்,
உப்பு - சிறிது,
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை,
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - சிறிது.
உருளை, கேரட்டை வேக வைத்து மசிக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, உருளை, கேரட் சேர்த்து, மஞ்சள் தூள், பெருங்காயம், உப்பு சேர்த்து நன்கு வதக்கியெடுக்கவும்.
இறக்கியதும், கரம் மசாலாவும், எலுமிச்சை சாறும் சேர்த்துப் பிசைந்து, சின்னச் சின்ன உருண்டைகளாக ஆவியில் வேக வைத்தோ, எண்ணெயில் பொரித்தோ எடுக்கவும். தயிரில் உப்பு, பெருங்காயம் சேர்த்து நன்கு அடிக்கவும்.
உருண்டைகளை தயிர் கலவையில் போடவும். பொரித்திருந்தால், டிஷ்யூ பேப்பரில் ஒற்றியெடுத்து, தயிரில் போட்டு, கொத்தமல்லி தூவிப் பரிமாறவும்.
மாலை நேர பார்ட்டிக்கு தஹி கோஃப்தா சாப்பிடலாம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum