அரிசி அல்வா
Page 1 of 1
அரிசி அல்வா
பச்சரிசி - அரைக்கிலோ
வெல்லம் - 2கிலோ
தேங்காய் எண்ணெய் - முக்கால் லிட்டர்
டால்டா - 150 கிராம்
நெய் - 150 கிராம்
தேங்காய் - 1
முந்திரி - 25 கிராம்
ஏலக்காய் - தேவையான அளவு
அரிசியை ஊறவைத்து அரைத்துக் கொள்ளுங்கள். தேங்காயை துருவி பால் எடுங்கள். வெல்லத்தைப் பாகு காய்ச்சுங்கள்.
மிதமான தீயில் அகன்ற பாத்திரத்தை வைத்து, டால்டாவை ஊற்றி, அதில் வெல்லப் பாகை ஊற்றி மிதமான தீயில் வையுங்கள். பாகு வற்றி வரும்போது அரிசிமாவையும், தேங்காய் பாலையும் போட்டு அடிப்பிடிக்காமல் கிளறுங்கள்.
அனைத்தும் கலந்து திரண்டு வரும்போது தேங்காய் எண்ணெயை ஊற்றி கிளறுங்கள். கையில் ஒட்டாத பதத்துக்கு வந்ததும் நெய்யை ஊற்றி ஏலக்காயைப் பொடித்துப் போட்டு இறக்கினால், கமகமக்கும் அரிசி அல்வா ரெடி.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum