சேனைக்கிழங்கு வெள்ளைப்பூசணி கூட்டு
Page 1 of 1
சேனைக்கிழங்கு வெள்ளைப்பூசணி கூட்டு
என்னென்ன தேவை?
கடலைப் பருப்பு - 200 கிராம்,
சேனைக் கிழங்கு - 150 கிராம்,
வெள்ளைப் பூசணி - 150 கிராம்,
காய்ந்த மிளகாய் - 4,
தேங்காய் - 1 மூடி,
மிளகாய் தூள் - அரை டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப,
எண்ணெய் - சிறிது,
வெல்லம் - சிறிய துண்டு.
தாளிக்க:
கடுகு, உளுந்து, கறிவேப்பிலை.
எப்படிச் செய்வது?
சேனை, பூசணிக்காயை தோல் சீவி, சுத்தப்படுத்தி, சின்னத் துண்டுகளாக நறுக்கவும். கடலைப் பருப்பைக் களைந்து, கழுவி, சுத்தம் செய்து, மஞ்சள் தூள் சேர்த்து, சேனை, பூசணியுடன் வேக வைக்கவும். பாதி வெந்ததும், மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்க்கவும். தேங்காய் மூடியில் பாதியைத் துருவி, மிளகாயுடன் சேர்த்து நைசாக அரைத்து, பருப்பு, காய்கறிக் கலவையில் கொட்டிக் கொதிக்கவிட்டு, கெட்டியானதும் இறக்கவும். மீதி தேங்காயைத் துருவி, பொன்னிறமாக வறுக்கவும். சிறிது எண்ணெயில் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைச் சேர்த்து, தேங்காய்த் துருவலும் சேர்த்து, கூட்டில் கொட்டிக் கிளறவும். சிறிது வெல்லம் சேர்க்கவும். விருப்பமானவர்கள் தாளிக்க தேங்காய் எண்ணெய் உபயோகிக்கலாம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» வெள்ளைப்பூசணி சாலட்
» சேனைக்கிழங்கு பொறியல்
» சேனைக்கிழங்கு குருமா
» சேனைக்கிழங்கு பொரியல்
» கத்திரிக்காய்புளிக் கூட்டு
» சேனைக்கிழங்கு பொறியல்
» சேனைக்கிழங்கு குருமா
» சேனைக்கிழங்கு பொரியல்
» கத்திரிக்காய்புளிக் கூட்டு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum