இது சேலம் ஸ்பெஷல் தட்டுவடை செட்
Page 1 of 1
இது சேலம் ஸ்பெஷல் தட்டுவடை செட்
சேலத்து மாம்பழத்தை சிலாகித்துப் பேசும் பலருக்கு தட்டுவடை செட்டு பற்றி தெரியாது. வேறெங்குமே
சுவைக்க கிடைக்காத வித்தியாசமான தட்டுவடை செட்டை இங்கு சாப்பிடுபவர்கள் மந்திரித்து
விட்டது போல தினமும் தள்ளுவண்டிக்காரர்களை எதிர்பார்த்து காத்திருக்க நேரிடும். மசாலா
வாசனைதான் அவைகளின் அடையாளம்.
ஒரு தட்டுவடையை சட்னியில் தோய்த்து, மேலே காள்கறித் துரு
வலை அள்ளிவைத்து, அதன்மேல் சட்னி வைத்து, மேலே ஒரு தட்டுவடையால் மூடி தருகிறார்கள்.
புழுங்கல் அரிசியை 4 மணி நேரம் ஊறவைத்து, நிறைய நீரூற்றாமல் கெட்டியாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
1 கிலோ அரிசிக்கு 200 கிராம் என்ற கணக்கில் பொட்டுக்கடலையை மிக்சியில் மிகச்சிறிதாகப் பொடித்து, அரிசி
மாவில் கலந்து பிசைய வேண்டும். லேசாக எண்ணெய்விட்டு பிசைந்தால் உருட்ட எளிதாக இருக்கும்.
தேவையான உப்பு சேர்த்து கோலிக்குண்டு அளவுக்கு உருண்டையாக தட்டுவடை செட் உருட்டி, ஒரு
வெள்ளைத்துணியில் வைத்து, லேசாக உருண்டையின் தலையில் தட்டி தட்டையாக்க வேண்டும்.
மாவின் நீர்த்தன்மை போவதற்காக 1 மணி நேரம் அப்படியே உலர்த்த வேண்டும். பிறகு நீர் வடிந்த தட்டையை எண்ணெயில் பொரித்தால் தட்டுவடை ரெடி. ஈஸ்வரன் கோயில் அருகில் 30, 40 டப்பாக்களை விரித்து வைத்து வியாபாரம் செய்யும் பாலகிருஷ்ணன், 30 வகையான சட்னிகள் வைத்திருக்கிறார். இஞ்சி, பூண்டு, மிளகாய், வெங்காயம், புளியோதரை, புளிச்சக்கீரை, முட்டைகோஸ், தக்காளி என விரும்பும் சுவைகளில் சட்னியை தோய்த்துத் தருகிறார். மாலை 4 மணிமுதல் இரவு 9 மணி வரை தட்டுவடை செட் கிடைக்கிறது. 200க்கும் மேற்பட்டவர்கள் இந்த தொழில் செய்தாலும், ஒவ்வொருவரும் சுவையில் வித்தியாசம் காட்டுகிறார்கள்.
பாலகிருஷ்ணன் 28 வருட அனுபவம் மிக்கவர். டிவிஎஸ் 50 வைத்து வியாபாரம் செய்வதும் இவர் ஒருவர்தான். ‘ஸ்ரீரமாசக்தி கரம்மசால் பொரி’ என்ற சிறிய பெயர் பலகை இவரது வண்டியை அடையாளப்படுத்துகிறது.கல்யாணம் போன்ற விழாக்களுக்குக் கூட தட்டுவடை செட் செய்து கொடுக்கிறார்.
40 வருடத்துக்கு முன்னால் அரிசிமுறுக்கு வியாபாரம் செய்த ஒருவர்தான் இந்த தட்டு வடையை சேலத்துக்கு அறிமுகம் செய்ததாகச் சொல்கிறார் பாலகிருஷ்ணன். காலப்போக்கில் உணவுத்தேடல் விரிய...மசாலா, காய்கறிகள் என சேர்மானம் கூடியதாம். ஒரு ரூபாய் வடிவில் இருக்கிற தட்டுவடை செட் 1.50 பைசா. ஒரே வாயில் உள்ளே போனாலும் அடுத்த பத்து நிமிடங்களுக்கு நாக்கில் நிற்கிறது சுவை.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சினிமா ‘செட்’ டால் பரபரப்பு
» சேட்டைக்காக சென்னையில் மும்பை செட்
» எந்த நடிகரையும் செட் பண்ணவில்லை- அசின்
» ராசு.மதுரவன் இயக்கும் மைக் செட் பாண்டி
» MP3 பிளேயரை ஹெட் செட் மாட்டி கேட்டு வருபவர்களுக்கு மிக இளம் வயதிலேயே செவிட்டுத்தன்மை அபாயம்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum