16 பேறுகள்
Page 1 of 1
16 பேறுகள்
நந்திதேவர் சிவபெருமானிடம் பதினாறு பேறுகளை வரமாகக் கேட்டார். சிவபெருமானும் அப்பதினாறு பேறுகளையும் நந்திதேவருக்கு வழங்கினார். அவை:-
1. வேதங்களையும் சைவத்தையும் நிந்தனை செய்வதைப் பொறாத மனம்.
2. ஐம்புலன்களுக்கு அடிமையாகி அவற்றிற்காகப் பணி செய்யாத நிலை.
3. பிறவி என்பது தீதென்று கருதி உலக சுகத்தைப் பெரிதென்று கருதும் பேதையரை விலகி நிற்கும் உறுதி.
4. நல்லறங்களைச் செய்தவர்களுடன் உறவு.
5. நல்லவர்கள் யாது கேட்கினும் உதவி செய்கின்ற இயல்பு.
6. அருந்தவம் செய்தோரை வணங்கிடும் பண்பு.
7. நல்ல உபதேசங்களை ஏற்றுக் கொள்ளும் தன்மை.
8. அன்பர்கள் தீது செய்தாலும் அவற்றை சிவச் செயல் என ஏற்கும் தெளிவு.
9. மனமும் வாக்கும் அன்பர்பால் ஒருமைப்படும் செயல்.
10. கனவிலும் சிவனடியார்க்கு அடிமையாதல்.
11. சிவபெருமானைத் தவிர வேறுயாரையும் கடவுளாக வழிபடா நிலை.
12. சிவபெருமானின் புகழை நாள்தோறும் உரைத்திடும் பொலிவு.
13. பிற சமயங்களை விட்டு விலகி நிற்கும் ஆற்றல்.
14. பிறர் பொருள்மீது ஆசை ஏற்படாமை.
15. நன் நோன்புகளை நோற்றிருத்தல்.
16. யான் எனது என்னும் செருக்கும் சுயநலமும் இல்லாமை.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» 15 பேறுகள்
» 16 பேறுகள்
» 15 பேறுகள்
» லட்சுமியை வழிபடுபவர்களுக்கு கிடைக்கும் 16 பேறுகள்
» லட்சுமியை வழிபடுபவர்களுக்கு கிடைக்கும் 16 பேறுகள்
» 16 பேறுகள்
» 15 பேறுகள்
» லட்சுமியை வழிபடுபவர்களுக்கு கிடைக்கும் 16 பேறுகள்
» லட்சுமியை வழிபடுபவர்களுக்கு கிடைக்கும் 16 பேறுகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum