தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஒரு ஆணுக்கோ பெண்ணுக்கோ அழகை விட எது முக்கியம்? – ஆளுமை முன்னேற்றத் தொடர் –

Go down

ஒரு ஆணுக்கோ பெண்ணுக்கோ அழகை விட எது முக்கியம்? – ஆளுமை முன்னேற்றத் தொடர் –  Empty ஒரு ஆணுக்கோ பெண்ணுக்கோ அழகை விட எது முக்கியம்? – ஆளுமை முன்னேற்றத் தொடர் –

Post  amma Mon Feb 18, 2013 1:03 pm

பர்சனாலிட்டி அதாவது ஆளுமையோட மிக மிக முக்கிய அம்சம்… தன்னம்பிக்கை. எதிலும் விடாமுயற்சியுடன் செயல்களை செய்வது. ஒரு ஆணோ அல்லது பெண்ணோ என்ன தான் அழகா இருந்தாலும் அவங்க கிட்டே தன்னம்பிக்கை இல்லேன்னா.. அந்த அழகு வெளியே வரவே வராது. அதே சமயம் சுமாரான தோற்றம் உடைய (அப்படி அவங்களை நினைச்சுகிட்டுருக்கிற) ஆணோ அல்லது ஒரு பெண்ணோ கொஞ்சம் தன்னம்பிக்கையோட இருந்தாக் கூட போதும் அவங்க கிட்டே ஒரு தனி அழகு வந்துடும்.

எனவே ஆளுமையை – பர்சனாலிட்டியை – வளர்த்துக்கணும்னு நினைக்கிறவங்க… எதிலும் விடாமுயற்சியோட தன்னம்பிக்கையா இருக்கணும். THAT IS THE BIGGEST ASSET.

இந்த பகுதியில தன்னம்பிக்கையோட அவசியத்தை முதல்ல பார்ப்போம். அப்புறம் அதை வளர்த்துக்கொள்வது பற்றி பார்ப்போம்.

வெற்றி வேண்டுமா போட்டு பாரடா எதிர் நீச்சல்

டூ-வீலரோ காரோ ஓட்ட கத்துக்க முடியலியேன்னு யாராவது அதை வாங்குறதை விட்டுட்டதை நீங்க கேள்விப்பட்டுருக்கீங்களா? ஆரம்பத்துல ரெண்டு மூணு தரம் ஓட்ட முயற்சி பண்ணிட்டு, அட இது நமக்கு வரவே வராதுப்பான்னு அதை கத்துக்காம விட்டவங்களை நீங்க பார்த்திருக்கீங்களா? நிச்சயம் அப்படி யாரும் இருக்கவே முடியாது. கரெக்ட்டா….? வண்டி ஓட்ட கத்துக்க ஆசைப்பட்டு அதை கத்துக்க ஆரம்பிச்சு, கடைசீல பிரமாதமா வண்டி ஓட்டுற கலையை எல்லாரும் சுலபமா கத்துக்குறாங்க. எல்லாருமே டிரைவிங்கில் எக்ஸ்பர்ட் ஆயிட முடியாதுன்னாலும் ஓரளவு ஓட்ட கத்துகிடுறாங்க. லைசென்சும் எடுத்துடுறாங்க.

இதுல மட்டும் நம்ம முயற்சிகள் ஆரம்பத்துல தோத்தாலும் பிறகு ஜெயிச்சிடுறோம். ஏன் இது நம்மோட மற்ற லட்சியங்கள்ல முடிய மாட்டேங்குது, அப்ளை ஆகமாட்டேங்குதுன்னு என்னைக்காவது யோசிச்சு பார்த்திருக்கீங்களா?

இதுக்கு விடை ரொம்ப சுலபம் :

நாம நிச்சயம் நாம விரும்புற அந்த டூ-வீலரையோ காரையோ எப்படியாவது ஓட்டிடுவோம் என்பது உங்களுக்கு நல்லா தெரியும். ஆரம்பத்துல அதுல தோத்தாலும் நம்மை சுத்தி இருக்கிறவங்க அனாயசமா அன்றாடம் இந்த முயற்சிகள்ல ஜெயிக்கிறதை கண்கூடா பார்க்குறோம். அப்போ நமக்கும் “இதொண்ணும் பிரமாதம் இல்லை. ரொம்ப ஈஸி தான்” அப்படின்னு நம்பிக்கை வருது. அந்தம் நம்பிக்கை நம்மளையும் ஜெயிக்க வைக்குது.

பல வருஷங்களுக்கு முன்னால வேலைக்கு போக ஆரம்பிச்ச காலத்துல பஸ்ல தான் நான் ஆஃபீஸ் போய்கிட்டுருந்தேன். அப்படி போகும்போது 100CC பைக்ல போறவங்களை எல்லாம் ஒரு மாதிரி பொறாமையா ஏக்கத்தோட பார்ப்பேன். காரணம் அப்போ எனக்கு கியர் வண்டி ஓட்ட தெரியாது. அவங்க கால்ல அசால்ட்டா கியரை மாத்தி மாத்தி வண்டி ஓட்டுறதையே ஏதோ அதிசயமா பார்ப்பேன். எவ்ளோ கஷ்டமான வேலையை அசால்ட்டா செய்றாங்களே இவங்கன்னு தோணும். அடுத்த நொடியே நாமோ எப்போ வண்டி வாங்கி இந்த மாதிரி ஓட்டுவோம் அப்படின்னு ஏக்கம் வந்துடும். நிறைய பேர் ஓட்டுறதுனால, இவங்கல்லாம் ஓட்டும்போது நாம மட்டும் கத்துகிட்டு ஓட்டமுடியாதான்னு ஒரு சின்ன நம்பிக்கை வரும்.

‘ஆசை இருக்கு அலட்டிக்க.. அதிர்ஷ்டம் இருக்கு கழுதை மேய்க்க’ என்கிற கதையா கியர் வண்டி ஓட்ட ஆசைப்பட்டாலும் கியர் வண்டி வாங்குற அளவுக்கு அப்போ வசதியோ வருமானமோ இல்லே. கஷ்டப்பட்டு ஆபீஸ்ல ஒரு லோனை போட்டு செகண்ட் ஹாண்ட்ல ஒரு டி.வி.எஸ் சாம்ப் வாங்கினேன். அது தான் நான் முதல்ல வாங்கின வண்டி. சிட்டில அதை ஒட்டி ஓரளவு பழகிக்கிட்டேன். அப்பப்போ எங்க பாஸோட பைக்கை அவருக்கே தெரியாம எடுத்து ரவுண்ட் அடிச்சி கொஞ்சம் கொஞ்சமா கியர் வண்டி ஓட்ட கத்துகிட்டேன். ஓரளவு ஓட்ட கத்துகிட்ட பிறகு, தைரியமா மவுண்ட் ரோடுக்கே ஒரு நாள் ஓட்டிட்டு போனேன். ரெண்டு மூணு தரம் போன பிறகு அப்புறம் தைரியம் வந்துடுச்சு. லைசென்ஸ் எடுத்தேன். அப்புறம் என்னோட முதல் 100 CC பைக் வாங்கினேன். சிட்டில ஒரு இடம் பாக்கி விடாம சுத்தினேன் (?!).

இதெல்லாம் எதுக்கு சொல்றேன்னா…. 100CC பைக்கை ஒட்டுறதையே ஏதோ பெரிய விஷயமா பார்த்தவன், அதை ஓட்ட கத்துகிட்டு பைக்கும் வாங்கினேன்னா காரணம் ‘இந்த விஷயம் அன்றாடம் எல்லாரும் செய்றது. ஏன் நம்மால மட்டும் முடியாதா?’ன்னு யோசிச்சது தான். ஒரு பைக் ஒட்டுறதுக்கே இது அப்ளை ஆகும்போது ஏன் மத்த விஷயத்துக்கும் இது அப்ளை ஆகாது?

நீங்க முதல்ல உங்களை நம்புங்க – அப்புறம் உலகம் உங்களை நம்பும்

எப்படி வாழனும்னு ஆசைப்படுறாங்களோ அப்படி வாழுறதுக்கு பல பேர் தவறிடுறாங்க. அவங்களோட பயணத்துல ஒரு சின்ன தடங்கல் வந்தாலே விரக்தியடைஞ்சி அவங்களோட குறிக்கோளையும் இலட்சியத்தையும் தூக்கி எறிஞ்சிடுறாங்க. இதுக்கு அடிப்படையா காரணம் என்னன்னு பார்த்தீங்கன்னா.. அவங்க மேல அவங்களுக்கு நம்பிக்கை இல்லாதது தான்.

நம்ம மேல நாம நம்பிக்கை வைக்கிறது – அதாவது சுருக்கமா தன்னம்பிக்கை – அப்படின்னா என்னன்னா உங்களுக்கு எதிரா யார் செயல்பட்டாலும் யார் உங்க குறிக்கோளுக்கு எதிரா இருந்தாலும் நீங்க என்ன செய்ய விரும்புறீங்களோ, என்ன அடைய விரும்புறீங்களோ அதை அடைஞ்சே தீர்றதுங்கிற வைராக்கியம். அது தான் தன்னம்பிக்கை. மத்தவங்க செய்ய நினைச்சு தோத்துப் போன ஒரு மிக பெரிய லட்சியத்தை நீங்க கையிலெடுத்து செஞ்சி காட்டுறேன்னு களம் இறங்கும்போது அது முடியாம போனவங்க உங்களை பிடிச்சு இழுக்கத் தான் செய்வாங்க. அது உலக இயல்பு. அதுக்காக நாம அசரக் கூடாது.

மத்தவங்க செய்ய நினைச்சு தோத்துப் போன ஒரு மிக பெரிய லட்சியத்தை நீங்க கையிலெடுத்து செஞ்சி காட்டுறேன்னு களம் இறங்கும்போது அது முடியாம போனவங்க உங்களை பிடிச்சு இழுக்கத் தான் செய்வாங்க. அது உலக இயல்பு. அதுக்காக நாம அசரக் கூடாது.

தவிர, பெரும்பாலானோர் தன் மேல வர்ற விமர்சனங்களை பார்த்துட்டு, நாம போற பாதை சரி தானா? நம்மால முடியுமா? உண்மையிலயே நமக்கு அந்த சக்தி இருக்கானெல்லாம் ஒரு அவநம்பிக்கை வந்துடும். கடைசீயில லட்சியத்தை விட்டுடுவாங்க. வெகு சிலர் தான் தங்கள் மீதும் தங்கள் திறமை மீதும் நம்பிக்கை கொண்டு, தாங்கள் தேர்ந்தெடுத்த பாதையில வெற்றிகரமா நடைபோட்டு கடைசியில சிகரத்தை எட்டுவாங்க.

நம்மளை சுத்திலும் தன்னம்பிக்கைக்கு உதாரணமா ஆண்டவன் பல விஷயங்களை வெச்சிருக்கான் படைச்சிருக்கான். பாறையில் வேர் விடும் செடிகளும் அதில் ஒன்று. செடிகளின் வேர்கள் சாதாரண பூமியில தரையில மண்ணை ஊடுருவி போறதே கூட ஆச்சரியம் தான். இத்தனைக்கும் வேரின் நுனி என்பது கடினமான ஒன்றல்ல… மிக மிக மெல்லிய ஒன்று தான். அதுவே ஒரு அதிசயம் தான். அப்படி இருக்கும்போது பாறையில் முளைக்கும் செடியோட அந்த தன்னம்பிக்கையை என்னனுங்க சொல்றது? (அறிவியல் படி அதுவும் ஒரு உயிர் தானே!)

வாழ்க்கையில ஜெயிக்கணும்னு ஆசைப்படுறவங்க.. நிச்சயம் தன்னம்பிக்கையோட இருக்கணும். விடாமுயற்சியை மூச்சா வெச்சுக்கணும். எது வந்தாலும் கலங்கக்கூடாது.

சொல்றது எல்லாம் ஈஸி பாஸ்… அனுபவிச்சாத் தானே தெரியும் அப்படின்னு சொல்றீங்களா?

கீழ் கண்ட நிஜ சம்பவத்தை படிங்க…
1010 வது கதவு

எல்லாரும் 30 வயசுக்குள்ளேயே அவங்கவங்க இலக்குகளை அடைஞ்சி செட்டிலாகிவிட துடிக்கிற இந்த காலத்துல தன்னுடைய 65 வது வயதில் தான் இவர் தன்னோட உண்மையான பயணத்தையே துவக்கினார். அவருக்கு கிடைச்ச ரிட்டயர்மெண்ட் தொகை எவ்ளோ தெரியுமா? $105. ரிட்டயர் ஆகுற ஆள் இதை வெச்சிகிட்டு இங்கேயே ஒன்னும் செய்ய முடியாது. அமெரிக்காவுல என்ன செய்ய முடியும்?

“விதி என்னை எமாத்திடிச்சு… அமெரிக்க அரசு எனக்கு துரோகம் பண்ணிடுச்சு…. என் புள்ளைங்க என்னை கண்டுக்கலை.. ” அப்படி இப்படின்னு புலம்பாம அவர் செஞ்சது என்ன தெரியுமா? தான் கண்டுபிடிச்ச ஒரு டேஸ்ட்டான சிக்கன் சூப்போட செய்முறையை ஓட்டல்களுக்கு கமிஷன் அடிப்படையில் விற்பதற்கான முயற்சிகள்ல இறங்கினார்.

“என்னோட சிக்கன் சூப் செய்முறையை உங்கள் ஓட்டல்களில் பின்பற்றினால் உங்க சேல்ஸ் அதிகரிக்கும். எனக்கு கமிஷன் மட்டும் கொடுத்தா போதும்”னு ஒரு ஆஃபரோட ஹோட்டல் ஹோட்டலா ஏறி இறங்கினார். சொல்லி வெச்ச மாதிரி அவருக்கு எல்லாம் ஒரே ஒரு வார்த்தை தான் பதிலா சொன்னாங்க. “No… Not interested”. ஆனா அவர் மனம் தளரலை. தன்னோட முயற்சியையும் கைவிடலை. கையில் அருமையான ஒரு ஃபார்முலா வெச்சிகிட்டு அமெரிக்கா முழுக்க ராப்பகலா பசி தூக்கம் துறந்து அலையோ அலைன்னு அலைஞ்சார். தன்னோட கார்ல தான் பல சமயம் தூங்குவார்.

1009 ஹோட்டல்கள் இப்படி நோ சொல்ல, 1010 வது கதவை அவர் தட்டும்போது தான் “Yes… come on” அப்படின்னு சொன்னாங்க.

இவர் வேற யாருமில்லே… இன்று உலகம் முழுதும் கிளைகளை கொண்டு புகழ் பெற்று விளங்கும் கே.எப்.சி. (KFC) நிறுவனத்தின் அதிபர் கர்னல் சாண்டர்ஸ். 1010 வது கதவை திறந்தது அதிர்ஷ்டமோ கடவுளோ அல்ல. அவரோட விடாமுயற்சியின் பலன்.

இதைத் தானேங்க வள்ளுவரும் சொல்றார்….

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர்.

விளக்கம் : ஊழ் (விதி) என்பது வெல்ல முடியாத ஒன்று என்பார்கள். சோர்வில்லாமல் முயற்சி மேற்கொள்பவர்கள் அந்த விதியையும் தோல்வி அடையச் செய்வார்கள்.

அப்புறம் என்ன? அடி தூள் கிளப்புங்க!
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum