தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

“அக்கா… அக்கா… எங்களுக்கெல்லாம் நீங்க தான் ரோல் மாடல்” – பிரேமாவை மொய்த்த பள்ளி மாணவிகள்!

Go down

 “அக்கா… அக்கா… எங்களுக்கெல்லாம் நீங்க தான் ரோல் மாடல்” – பிரேமாவை மொய்த்த பள்ளி மாணவிகள்! Empty “அக்கா… அக்கா… எங்களுக்கெல்லாம் நீங்க தான் ரோல் மாடல்” – பிரேமாவை மொய்த்த பள்ளி மாணவிகள்!

Post  amma Mon Feb 18, 2013 12:38 pm

சார்டட் அக்கவுண்டண்ட் தேர்வில் அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றிருக்கும் செல்வி.பிரேமாவின் சிறப்பு பேட்டியை நம் தளத்தில் நேற்று முன்தினம் வெளியிட்டது நினைவிருக்கலாம். வெற்றியாளர்களை பற்றி எத்தனை முறை படித்தால் என்ன? திகட்டவா போகிறது? அதுவும் வறுமையிலும் போராடி வெற்றி பெற்றுள்ள பிரேமாவின் சரித்திரத்தை திரும்ப திரும்ப படிக்கவேண்டும். நம்மை சார்ஜ் செய்துகொள்ளவேண்டும்.

கீழே காணும் செய்தியில் பிரேமாவின் தந்தை கூறியுள்ளதை படியுங்கள்.

//”எனக்கு இதைவிட வேறென்ன சார் வேண்டும். வாழ்க்கையில் நான் பட்ட கஷ்டங்களும், வேதனைகளும் மறைந்து விட்டது. விழுப்புரம் மாவட்டம் பெரிய கிள்ளியூரில் எனது மனைவி லிங்கம்மாள், மகள்கள் மகாலட்சுமி, பிரேமா, மகன் தன்ராஜ் ஆகியோருடன் விவசாயம் செய்து வந்தேன். 1990-ல் மழை இல்லை. தண்ணீர் இல்லை. விவசாயம் செய்ய முடியாததால் ஒருவேளை சோற்றுக்கு கூட வழியில்லாமல் தவித்தேன்”//

உழுது பிழைக்கும் வயலைக் காயவைத்ததோடு மட்டுமல்லாமல் வயிறையும் காயவைத்து ஒரு குடும்பத்தையே தமிழகத்தை விட்டு இறைவன் ஏன் விரட்டினான் என்பது இப்போது புரிந்திருக்குமே? ஆண்டவன் போடும் கணக்கு அது புரியுமா நமக்கு??

நம்மை பிற்காலத்தில் எங்கோ உயரத்தில் தூக்கி வைக்கவேண்டியே நமக்கு சோதனைகளை அவன் தருகிறான் என்பதற்கு பிரேமாவின் குடும்பத்தை தவிர நேரடி சாட்சி எவர் இருக்க முடியும்?

பிள்ளைகள் கல்லூரியில் படிக்க – ஆட்டோ ஓட்டும் தந்தை. எத்தனை எத்தனை அவமானங்களை அவர்கள் சொந்தங்களிடமிருந்து சந்தித்திருப்பார்கள்? எப்படியெல்லாம் புறக்கணிக்கப்பட்டிருப்பார்கள்? (ஆட்டோ ஓட்டும் தொழிலும் உயர்வானது தான். இருந்தாலும் அனுபவிச்சவங்களுக்கு தான் தெரியும் இந்த புறக்கணிப்போட வலி. அதற்காக சொல்கிறேன்.)

பிரேமா நம்மிடம் கூறியதைப் போல, அதே சொந்தங்கள் இன்று இவர்களை உரிமைகொண்டாடுகிறார்கள்.

நாமெல்லாம் ஒன்று ஆண்டவனை நொந்துகொள்கிறோம். அல்லது நம்பிக்கொண்டு சும்மா உட்கார்ந்திருக்கிறோம். ஆனால் பிரேமாவும் அவரது தம்பியும் தங்களது உழைப்பின் மூலமே தங்கள் குடும்பத்திற்கு ஏற்பட்ட அவமானத்தை துடைக்க முடியும் என்று கருதி உழைத்த உழைப்பின் பலனை தான் இன்று அனுபவிக்கிறார்கள்.

விதைத்தவன் உறங்கினாலும் ஏன் படைத்தவனே உறங்கினாலும் விதைகள் ஒரு போதும் உறங்குவதில்லை…. பிரேமாவின் வெற்றி சரித்திரம் சொல்வது அதைத் தான்!

இதை முழுவதும் படியுங்கள். பிரேமாவின் வெற்றியின் பெருமிதத்தை நீங்களும் உணருங்கள். உங்கள் இலக்குகளை குறிவையுங்கள். அதற்காக உழையுங்கள். வெற்றி ஒரு நாள் நம் காலடியில்!

இதை படிக்கும் பெற்றோர்கள் படிப்பதோடு மட்டுமல்லாமல் தங்கள் பிள்ளைகளுக்கும் படித்து காட்டவேண்டும்.

விதைத்தவன் உறங்கினாலும் ஏன் படைத்தவனே உறங்கினாலும் விதைகள் ஒரு போதும் உறங்குவதில்லை…. பிரேமாவின் வெற்றி சரித்திரம் சொல்வது அதைத் தான்!

சி.ஏ. தேர்வில் முதலிடம் பெற்றதாக அறிவிக்கப்பட்டதிலிருந்து பிரேமாவுக்கு அகில இந்திய அளவில் பரிசுகளும் பாராட்டுக்களும் குவிந்து வருகிறது. விழாக்களுக்கு தேதி கொடுக்க முடியாமல் திணறி வருகிறார். தி.மு.க தலைவர் முன்னாள் முதல்வர திரு.கருணாநிதி பிரேமாவுக்கு தி.மு.க. சார்பில் ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று அறிவித்தார். அடுத்த சில நாட்களில் தமிழக முதல்வர் செல்வி.ஜெயலலிதா தமிழக அரசு சார்பில் பிரேமாவுக்கு ரூ.10 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார்.

மத்திய புள்ளியியல் மற்றும் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் ஜி.கே வாசன் எண்ணூர் துறைமுகம் சார்பில் ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்று அறிவித்து அதற்கான விழாவையும் இன்று நடத்தியே விட்டார்.

இந்த விழாவில் கலந்துகொள்வதற்காக பிரேமா இன்று சென்னை வந்திருந்தார்.

அது குறித்து மாலைமலரில் வெளியான செய்தியை தருகிறேன். உங்களுக்காக தருவிக்கப்பட்ட பிரத்யேக படங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

நன்றி…!

———————————————————————————————————————-
“அக்கா… அக்கா… எங்களுக்கெல்லாம் நீங்கள்தான் ரோல் மாடல்”

கல்வி… நீடித்த புகழை தரும்! -குறைவில்லா செல்வம் தரும்! சென்ற இடமெல்லாம் சிறப்பை தரும்! இது தமிழ்ச் சான்றோர்கள் சொன்னவை. இதை பலர் அனுபவித்து உணர்ந்திருந்தாலும் 24 வயது நிரம்பிய சாதாரண தமிழ்ப்பெண் நிரூபித்துக் காட்டியதோடு இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்துள்ளார். பிரேமா… இவர்தான் இந்த சாதனைக்கு சொந்தக்காரர். பலர் படிக்க முடியாமல் திணறும் பட்டய கணக்காளர் (சி.ஏ.) தேர்வில் இந்திய அளவில் முதலிடத்தை பிடித்துள்ளார்.

சாதாரண ஆட்டோ டிரைவரின் மகள் என்ற முகவரியோடு இந்த சாதனையை எட்டிப்பிடித்த பிரேமாவை கற்ற சிறந்த கல்வியாளர்கள் கூட வியந்து பார்க்கிறார்கள். ஆண்டுக்கு 1 லட்சம் பேருக்கு மேல் சி.ஏ. தேர்வு எழுதுகிறார்கள். அவர்களில் 30 சதவீதம் பேர்தான் இறுதித் தேர்வுக்கு தகுதி பெறுகிறார்கள். இதில் சி.ஏ. பட்டதாரிகளாக வெளியே வருவது சுமார் 10 சதவீதம்தான். இதில் இருந்து இந்த படிப்பின் கடினத்தை ஓரளவு புரியலாம். இந்த கடினமான இலக்கைத்தான் தனது கடின உழைப்பின் மூலம் எட்டிப் பிடித்து சாதனை மங்கையாக உயர்ந்து நிற்கிறார் பிரேமா.

அவரது சாதனையை பாராட்டி எண்ணூர் துறைமுகம் சார்பில் ரூ. 5 லட்சம் ரொக்கப் பரிசு அறிவிக்கப்பட்டது. இதற்கான விழா சென்னை துறைமுகத்தில் இன்று நடந்தது. விழாவுக்கு தலைமை தாங்கி மத்திய மந்திரி ஜி.கே.வாசன் ரூ. 5 லட்சத்துக்கான காசோலையை வழங்கி பாராட்டினார். ஜி.கே.வாசன் பேசும் போது, இந்திய மாணவ- மாணவிகளுக்கெல்லாம் எடுத்துக் காட்டுதான் பிரேமா. இந்த வெற்றி சிகரத்தை எட்ட அவர்பட்ட கஷ்டங்களையும், எதிர் கொண்ட துன்பங்களையும் பார்க்கும்போது மெய்சிலிர்க்கிறது. கடின உழைப்பால் எதையும் சாதிக்கலாம் என்பதை இந்த தமிழ் மங்கை பிரேமா செய்து காட்டியுள்ளார். அவரது சாதனையை தேசமே நிமிர்ந்து பார்க்கிறது என்று பெருமையுடன் குறிப்பிட்டார்.

காசோலையுடன் காமராஜர் படத்தையும் சேர்த்து வழங்கிய ஜி.கே.வாசன் கல்விக் கண் திறந்த காமராஜர் கனவுகள் இன்று நனவாகிறது என்று உணர்ச்சி பொங்க தெரிவித்தார். விழாவில் பேசிய எண்ணூர் துறைமுக தலைவர் பாஸ்கராச்சார் கூறுகையில், நானும் ஒரு சி.ஏ. பட்டதாரிதான். ஆனால் அதை படிக்க உள்ள கஷ்டங்கள் எனக்கு புரியும். இந்த சின்னப் பொண்ணு செய்திருக்கும் பெரிய சாதனையை நினைத்து மகிழ்கிறேன் என்றார்.

மேடையை விட்டு கீழே இறங்கிய பிரேமாவை பள்ளி மாணவிகள் மொய்த்துக் கொண்டனர். அக்கா… அக்கா… என்று அன்புடன் அழைத்தபடி கைகுலுக்கி மகிழ்ந்தார்கள். எங்களுக்கெல்லாம் நீங்கள்தான் ரோல் மாடல். சாதிப்பதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று கேள்விகளால் துளைத்தெடுத்தார்கள். அவர்களுக்கெல்லாம் தனது ஆலோசனைகளை வழங்கி விட்டு மும்பைக்கு பறந்து செல்ல புறப்பட்ட பிரேமாவை பத்திரிகையாளர்கள் மொய்த்து அவர் கடந்து வந்த பாதைகளை கேட்டனர். அதற்கு பிரேமா கூறியதாவது:-

எனக்கு 2 வயது இருக்கும் போது பிழைப்பின்றி வசதி இல்லாமல் என் பெற்றோர் அக்கா, தம்பியுடன் மும்பைக்கு குடி பெயர்ந்திருக்கிறார்கள். என் தந்தை ஆட்டோ ஓட்டி வருகிறார். அதில் கிடைக்கும் வருமானத்தில் தான் எங்கள் குடும்பம் ஓடுகிறது. எனவே படிக்க வசதி இல்லாமல் மாநகராட்சி பள்ளியில் படித்தேன். அந்த பள்ளியில் கல்வி கட்டணம் இல்லாததால் எனது படிப்புக்கு எந்த தடங்கலும் இல்லை. கல்லூரியில் பி.காம் படித்தேன். அதற்கும் கட்டணம் குறைவு என்பதால் பிரச்சினை இல்லை. பி.காம் பட்டப் படிப்பில் மும்பை பல்கலைக்கழகத்தில் 2-ம் இடத்தை பிடித்தேன். சி.ஏ. பட்டப்படிப்பு படிக்க வேண்டும் என்ற ஆசை கல்லூரியில் படித்த போது ஏற்பட்டது. அந்த படிப்பு எவ்வளவு கஷ்டமாக இருக்கும் என்பதை எனது தோழிகள் தெரிவித்தனர்.

வாழ்க்கையை சவாலாக ஏற்று போராடி வரும் நான் இந்த கடினமான பாடத்தையும் போராடி படிக்க துணிந்து முடிவு செய்தேன். கடினமாக உழைத்தேன். எப்படியாவது நல்ல மதிப்பெண் எடுத்து வெற்றி பெறுவேன் என்று நம்பிக்கை இருந்தது. ஆனால் இந்தியாவிலேயே முதல் மாணவியாக வருவேன் என்று எதிர்பார்க்கவில்லை. நான் கஷ்டப்பட்டு படித்த தால் கிடைத்திருக்கும் கவுரவமும், புகழும் பெருமையாக இருக்கிறது.

மாணவர்களுக்கு நான் சொல்வதெல்லாம் நாம் என்னவென்று ஆகவேண்டும் என்று முதலில் முடிவு செய்யுங்கள். அதன்பிறகு அதற்காக கடுமையாக உழையுங்கள். கடுமையாக உழைத்தால் சாதனை சிகரம் நம் கையில் எட்டும். எனது இந்த அளப்பரிய வெற்றிக்கு ஆசிரியர்களும், பெற்றோர்களும் மிகப் பெரிய உறுதுணையாக இருந்தார்கள். அவர்களுக்கு இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மும்பை வீதிகளில் காக்கி சட்டை, காக்கி பேண்டுடன் ஆட்டோ ஓட்டி வரும் பிரேமாவின் தந்தை ஜெயக்குமார் அரசு செலவில் விமானத்தில் பறந்து வந்து மகளின் சாதனையால் கிடைத்த பாராட்டு மழையில் ஆனந்த கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தார். அவரிடம் கேட்டபோது பெருகி வந்த கண்ணீரை துடைத்துக் கொண்டே கூறியதாவது:-

“எனக்கு இதைவிட வேறென்ன சார் வேண்டும். வாழ்க்கையில் நான் பட்ட கஷ்டங்களும், வேதனைகளும் மறைந்து விட்டது. விழுப்புரம் மாவட்டம் பெரிய கிள்ளியூரில் எனது மனைவி லிங்கம்மாள், மகள்கள் மகாலட்சுமி, பிரேமா, மகன் தன்ராஜ் ஆகியோருடன் விவசாயம் செய்து வந்தேன். 1990-ல் மழை இல்லை. தண்ணீர் இல்லை. விவசாயம் செய்ய முடியாததால் ஒருவேளை சோற்றுக்கு கூட வழியில்லாமல் தவித்தேன்”
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum