தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பாவம் நீக்கி அருளும் பாடலீஸ்வரர்

Go down

பாவம் நீக்கி அருளும் பாடலீஸ்வரர் Empty பாவம் நீக்கி அருளும் பாடலீஸ்வரர்

Post  ishwarya Sat Feb 16, 2013 5:00 pm

ஒருமுறை கயிலாயத்தில் பார்வதி தேவியாரின் உள்ளத்தில், உலகில் சிவபெருமானின் க்ஷேத்திரங்கள் பலவற்றுள் மிகவும் போற்றுதற்குரியது எது? எ ன்ற கேள்வி எழுந்தது. அதற்கு தக்க பதிலை முழுமுதற் பொருளான அந்த சிவபெருமானிடமே கேட்பது என முடிவு செய்தார். சிவபெருமான், பக்தர்களின் குறைகளை போக்கியதால், மிகவும் களைப்புற்றவர்போல காணப்பட்டார். சிவனின் திருவிளையாட்டினை யார் அறிவார்! ‘‘களைப்பை நீங்க, சொக்கட்டான் விளையாடலாமே’’ என்று பார்வதி தேவியார் யோசனை சொல்ல, அவரது உள்ள கிடக்கையை அறிந்த கயிலை நாதர், ஒப்புக்கொண்டு, விளையாட்டில் ஈடுபட்டார். ஒவ்வொரு முறையும் பார்வதி தேவியே வெற்றி பெறச் செய்தார்.

வெற்றி களிப்பில் மகிழ்ந்த உமையவள், சிவபெருமானை பார்த்து, ‘‘இம்முறை கண்ணை மூடிக் கொள்ளுங்கள். நான், தங்களை சொக்கட்டான் போட்டியில் வெற்றி பெறும் முறையை உங்கள் காதில் சொல்கின்றேன்’’ என்றார். சிவபெருமான் மறுப்பு கூற, பார்வதி தேவியார், தனது பொற்கரங்களால் சிவபெருமானின் இரு கண்களை பொத்தினார். உடனே அண்ட சராசரங்களும் இருண்டன. படைக்கும் தொழில், சிவ நேத்திராடன பலமின்றி ஸ்தம்பித்தது. இந்திர லோகம், பிரம்ம லோகம், சதுர் லோகம் போன்ற முப்பத்திரண்டு உலகங்களும் இருண்டன. எல்லா உயிர்களும் நடுங்கின. ஏன், வெப்பம் துளியும் இல்லை.

விபரீதத்தை உணர்ந்த உமையவள், சிவபெருமானின் பாதங்களில் விழுந்து தன் தவறை மன்னிக்க பிரார்த்தித்து அழுதாள். சோகமே வடிவான அம்பி கையை, அக்கணம் ராகு-கேது கிரகங்களின் சக்தி பீடித்தமையே இச்செய்கைக்கு காரணம் என்பதனை உணர்ந்த கயிலைநாதன், அம்பிகையை, ‘‘பூலோகம் சென்று, சாதாரண பெண் வடிவு எடுத்து, விரதம் பூண்டு, எல்லா சிவ ஆலயங்களுக்கும் சென்று தொழுது வா. கடைசியில் நீ பாதிரிப்புலி நகர் உறை பாடலீசன் அம்பலத்தை எட்டுகையில், சாபமொடு பாவம் நீங்கி எமை வந்து அடைவாய்’’ என்றார்.

‘‘கத்தடைத்த கண்ணால் கருகி
காரிருள் அண்டமெலாஞ் சூழ
அயனுளிட்ட அருந் தவத்தோரும்
அஞ்சி அபயமே சிவ வென
ஓலமிட, கரமகற்றி திகைத்து
கல்லானால் கார்த்திகையானை
யீன்றாளே’’

-என்கிறார் அகத்தியர்.

நெற்றிக்கண் எப்போதும் மூடியே இருக்கும். மீதமுள்ள இரு கண்களையும் தன் கைகளால் அம்பிகையாம் - கார்த்திகேயன் என்ற முருகப் பிரானை ஈன்றவள் அடைக்க, அண்டமெல்லாம் இருட்டியது. இதைப் பார்த்த தேவர்கள் உள்ளிட்ட உயிர்கள் எல்லாம் சிவபெருமானை நோக்கி காக்க வேண்டு மென ஓலமிட்டனர்.

‘‘பூவுலகு க்ஷேத்திரமெலாந்த தொழுதபின்
பாதிரி விருட்சமடி யுறை யம்பலம்
அண்டித் தொழுது ஆக்கமெய்து வை
என்றார் திரிபுரம் எரித்தோன்.’’

பாதிரி மரம் என்பது இங்கு பிரதானம். இதுவே இந்தக் கோயிலின் தலவிருட்சம் ஆகும். இங்கு பாதிரி மரங்கள் அடர்ந்து நின்றமையால், சிவனுக்கு பாதிரி ஈசன் என்றும் பாடலீசன் என்றும் நாமம் விளங்கிற்று. இங்கு நோய்களை நீக்கும் சக்தி மிகுந்த தெய்வங்கள் பலர் வந்து தவம் செய்து வருகின்றனர். முனிவர்கள் தங்களுடைய தவவலிமையை விருத்தி செய்துகொள்ளவும் தங்களுடைய ஆக்ஞைகள் நிறைவேறவும் வேண்டி ஓடி வருவது இந்த அருந்தவ நாயகி சமேதரான திருப்பாடலீஸ்வரர் கோயிலையே.

‘‘மந்தனும் பாம்பிரண்டும் அண்டிய
பேரின் தீங்கறுக்கும் திவ்ய
க்ஷேத்திரமிப் பாடலீசனம்பல மன்றோ’’

-என்கிறார், அகத்தியர்.

பற்பல தலங்களில் சிவபெருமான் கோயில் கொண்டிருந்தாலும் பார்வதி பிராட்டியார் ஓராயிரத்து ஏழு சிவத் தலங்களில் மலர் சொரிந்து, விரதமேற்று, பூஜித்து வந்தும் தனது சாபம் தீராது வாடினார். ஆனால் திருபாதிரிப்புலியூர் உறை பாடலீசனார் கோயிலை ஆயிரத்து எட்டு என்று கடைசியாக வந்து அண்டினார். இதிலும் விமோசனம் இல்லை என்றால் அக்னியில் புகுந்து மாய்வது என்ற திடமான எண்ணத்துடன் இக்கோயிலுக்குள் அடி எடுத்து வைக்க, தேவர்கள் பூமாரி பொழிந்தனர். மங்கள இசை மீட்டனர். ராவணன் உள்ளிட்ட சிவகணங்கள் மகிழ்ச்சியுடன் துள்ளிக் குதித்து கொண்டாடினர் என்கிறார் சிவ வாக்யர். கொங்கணர் என்ற சித்தர் சிவனிடமிருந்து வைத்திய சாஸ்திரங்களை அறிந்துகொண்டதும், அருணகிரியார் ரசவாதம் என்ற வித்தையை கற்றுக் கொண்டதும் இந்த பாடலீசுவரர் அருளால்தான்.

இங்கு சிவபெருமான் அருள் கிடைத்தாருக்கு கண்ணும் தோளும் துடிக்கும் என்கிறார், கொங்கணச் சித்தர்.

‘‘விழியோடு தோளுந் துடித்தார்
அருள் பெற்றார் பொய்யில்லையே
புவியில் எதைத் தேடி என்ன
புண்ணியம்? பாடலீசனருள்
அல்லால் உய்வு யேதுயியம்பு.’’

என்பது அவர்தம் பாடல். திருஞானசம்பந்தர் சுவாமிகளுக்கும் அருணகிரியாருக்கும் பத்திரகிரியாருக்கும் திருநாவுக்கரசர் சுவாமிகளுக்கும் பிரத்யட்சமான பரிபூரணன் இவர். நாட்பட்ட வயிற்றுவலி, வெண்புள்ளிகள் உள்ளிட்ட தோல் நோய் களும், குளுகோமா போன்ற கண் நோய்களும் இங்கு பக்தியுடன் தங்கி ஆராதித்தால் தீரும் என்கிறார்கள் சித்தர்கள்.

‘‘மேனியை மூடி நிற்கும்
கவசத்திற்கு வந்த கேடு
விலகும் பாரு. கட்டியும்
முட்டியுமுருமே- கருமையும்
செம்மையும் ஒழியுமே யல்லால்
விழி வழி வந்த யெப் பீடியை
யும் நசுக்கி யொளி நல்குந்
நல்லோனிப் பாடலீசனே.’’

-இப்படி, இந்தக் கோயிலை தொழுதால் பெரும் நோய்கள் விலகும் என சித்தர்கள் சத்தியம் செய்கின்றனர். பக்தியுடன் நம்பிக்கையுடன் பிரதோஷ பூஜை புரிந்து பாடலீசனை சரணம் அடைந்து நாமும் பிறந்த பயனை அடைவோமே. இந்த ஆலயம், கடலூர் நகரத்தின் நடுவே உள்ளது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum