தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஜோடியா ஒரு ஜாலி ஒரு பயணம் போங்களேன்!

Go down

 ஜோடியா ஒரு ஜாலி ஒரு பயணம் போங்களேன்! Empty ஜோடியா ஒரு ஜாலி ஒரு பயணம் போங்களேன்!

Post  ishwarya Sat Feb 16, 2013 11:43 am

How to tell your fantasies to your partner
எவ்வளவு நாள்தான் ஆபிஸ், வேலை, வீடு என்று சுற்றி சுற்றி வருவது. போராடிக்கிற மாதிரி இருக்கா? நாலு நாளைக்கு ஜாலியா ஒரு டூர் கிளம்புங்களேன் என்கின்றனர் நிபுணர்கள். அலுவலக வேலையாக வெளியூர் போறீங்களா? பரவாயில்லை. உங்களின் துணையை அழைத்துச் செல்லுங்கள். போகும் வேலை எளிதில் முடியும் என்கின்றனர். வாழ்க்கையை சுவாரஸ்யமாக மாற்ற அனுபவசாலிகள் சொல்வதை கேளுங்களேன்.

அருகே இருந்தும் மவுன உரையாடல்!

வேலை, வேலை என்று சுற்றிக்கொண்டிருக்கும் போது கொஞ்சநேரமாவது நம் பக்கத்தில் அமர்ந்திருக்க மாட்டாரா என்று மனம் நினைக்கத்தோன்றும். அதே நேரத்தில் இருவர் மட்டும் தனித்திருக்கும் போது எதுவும் பேசத் தோன்றாது. அங்கே மவுனபாஷைதான். இருந்தாலும் பரவாயில்லை. ஒருவருக்கொருவர் கண்களால், மனதால் பேசிக்கொள்ளலாம். அருகே இருப்பதே மகிழ்ச்சியான விசயம்தானே. எனவே வார்த்தைகளைப் பற்றி கவலைப்படதேவையில்லை.

வெட்கத்தை விட்டுத்தள்ளுங்கள்

கூட்டுக்குடும்பத்தில் இருக்கும்போதுதான் அதிகம் வெட்கப்படவேண்டியிருக்கும். சத்தம் கேட்டுவிடுமோ, ஏதாவது தவறாக நினைத்து விடுவார்களோ என்ற அச்சம், கூச்சம் எல்லாம் இருக்கும். ஆனால் வெளியிடங்களில் இருவர் மட்டும் தனித்திருக்கும் போது அதைப்பற்றி கவலைப்படாதீர்கள். உங்கள் இஷ்டம்தான் சும்மா விளையாடலாம். என்ன வேண்டுமோ? எப்படி வேண்டுமே கேட்டுப்பெற்றுங்கொள்ளுங்கள். உங்களின் மகிழ்ச்சியை உற்சாகமாக வெளிப்படுத்துங்கள்.

சந்தேகத்தை தெளிவுபடுத்திக்கங்களேன்

உங்கள் துணைக்கு எங்கு தொட்டால் கூடுதல் உற்சாகம் என்பது பற்றி சந்தேகம் இருந்தால் அதை தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள். எந்த மாதிரியான உறவு பிடிக்கும் என்பது பற்றியும் ஒருவருக்கொருவர் பேசுங்கள். ஏனென்றால் வீட்டில் குழந்தைகள் தொந்தரவு இருந்தாலோ, இதைப்பற்றி எல்லாம் தெளிவாக பேசிக்கொள்ள முடியாது. அரிதாக கிடைத்திருக்கும் இதுபோன்ற சந்தர்ப்பங்களில்தான் சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள முடியும் என்கின்றனர் நிபுணர்கள்.

அவ்வப்போது புகழுங்களேன்

அலுவலகம், வேலை என்று பிஸியாக இருக்கும் போதுதான் சரியாக கவனிக்க நேரம் இருக்காது. தனியாக பயணம் போன இடத்தில்தான் ஒருவரை ஒருவர் கவனித்துக்கொள்ள நிறைய நேரம் கிடைக்குமே. ஒருவருக்கொருவர் பாராட்டித் தள்ளுங்கள். துணையின் செயல்பாடுகளில் எது பிடித்தமானது என்பது பற்றி பக்கம் பக்கமாய் பாராட்டித்தள்ளுங்களேன்.

புதிதாக முயற்சி செய்யுங்களேன்

ஜாலி பயணம் போன இடத்தில்தான் இதுபோன்ற புதிய முயற்சிகள் எல்லாம் செய்து பார்க்க முடியும். தனியான சந்தர்ப்பத்தில் உங்களின் கற்பனையை கொஞ்சம் உபயோகித்து கிரியேட்டிவாக செயல்படுங்கள். உங்களின் இதுபோன்ற செயல்பாடுகள் ஒரு வருடத்திற்குத் தாக்குப்பிடிக்கும்.

கையோடு கைகோர்த்துக் கொள்ளுங்கள்

டூர் போன இடத்திலும் செல்போனும், டிவியுமாக அமர்ந்துவிடவேண்டாம். அப்புறம் நீங்கள் தனியாக போய் பிரயோஜனமே இல்லை. அதை எல்லாம் சுவிட்ஆஃப் செய்துவிட்டு ஜாலியாக ஒரு வாக் போங்கள். சில்லென்ற தூரல் பொழிய கையோடு கைகோர்த்து நடப்பதே ஒரு தனி அனுபவம்தான். அதேபோல் டூர் முடித்து திரும்பும்போதும் அந்த சந்தோச நினைவுகளை அசைபோடுங்கள். நெருக்கமான அமர்வும் கூட உங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் என்கின்றனர் நிபுணர்கள்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum