ஆலயங்கள் ஆயிரம் # 1
Page 1 of 1
ஆலயங்கள் ஆயிரம் # 1
அக்னி ஈஸ்வரர் திருக்கோவில் + அழியாபதி ஈஸ்வரர் திருக்கோவில் இரட்டை ஆலயங்கள்
நெல்லை மாவட்டத்தில் , மேலப்பாளையம் அருகே நத்தம் என்னும் ஊரின் அருகே அமைந்துள்ளது கோமதி அம்பாள் உடனுறை அக்னி ஈஸ்வரர் ஆலயம். மேற்கு நோக்கிய ஆலயம்.தாமிரபரணி நதியின் கரையிலே அமைந்துள்ளது.
ஸ்தல புராணம் :
தக்கன் யாகத்தால் மனம் வெகுண்ட ஈசன் இவ்விடம் வந்து மேற்கு நோக்கி அமர்ந்தார். ஈசனின் கோபத்தால் , அவரின் பார்வை பட்ட இடங்கள் எல்லாம் எரிந்து அடிக்கடி கருகின. உதாரணம் : கருங்காடு , கருப்பந்துரை போன்ற ஊர்கள் .
இதனால் மனம் வருந்திய மக்கள் , அவ்விடம் வந்த கோரக்கர் சித்தரிடம் முறையிட்டனர். அவரும் மக்களுக்கு நல் வழி காட்டிட எண்ணி , தாமிரபரணி ஆற்றின் மறு கரையிலே , இவ்வாலயத்திற்கு நேர் எதிராக மற்றொரு லிங்கத்தை கிழக்கு நோக்கியவாறு பிரதிஷ்டை செய்தார்.
இதனால் மக்கள் காப்பாற்றப்பட்டனர். அந்த லிங்கத்திற்கு "அழியாபதி ஈஸ்வரர் " என்ற திருநாமம் வழங்கலாயிற்று.
அக்னி ஈஸ்வரர் திருக்கோவில் :
இங்கு அமைந்துள்ள நந்தி மேஷ நந்தி என அழைக்கப்படுகிறது. மேஷ ராசி அன்பர்களுக்கு சிறந்த வழ்பாடுத் தலமாகும். குறிப்பாக பரணி நட்சத்திர அன்பர்ரகளுக்கு உரிய தலமாகும். இந்த நந்தி ஆட்டின் முகத்தோடும் , காளை உடலோடும் அமைந்துள்ளது. இது செவ்வாய் ப்ரீத்தி ஸ்தலமாகவும் உள்ளது.
லிங்கம் ஸ்வயம்பு மூர்த்தி ஆகும்.மேற்க்கே நோக்கிய வண்ணம் அமைந்த அற்புதமான கோலம். ருத்ராக்ஷத்தில் உள்ள வரிகளைப் போலவே பட்டைகள் அமைந்த லிங்க உருவம்.ஒரு பெரிய அளவு ருத்ராக்ஷமே லிங்கமாக அமைந்தது போன்ற உணர்வு.
(அம்பாள் ஆலயத்தின் அழகிய தோற்றம் )
அம்பாள் சிலை இமய மலையில் இருந்து கொண்டு வரப்பட்டு, ஆகம விதிப்படி பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளதாக நம்பப்படுகிறது . அம்பாள் உடல் முழுவதும் உத்ராக்ஷம் போன்ற உருண்டைகள் காணப்ப்படுகின்றன. நின்ற கோலத்தில் உயரமான தோற்றத்திலே , வலகரத்திலே மொட்டவிழ் மலரைத் தாங்கியபடி , அருள் கோலம் பூண்ட தோற்றம்.
ஆலய அமைப்பு :
நந்தி மண்டபம் தாண்டி உள்ளே சென்றால் , உள் பிரகாரம் அமைந்துள்ளது .
மூன்று கணபதிகள் , சூரிய - சந்திரர் , சுப்பிரமணியர் , பைரவர் , நவகரகாம் , தக்ஷினாமூர்த்தி என பரிவார தெய்வங்கள் உள்ளன.
வெளி மண்டபம் தாண்டி அர்த்த மண்டபம் தாண்டி கர்பக்ரஹத்தில்
ஈசன் சுயம்புவாய் அனுகிரகம் செய்கிறார்.அம்பாள் தனி சன்னதி கொண்டு அருள் புரிகிறாள். உயரமான உருவம். வெளி மண்டபம் , அர்த்த மண்டபம் , கர்பகிரகம் என சன்னதி அமைந்துள்ளது.
வெளியே பெரிய மதில் சுற்று இரு சன்னதிகளுக்கும் அமைந்துள்ளது.
தொடர்புடைய சித்தர் :
கோரக்கர்
பூஜை :
ஸ்ருங்கேரி மடத்தின் மூலம் கும்பாபிஷேகம் நடைபெற்று தற்போது இரு கால பூஜைகள் நடைபெறுகின்றன.
தொடர்பு : திரு. கோபி பட்டர். செல் :9698858027
அழியாபதி ஈஸ்வரர் ஆலயம் அடுத்த இடுகையில் ......

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஆலயங்கள் ஆயிரம் # 2
» ஆலயங்கள் ஆயிரம் # 4
» ஆலயங்கள் ஆயிரம் # 3
» அருள்தரும் ஆலயங்கள்
» அதிசய ஆலயங்கள் 80
» ஆலயங்கள் ஆயிரம் # 4
» ஆலயங்கள் ஆயிரம் # 3
» அருள்தரும் ஆலயங்கள்
» அதிசய ஆலயங்கள் 80
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum