ஆலயங்கள் ஆயிரம் # 2
Page 1 of 1
ஆலயங்கள் ஆயிரம் # 2
அழியாபதி ஈஸ்வரர் திருக்கோவில்
கடந்த பதிவில் இரட்டை சிவதலங்களில் ஒன்றான அக்னி ஈஸ்வரர் கோவில் குறித்துப் பார்த்தோம்.இந்த பதிவில் மற்றொரு ஸ்தலமானஅழியாபதி ஈஸ்வரர் திருக்கோவிலைப் பார்போம்
ஸ்தல புராணம் :
தக்கன் மீதான கோபத்தில் அமர்ந்த அக்னி ஈஸ்வரரின் கோபத்தை சமன் செய்யும் விதத்தில் , மக்களின் வேண்டுகோளை ஏற்று கோரக்கர் சித்தர் இந்த ஸ்தலத்திலே இறைவனை பிரதிஷ்டை செய்துள்ளதகக் கூறப்படுகிறது.
கோவில் அமைப்பு :
அக்னி ஈஸ்வரரின் கோவிலுக்கு நேர் எதிராக , தாமிரபரணி ஆற்றின் மறு கரையிலே கிழக்கு நோக்கியவாறு , அழகிய வயல் பரப்பிற்கு மத்தியிலே ஆலயம் அமைந்துள்ளது.
சுற்றிலும் மதில் சுவர்களுடன் கோவில் கம்பீரமாக உள்ளது. சுற்றுப் பிரகாரத்தில் கணபதி, தக்ஷிணாமூர்த்தி, சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் , பைரவர் ஆகிய தெய்வங்கள் அமைந்துள்ளன.
உள்ள மண்டபத்திலே கணபதி , சுப்ரமணியர் உள்ளனர். சாஸ்தா இங்கே பீடம் உருவில் அருள்புரிகிறார். நெல்லையைச் சார்ந்த சில வைதிக குடும்பங்களுக்கு இந்த சாஸ்தா குல தெய்வமாக அருள் புரிகிறார்.
உள்ளே ஈசன் கம்பீரமாக சற்றே பெரிய உருவிலே அருள் புரிகிறார். நாககுடை மேலும் அழகினைக்க் கூட்டுகிறது.அருகில் தெற்கு நோக்கியவாறு அம்பாள் அருள் புரிகிறாள். நம்முடைய குறைகளை இறைவனிடம் எடுத்துக் கூறும் விதமாக அன்னையின் முகம் ஈசனின் சன்னதியை நோக்கியவாறு உள்ளது சிறப்பம்சமாகும்.
.
ஸ்தலத்தின் சிறப்பு :
கர்ம வினைகளையும் , முன் ஜென்ம கர்மங்களையும் தீர்த்து வழி கட்டும் ஸ்தலமாக அமைந்துள்ளது.
பூஜைகள் :
நித்திய பூஜை நடைபெறுகிறது. மேலும் பௌர்ணமி மற்றும் பிரதோஷம் ஆகிய தினங்களில் மக்கள் கூடி பூஜைகள் செய்கின்றனர்.
அமைவிடம் :
நெல்லை டவுனில் இருந்து மேலப்பாளையம் செல்லும் வழியில் அமைந்துள்ளது.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum