தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஆலயங்கள் ஆயிரம் # 3

Go down

ஆலயங்கள் ஆயிரம் # 3  Empty ஆலயங்கள் ஆயிரம் # 3

Post  ishwarya Fri Feb 15, 2013 1:02 pm


இந்த பதிவிலே விஷ்ணுபதி புண்ய காலத்திலே சிறப்பாக அபிஷேகம் நடைபெறும் வல்லம் ஸ்ரீ மாதவ பெருமாள் ஆலயம் குறித்துக் காண்போம்.

தஞ்சையை அடுத்த வல்லத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ மாதவ பெருமாள் மற்றும் ஸ்ரீ யோக நரசிம்மர் ஆலயம். தொன்மை மற்றும் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆலயம் இது.

தல புராணம் :

இப்பகுதியிலே முற்காலத்திலே வல்லாசுரன் என்பவன் மிகுந்த தொல்லைக் கொடுத்து வந்துள்ளதாகவும் , அவனை அழித்திட எம்பெருமான் ஸ்ரீ நரசிம்ஹர் இவ்விடம் வெளிப்பட்டு அவனை அழித்ததாகவும் கூறப் படுகிறது.

மேலும், ஒருமுறை கௌதம மகரிஷியால் சாபம் பெறப்பட்ட இந்திரன் இத்தலத்திற்கு வந்து இங்கு அமைந்துள்ள வஜ்ர தீர்த்தத்தில் நீராடி இங்குள்ள பெருமாளை சேவித்து சாப விமோசனம் அடைந்ததாகவும் தல புராணம் கூறுகிறது. அதனாலேயே இங்கு எழுந்தருளியுள்ள எம்பெருமானுக்கு"தேவேந்திரன் " என்றப் பெயரும் உண்டு.

சரித்திரக் காலம் :

இப்பகுதி பண்டைக் காலத்தில் விக்கிரம சோழனுடைய ஆட்சியின் கீழ் இருந்துள்ளது. 12 வது நூற்றாண்டைச் சார்ந்தக் கோவில் இது. கிட்டத்தட்ட 900 ஆண்டுகள் பழமை வாய்ந்தது இந்த ஆலயம். இது முற்காலத்தில் "விக்கிரம சோழ விண்ணகரம் " எனப் போற்றப்பட்டு உள்ளது. சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட இந்த ஆலயத்திற்கு சோழர்கள் நிறைய மானியங்களை எல்லாம் கொடுத்து உள்ளனர்.

அவர்களைத் தொடர்ந்து வந்த பாண்டியர்கள்,ஹோசலர்கள், நாயக்கர்கள் மற்றும் மராட்டிய மன்னர்கள் இந்த ஆலயத்திற்கு பல்வேறு நிவந்தங்களை அளித்து உள்ளனர்.

சுல்தானிய படை எடுப்பின் பொது இந்த ஆலயத்தின் கோபுரம் இடித்து தள்ளப் பட்டு உள்ளன. அதனாலே இது "மொட்டை கோபுரம் " என அழைக்கப் படுகிறது.

இந்த ஆலயத்தின் உற்சவர் விக்ரகங்கள் தற்போது தஞ்சை அரண்மனையில் பாதுகாப்பாக உள்ளன. அநேகமாக இது அந்நிய படை எடுப்பின்போது அங்கு கொண்டு செல்லப் பட்டு இருக்கலாம்.அவை விரைவில் இக்கோவிலுக்கு மீண்டும் கொண்டு வரப்பட இருக்கின்றன.

கிட்டத்தட்ட 48 ஆண்டுகள் கவனிப்பாரின்றி புல்,புதர் மண்டி கிடந்த இந்த ஆலயம் கடந்த 1996 ஆண்டினில்தான் மீண்டும் சீர் செய்யப்பட்டு தற்போது நித்ய பூஜைகள் நடைப் பெற்றுக் கொண்டு உள்ளன.

மூர்த்தம் :

ஸ்ரீ மாதவ பெருமாள் : இவர் சுயம்பு மூர்த்தி ஆவர். இவர் கிழக்கு நோக்கி எழுந்தருளி சேவை சாதிக்கிறார்.இடது காலை மடக்கி அமர்ந்தக் கோலத்தில் பெருமாள் அமைந்து உள்ளார்.



ஸ்ரீ யோக நரசிம்ஹர்: இவரும் சுயம்பு மூர்த்தி ஆவார். இவர் தெற்கு நோக்கி அமர்ந்து சேவை சாதிக்கிறார். இவர் தான் வல்லாசுரனை வதம் செய்தவர்.
இந்த இரு மூர்திகலுமே சுதை அமைப்பில் உள்ளதால் இந்த மூர்த்திகளுக்கு நித்ய அபிஷேகம் கிடையாது.
பல்வேறு யோகங்களையும், நலன்களையும் இந்த நரசிம்ஹர் வழங்குகிறார். இருதய கோளறு உள்ளவர்கள் வணங்க வேண்டிய தலம் இது. கார்த்திகை மாதம் முழுவதும் இந்த நரசிம்ஹர் தமது தவத்தில் இருந்து வெளிப்பட்டு கண் திறந்து இருப்பதாக ஐதீகம்.

தாயார் : கோமலவல்லி தாயார்.

பிற சன்னதிகள் :
ஸ்ரீ ராமர், ஆழ்வார்கள், ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீ ஆஞ்சநேயர் ஆகியோருக்கும் சன்னதிகள் உள்ளன.


தீர்த்தம் : வஜ்ர தீர்த்தம்


உற்சவங்கள் :
ஒவொரு பிரதோஷம் மற்றும் சுவாதி நட்சத்திரம் ஆகிய நாட்களில் சிறப்பு பூஜைகள் நரசிம்ஹாருக்கு நடைப்பெறுகின்றன.
ஆடிப்பூரம் அன்று ஆண்டாள் திருக்கல்யாணம் , வைகுண்ட ஏகாதசி , ஸ்ரீ ராம நவமி , ஆஞ்சநேய உற்சவம் ஆகியவை நடைப் பெறுகின்றன.

தற்போது சில ஆண்டுகளாக ஒரு பெண்மணியின் ஏற்பட்டால் விஷ்ணுபதி புண்ய காலத்தில் இந்த ஆலயத்தில் சிறப்பாக அபிஷேகம் நடைப் பெறுகின்றன.
கோவில் திறந்து இருக்கும் நேரம் :

காலை 6 மணி முதல் 10 மணிவரை
மாலை 5 மணி முதல் 8 மணி வரை

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum