புதுசு போல 'லெக்கிங்ஸ்' இருக்க வேண்டுமா?
Page 1 of 1

Leggings
இன்றைய காலத்தில் உடுத்தும் உடைகளில் பல டிசைன்கள் வந்துள்ளன. இதில் ஒன்று தான் 'லெக்கிங்ஸ்'. இதை இன்னொரு வகையான ஜீன்ஸ் என்றும் சொல்லலாம். இது அணிந்தால் உடலை ஒட்டிக் கொண்டு இருக்கும். இது உடலுக்கு ஏற்றவாறு விரியும். ஏனெனில் இதில் எலாஸ்டிக் உள்ளது. இத்தகைய லெக்கிங்ஸ்-ஐ துவைப்பதற்கு ஒரு சில வழிகள் இருக்கிறது. அது என்னவென்று படித்து, அதற்கு ஏற்றாற் போல் துவைத்துப் பாருங்களேன்...
லெக்கிங்ஸ் துவைக்க சில டிப்ஸ்...
1. லெக்கிங்ஸ்-ஐ கைகளில் துவைப்பதே சிறந்தது. முதலில் டிடர்ஜென்டை தண்ணீரில் கரைத்து, அதில் அந்த துணியைப் போட்டு, 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் துவைக்க வேண்டும்.
2. பிரஸ் போட்டு துவைக்கக் கூடாது. இதனால் துணியானது பாதிப்படைவதோடு, அதன் எலாஸ்டிக் தன்மையும் போய்விடும். ஆகவே கைகளிலேயே அழுக்கினை தேய்க்க வேண்டும்.
3. லெக்கிங்ஸ் துவைக்கும் போது, தண்ணீர் போன்று இருக்கும் டிடர்ஜென்டையே பயன்படுத்த வேண்டும்.
4. லெக்கிங்ஸ்-இல் கரை ஏதேனும் இருந்தால், முதலில் தண்ணீரில் அலச வேண்டும். பிறகு சிறிது எலுமிச்சை சாற்றை தண்ணீரில் விட்டு, கரை உள்ள துணியை 10 நிமிடம் அதில் ஊற வைத்து துவைக்க வேண்டும்.
5. எப்போது லெக்கிங்ஸ்-ஐ சுடு தண்ணீரில் அலசக் கூடாது. துணியின் நீண்டு சுருங்கும் தன்மை கெடாமல் இருக்க வேண்டும் என்றால், துணியை குளிர்ந்த நீரிலேயே அலச வேண்டும்.
6. துணியை துவைத்து காயப் போடும் முன், அதனை ஏதேனும் ஒரு கண்டிசனரில் நனைத்து காயப் போட வேண்டும். அதனால் துணியின் தரமானது பாதுகாக்கப்படும்.
7. லெக்கிங்ஸில் கரைகள் ஏதேனும் இருந்தால், ஒரு துணியை தண்ணீரில் நனைத்து கரை இருக்கும் இடத்தில் தேய்க்கவும். ஏனெனில் லெக்கிங்ஸ்-ஐ அடிக்கடி துவைக்கக் கூடாது. இல்லையென்றால் அதன் எலாஸ்டிக் போய்விடும்.
ஆகவே இவற்றையெல்லாம் நினைவில் கொண்டு லெக்கிங்ஸ்-ஐ துவைத்தால், நீண்ட நாட்கள் புதுசு போல் இருக்கும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» உதடு அழகாக இருக்க வேண்டுமா?
» கோடையில் அழகாக இருக்க வேண்டுமா?
» வயசு ஆயிட்டாலும், இளமையா இருக்க வேண்டுமா!!!
» குழந்தைகளுக்கு மனஅழுத்தம் வராமல் இருக்க வேண்டுமா?
» புதுசு எல்லாமே புதுசு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum