காஃபி, டீ அதிகம் குடித்தால் கருச்சிதைவு ஏற்படலாம்...
Page 1 of 1

கர்ப்ப காலத்தின் முதல் 12 வாரங்களில் காஃபி, டீ அதிகம் குடித்தால் கருச்சிதைவு ஏற்படும் சாத்தியக்கூறுகள் அதிகம் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
வேதிப்பொருட்கள் அடங்கிய உணவுப் பொருட்களை கர்ப்பமாகியுள்ள பெண்கள் தவிர்க்க வேண்டும் என்றும், கர்ப்பக் காலத்தில் கணிசமான அளவு உட்கொள்ளப்படும் காஃப்பீன் அடங்கிய காபி, டி, சாக்லெட் போன்றவை கருகலைவதற்கான ஆபத்தை உருவாக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.
நாளொன்றுக்கு
300 மில்லிகிராம் உயர்ந்தபட்ச அளவு அல்லது 4 கப் காப்பி குடிக்கலாம் என்று
உணவுக் கட்டுப்பாட்டு மையம் நிர்ணயித்துள்ளது. நாளொன்றுக்கு 200 மில்லி
கிராம் அளவுக்கு உட்கொள்பவர்களுக்கு சுத்தமாக இதனைப் பயன்படுத்தாதவர்களை விட இரண்டு மடங்கு பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளதாகவும் வல்லுநர்கள் கூறியுள்ளனர்.
கர்ப்பம் தரித்த முதல் 12 வாரங்கள் குழந்தை வளர்ச்சியின் முக்கியமான காலக் கட்டமாகும். இந்தக்
காலத்தில் காஃப்பீன் அடங்கியுள்ள உணவுப் பொருட்களை கர்ப்பமாகியுள்ள
பெண்கள் தவிர்ப்பது நல்லது. கர்ப்பம் தரித்த முதல் 12 வாரங்களில் தான் மிக
அதிக அளவில் கருச்சிதைவு ஏற்படுகின்றது ராயல் மருத்துவக் கல்லுரியின்
குழந்தையியல் துறை மருத்துவரும், செய்தித் தொடர்பாளருமான பேட் ஓ. பிரையன் கூறியுள்ளார்.
கர்ப்பமான தொடக்கத்தில் பெண்கள் காஃபி, டீ, சாக்லெட்
போன்றவற்றை விலக்கிவிடுவதாகவும் பின்னர் அதனைத் தொடருவதில் மிகவும்
சங்கடப்படுவதாகவும் கூறியுள்ளார். கர்ப்ப காலத்தின் பின் பகுதியில் பெண்கள்
இதனைத் தவிர்க்க வேண்டுமா என்பது குறித்து தெளிவாக எந்த முடிவும் இதுவரை
கூறப்படவில்லை என்று பேட் ஓ. பிரையன் தெரிவித்துள்ளார்.
இது தவிர தாய்மைக் காலத்தை அதிகரிப்பது, குழந்தையின்மை
குறைபாடுகளையும் உருவாக்கும் என்றும் கூறியுள்ளார். பெரும்பாலான
கருச்சிதைவு ஏற்படுவதற்கான காரணிகள் குறித்து இன்னும் முழுமையாக
கண்டறியப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். மருத்துவர் டி-குன் லீ
மற்றும் அவரது நண்பர்களும் மேற்கொண்ட ஆய்வு, கர்ப்ப காலத்தின் கடைசி 2 அல்லது 3 மாதத்தில் உள்ள ஆயிரத்து 63 பெண்களிடம் நடத்தப்பட்டுள்ளது.
இந்த
ஆய்வில் முதல் 20 வாரங்களில் அப்பெண்களால் உட்கொள்ளப்பட்ட காஃப்பீன் அளவு
பெறப்பட்டு ஆய்வு மேற்கொண்டதில் 20 வாரக் காலத்தில் கருச்சிதைவு 172
பெண்களுக்கு ஏற்படும் வாய்ப்பு உருவாகியிருந்தது தெரிய வந்துள்ளது.
காஃப்பீனைத் தவிர்த்த பெண்களுக்கு 12 விழுக்காடு அளவுக்கும், நாளொன்றுக்கு 200 மில்லி கிராம் பயன்படுத்துவோருக்கு 15 விழுக்காடும், 200 மில்லி கிராமுக்கு அதிகமாக காஃப்பீன் உள்ள அளவுக்கு காஃபி, டீ குடிப்போருக்கு 25 விழுக்காடு அளவுக்கு கருச்சிதைவு ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» கருச்சிதைவு
» கருச்சிதைவு ஏன் ஏற்படுகிறது?
» கருச்சிதைவு ஏற்படுவது ஏன்?
» கருச்சிதைவு ஏற்படாமல் தடுக்க
» காஃபி, வாசனைத் திரவியங்களால் புற்று நோய் வருவதில்லை- ஆய்வு!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum