உண்மையான உறவில் பொறுத்துக் கொள்ள கூடாத விஷயங்கள்!!!
Page 1 of 1
உண்மையான உறவில் பொறுத்துக் கொள்ள கூடாத விஷயங்கள்!!!
ஒருவரை ஒருவர் உண்மையாக காதலிக்கும் போது, வாழ்க்கைத்துணையின் சில செயல்கள் பிடிக்காமல் இருக்கலாம். ஆனால் அந்த உண்மையான காதலில் நம்பிக்கை, புரிந்து கொள்ளுதல், விட்டுக் கொடுத்தல் மற்றும் பொறுமை போன்றவை இருக்க வேண்டும். அவை இல்லையென்றால், அந்த நேரம் தான் நன்கு யோசிக்க வேண்டும். ஏனெனில் அந்த நேரத்தில் ஏதேனும் சிறு செயல்கள் கூட பெரிய பிரச்சனையை ஏற்படுத்திவிடும்.
அதிலும் அந்த பிரச்சனை ஒரு முறை வந்துவிட்ட பின்னும், மறுமுறையும் அந்த பிரச்சனையைப் பற்றி உங்கள் வாழ்க்கைத்துணை பேசிக் கொண்டு, அதனை நினைவுப்படுத்தி, மிகுந்த தொல்லையை கொடுத்தால், அப்போது மிகவும் கவனமாக, அவர்களுடன் இருப்பதா? வேண்டாமா? என்று நன்கு சிந்தித்து முடிவு எடுக்க வேண்டும். இப்போது அத்தகைய உண்மையான காதலில் என்னவெல்லாம் இருக்கலாம், ஆனால் பொறுத்துக் கொள்ளக்கூடாது என்பதைப் பற்றி அனுபவசாலிகள் கூறுவதைப் படித்து தெரிந்து கொள்ளுங்களேன்...
Relationship
* பொதுவாக தம்பதியர்கள்/காதலர்கள் என்றாலே அங்கு நிச்சயம் வாக்குவாதம் இருக்கும். அத்தகைய வாக்குவாதம் சில நேரங்களில் ஆரோக்கியமானதாக இருக்கலாம். ஆனால் அந்த வாக்குவாதம் எப்போது ஒருவர் தவறு செய்த பின்னர், அதனை ஏற்காமல், அந்த விஷயத்திற்கு ஏற்படுகிறதோ, அப்போது அவர்களின் குரல் மற்றும் நடவடிக்கை சற்று வித்தியாசமாக இருக்கும். அதிலும் அப்போது என்று நடக்காத வன்முறை செயலான அடிப்பது இருந்தால், அந்த உறவு நிச்சயம் சரியானதாக இருக்காது. இதனால் நாளடைவில் அந்த உறவு ஒரு முடிவுக்கு வந்துவிடும். ஆகவே அதனை பொறுத்துக் கொள்ளக்கூடாது.
* கடலைப் போடுவது, ஊர் சுற்றுவது போன்றவை கூட சில சமயங்களில் காதலர்களுக்குள் ஏற்றுக் கொள்ளக்கூடியது தான். அதாவது காதலன் தன் காதலி முன்பே பெண்களுடன் கடலைப்போடுவது. ஆனால் அது உங்கள் வாழ்க்கைத்துணையின் முன்பு நடக்காமல், அவர்களுக்கு பின்பு நடந்தால், அது அவர்களை ஏமாற்றுவதற்கு சமம். இருப்பினும் அவர்கள் உங்களை ஏற்றுக் கொண்ட பின்னரும், மறுபடியும் தவறு செய்தால், அப்போது நிச்சயம் பொறுமையாக இருக்கக்கூடாது. ஏனெனில் இதனால் கூட பெரும் பிரச்சனை பிற்காலத்தில் ஏற்படும். ஆகவே இநத் நேரத்தில் நன்கு யோசிக்க வேண்டும்.
* நம்பிக்கை தான் உறவுகளுக்குள் இருக்கும் ஒரு பெரும் தூண். ஆனால் அந்த நம்பிக்கை சரியாக இல்லையென்றால், அவர்கள் எப்போதும் உங்களுக்கு போன் செய்து கொண்டே இருப்பது, உங்கள் மொபைல் போன்களை சோதித்து பார்ப்பது, நண்பர்களுடன் வெளியே செல்ல விடாமல் தடுப்பது போன்றவாறு நடந்தால், அது பெரும் தவறான செயல். ஏனெனில் இந்த செயல்கள் அனைத்தும், உங்கள் வாழ்க்கைத்துணை உங்களின் மீது நம்பிக்கையற்று இருப்பதற்கான அறிகுறி. ஆகவே இது சிந்திக்க வேண்டிய முக்கியமான நேரம்.
* எப்போது உங்கள் வாழ்க்கைத்துணை அவர்களது நண்பர்கள், குடும்பம் முன்பு உங்களை தாழ்வாக நடத்துகிறார்களோ, அந்த நேரம் மிகவும் சீரியஸாக இருக்க வேண்டும். அதிலும் இந்த உலகில் அனைவருமே எப்போதும் பெருமைப்படுத்துபவராக இருக்கமாட்டார்கள். அதற்காக அனைவரது முன்பும் சுயமரியாதையை கெடுக்கும் வகையில் நடத்தக் கூடாது. அவ்வாறு நடத்தினால், அது மற்றவர்களை மிகவும் உயர்வாகவும், உங்களை தாழ்வாகவும் நடத்துவதற்கு சமம் என்பது போல் இருக்கும். பின் மற்றவர்களும் உங்களை மதிக்காமல், எப்போதும் தாழ்வாகவே நடத்துவார்கள். ஆகவே எப்போதும் சுயமரியாதை கெடும் இடத்தில் இருக்கக்கூடாது.
என்ன நண்பர்களே! சரிதானா? வேறு என்னவெல்லாம் கூடாது என்று உங்களுக்கு தெரிகிறதோ, அதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சில பெண்கள் உறவில் வெறுப்பு காட்டுவது ஏன்?
» திரையுலகில் நுழைபவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்
» மகப்பேறு காலத்தில் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்
» குளிர்காலத்திலும் குதூகலமாய் உறவில் ஈடுபடலாம்!
» உறவில் உற்சாகம் அதிகரிக்கணுமா?.. இதப் படிங்க மொதல்ல
» திரையுலகில் நுழைபவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்
» மகப்பேறு காலத்தில் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்
» குளிர்காலத்திலும் குதூகலமாய் உறவில் ஈடுபடலாம்!
» உறவில் உற்சாகம் அதிகரிக்கணுமா?.. இதப் படிங்க மொதல்ல
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum