தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வேலைக்குப் போகும் கர்ப்பிணிகள் கவனத்திற்கு... !

Go down

வேலைக்குப் போகும் கர்ப்பிணிகள் கவனத்திற்கு... ! Empty வேலைக்குப் போகும் கர்ப்பிணிகள் கவனத்திற்கு... !

Post  ishwarya Mon Feb 11, 2013 5:40 pm

Pregnancy Tips for Working women
பெரும்பாலான பெண்கள் திருமணத்திற்குப் பின்னர் வீட்டு வேலையும் செய்துவிட்டு அலுவலகத்திற்கும் சென்று வேலை செய்வது சிரமமான காரியம். இந்த சூழ்நிலையில் கர்ப்பகாலம் வேறு வந்துவிட்டால் பெரும்பாடாகிவிடும். மசக்கை, வாந்தி என உடல் அசதியோடு அலுவலகத்திற்குச் செல்லவேண்டிய கட்டாயம் வேறு மன அழுத்தத்திற்கு உள்ளாக்கிவிடும். எனவே கர்ப்ப காலத்தில் பெண்கள் பின்பற்ற வேண்டிய ஆலோசனைகளை கூறுகின்றனர் மகப்பேறு மருத்துவர்கள்.

சத்தான உணவுகள்

ஊட்டச்சத்துள்ள உணவுகளை உண்பது அவசியம். ஏனெனில் வீட்டு வேலைகளையும் செய்துவிட்டு அலுவலகத்திற்கும் வந்து வேலை செய்வதற்கும், கருவில் உள்ள குழந்தைக்கும் ஊட்டச்சத்து அவசியம். புரதம், மாவுச்சத்துள்ள உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ளவேண்டும் என்று தெரிவிக்கின்றனர் மருத்துவர்கள்.

கொழுப்பு உணவு வேண்டாம்

கர்ப்பகாலத்தில் கொழுப்புச் சத்துள்ள உணவுகளை தவிர்ப்பது அவசியம். கொழுப்பு உணவுகளை அதிகம் உண்பது மன அழுத்தத்திற்கு வழி வகுக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்

வசதியான ஆடைகள்

அலுவலகத்திற்குச் செல்லும் கர்ப்பிணிகள் வசதியான சற்றே லூசான ஆடைகளை அணிந்து செல்வது அவசியம் என்கின்றனர் மருத்துவர்கள். ஏனெனில் அது கர்ப்பிணிகளுக்கும், கருவில் உள்ள குழந்தைகளுக்கும் மூச்சு விட ஏற்றது என்கின்றனர்

எழுந்து நடங்க

கர்ப்ப காலத்திற்கு முன்பு வேலை பார்த்ததைப் போல கர்ப்பத்தின் போதும் கடுமையாக வேலை செய்யவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அதற்கான சலுகைகளை பெற்றுக்கொள்ளலாம். அவ்வப்போது பெர்மிசன், முடிந்தால் பார்ட் டைம் ஆக வேலை செய்வது குறித்தும் வசதிக்கேற்ப அலுவலக வேலையை கேட்டுப் பெற்றுக்கொள்ளலாம்.

உங்களின் பணிச்சூழல் பொருத்து நீங்கள் அவ்வப்போது சிறிது இடைவெளியில் வாக்கிங் செல்லலாம். ஏனெனில் அது முதுகுவலி, கால்களில் வீக்கம் மற்றும் ரத்தம் தேக்கமடைதல் போன்றவைகளில் இருந்து பாதுகாக்கும்.

காய்கறிகள், பழங்கள்

கர்ப்ப காலத்தில் வயிற்றை காயப்போடக்கூடாது. வேலை இருந்துகொண்டுதான் இருக்கும். அவ்வப்போது பழங்கள், காய்கறிகள் இணைந்த சாலட்களை சாப்பிடவேண்டும். சரிவிகித சத்துக்கள் கிடைக்கும். கண்டிப்பாக நொறுக்குத்தீனிகளை சாப்பிடக்கூடாது. வீட்டில் இருந்து ஜூஸ் தயார் செய்து கையோடு கொண்டு செல்வது நல்லது. அது உடலின் நீர்ச்சத்தினை தக்கவைக்கும்.

மேலதிகாரிகளிடம் தெரிவிக்கவும்

கர்ப்பம் உறுதி செய்யப்பட்ட உடனே அலுவலகத்தில் மேலதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டியது முக்கியமானதாகும். ஏனெனில் அதற்கேற்ப சலுகைகளை பெற அது அவசியமானது. அவ்வப்போது உணவு உண்பதற்கும், மருந்து மாத்திரைகள் எடுத்துக்கொள்வதற்கும் இந்த அறிவிப்பு அவசியமாகிறது. மேலும் எத்தனை மாதங்கள் வரை அலுவலகம் வரமுடியும் என்பதையும் குழந்தை பிறந்தபின்னர் மீண்டும் பணிக்கு வரமுடியுமா? என்பதையும் தெரிவிப்பது மிகவும் முக்கியமானது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» வேலைக்குப் போகும் பெற்றோரா? குழந்தைகளை கொஞ்சம் கவனிங்க!
»  Chennai சனிக்கிழமை, ஜூலை 28, 3:13 PM IST Recommended 0 கருத்துக்கள்0 Share/Bookmark emailஇமெயில் printபிரதி சுயமாக சம்பாதியுங்கள்... சுயமரியாதையை பேணுங்கள் வேலைக்குப் போகும் பெண்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து விட்டது. என்றாலும், இல்லத்தரசிகளும் இர
» அதிக அழுத்தமானவர்கள் கவனத்திற்கு
» அலுவலகங்களில் பெண்கள் கவனத்திற்கு
» கர்ப்பிணி பெண்களின் கவனத்திற்கு.....

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum