தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தங்க மழை தரும் விஜயதசமி பூஜை!

Go down

தங்க மழை தரும் விஜயதசமி பூஜை! Empty தங்க மழை தரும் விஜயதசமி பூஜை!

Post  amma Sun Jan 13, 2013 2:33 pm




விஜயதசமியன்று தங்க மழை அருள் தரும் ஒரு பூஜை உண்டு. இதனை குஜராத்தி, மகாராஷ்ட்ர மக்கள் கொண்டாடுகிறார்கள். நாமும் இதைத் தெரிந்து கொண்டு கொண்டாடலாம். தீமை எனும் இருள் விலகி, நம்பிக்கை ஒளி வீசும் தசமி நன்னாளில் பக்திப் பரவசமுடன் ஆராதிக்கப்படுவது தேவியர் மட்டுமல்ல. கூடவே `ஷமி' (வன்னி), `ஆப்டா' (ஆத்தி) மரங்களும் பூஜிக்கப்படுகின்றன.

அவற்றின் இலைகள் அன்றைய தினம் தங்கத்துக்கு இணையாகப் போற்றப்படுகின்றன. அன்று மாலை, இளையோர் அனைவரும் (சிறுமிகள் உட்பட) சேலை அணிந்து வலம் வரும் அழகே அழகு. பெரியோர்களை அணுகி பூஜிக்கப்பட்ட ஷமி (அ) ஆப்டா இலைகளைக் கொடுத்து வாழ்த்து பெறுவர்.

அப்போது அவர்கள், ``அம்ச்சா சோனா சந்து நாகா, அம்ச்சா ஷி பந்து நாகா!'' உங்கள் வாழ்வை வளமூட்டும் இந்தச் சோனா பத்தா, தங்கத்தை வர்ஷித்து, தனம், தான்யம், சந்தோஷம் மற்றும் எதிலும் வெற்றியை அளிக்கட்டும் என்று கூறி வாழ்த்துவார்கள். ஷமி என்பது வன்னி மரமாகும் மருத்துவ குணம் கொண்ட இதன் இலைகள் வயிற்றுப் போக்கு, ஜீரணக் கோளாறு சம்பந்தப்பட்ட குறைபாடுகளைக் களைய வல்லது.

அரிய வகையைச் சேர்ந்த இது மகாராஷ்டிராவில் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டுமே காணப்படுகிறது. புனே நகரில் வரத குப்சுப் கணபதி ஆலயத்தில் தான் இருக்கிறது. சனி பகவானுக்கு உகந்தது. இதன் வேர் முப்பது மீட்டர் ஆழம் பூமிக்குள் ஊடுருவிச் சென்றுகூட நீரை உறிஞ்ச வல்லது என்பதால் ராஜஸ்தான்- ஆப்கானிஸ்தான் இடையே பெருமளவில் காணப்படுகிறது.

அரியதாகையால் இதற்கு இணையாகக் கருதப்படும் `ஆப்டா' மரத்து இலையைச் சோன் பத்ராவாக உபயோகிக்கிறார்கள். இதைத் தமிழில் ஆத்தி, வேட்டத்தி, தாதகி என அழைக்கிறார்கள். பீடி சுற்ற உதவும் இதன் இலை எங்கும் காணப்படுகிறது.

வெண்மை நிற ஐந்து இதழ்களோடு விளங்கும் இது ஸ்வேத காஞ்சனா, வனராஜா, யுக்மபத்ரம் என வடமொழியில் அறியப்படுகிறது. இலை, மாட்டின் குளம்பு வடிவில் இருக்கும். இவையிரண்டையும் தங்கத்துக்கு இணையாகச் சொல்லப்படுவதன் பின்னணி வருமாறு:-

முன்னோரு காலத்தில் பைத்தான் என்ற ஊரில் தேவதத்தன் என்ற அந்தணன் வசித்து வந்தான். அவனுடைய மகன் கௌத்ச்யன் முனிவர் வரதந்துவிடம் குருகுல வாசம் செய்து பதினான்கு வகை சாஸ்திரங்களையும் கற்றுத் தேர்ந்தான். படிப்பு முடித்ததும் குருவுக்குத் தன்னால் இயன்றதை அளிக்க எண்ணினான்.

அதை அறிந்த குருநாதர், ``கௌத்ச்யா பிரதிபலன் பாராமல் செயலாற்றுவதே நன்று. கற்றதற்கு ஏற்ப செயல்படுவதே நீ எனக்கு அளிக்கும் பெரும் காணிக்கை'' என்று கூறியது அவனுக்கு ஏற்புடையதாக இல்லை.

விடாக்கண்டனாக இருக்கும் அவனை எப்படி மடக்கலாம் என்பது குருவுக்குத் தெரியாதா என்ன? சாத்தியமாகாத ஒன்றைக் கேட்டால் அடங்குவான் என்று நினைத்தவர், ``கௌத்ச்யா! அப்படியானால் நீ கற்ற பதினான்கு சாஸ்திரங் களுக்கும் சேர்த்து பதினான்கு கோடி பொற்காசுகளை எனக்குக் கொடு. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அதற்குள் செய்து முடி'' எனக் கண்டிப்புடன் கூறினார்.

ஏழை அந்தணனிடம் பொற்காசுகள் ஏது? என்ன செய்வது என்று யோசித்தவனுக்கு அப்போது அயோத்தியை (ஸ்ரீ ராமரின் முன்னோரான) மன்னன் ரகு அரசாண்டு வந்தது நினைவுக்கு வர, அரசவையை அடைந்தான். என்ன துரத்ருஷ்டம் அதற்கு முதல் நாள்தான் மன்னன் ரகு பெரும் யாகம் ஒன்றை விமரிசையாக முடித்து அனைவருக்கும் தான தருமங்கள் செய்திருந்தான்.

``அந்தணச் சிரேஷ்டனே! இது என்ன தர்ம சங்கடம் தற்சமயம் நீ கேட்கும் அளவுக்கு என் நிலவறையில் தனம் இல்லை. மூன்று நாள் கழித்துத் திரும்பி வருவாயானால் உன் விருப்பம் ஈடேறும்'' என்று பதிலளித்தான் மன்னன். கௌத்ச்யனும் ஒப்புக் கொண்டான். தான் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற ரகு, இந்திரனின் உதவியை நாடினான்.

அவனது ஈகைக் குணத்தைப் போற்றி, மனமகிழ்ந்த தேவேந்திரன், தனாதிகாரியாக விளங்கும் குபேரனை அழைத்து அயோத்தி நகரைச் சுற்றியுள்ள ஷமி, ஆப்டா மரங்களிலிருந்து பொற்காசு மழை பொழிய ஆணையிட்டான். குபேரனும் நடத்திக்காட்டி விட்டான். நன்றி கூறி விடை பெற்ற மன்னன் ரகுவை, இந்திரன் சகல மரியாதையுடன் வழி அனுப்பி வைத்தான்.

அயோத்தியை அடைந்தவன் அம்மரங்களிலிருந்து சேகரிக்கப்பட்ட பொற்காசுகளை கௌத்ச்யனிடம் அளித்தான். குருவுக்கு அளிக்க வேண்டியதை மட்டும் எடுத்துக் கொண்டு மிகுந்ததை மன்னனிடம் திருப்பித் தர ரகுவோ, தானமளித்த பொருளைத் திரும்பிப் பெறுவது அழகல்ல என மறுத்துவிட்டான்.

உடனே தயக்கம் ஏதுமின்றி கௌத்ச்யன் அவற்றை அயோத்தி மக்களிடமே பங்கிட்டு விநியோகித்தான். அவர்கள் வாழ்வு நலம் பெற வாழ்த்தினான். இது நடந்தது ஒரு விஜயதசமி நன்னாளில். வன்னி, ஆப்டா மரத்து இலைகள் இருக்குமிடம் அளவற்ற செல்வம், மகிழ்ச்சி மற்றும் வெற்றிகளை அள்ளிக் குவிக்கும் என்பது அசையாத நம்பிக்கை! *
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum