பிள்ளைகளுக்கு நேர்மை - பொறுப்புணர்வைக் கற்றுக்கொடுங்கள்..
Page 1 of 1

Kids Care
நேர்மறையான எண்ணங்களையும், நல்ல ஒழுக்கமான பழக்க வழக்கங்களையும் கற்றுக்கொடுத்து வளர்க்கப்படும் குழந்தைகள் எதிர்காலத்தில் தலை சிறந்தவர்களாக உயர்வார்கள் என்கின்றனர் குழந்தை நல மருத்துவர்கள். பிஞ்சு பருவத்திலேயே அவர்களுக்கு நேர்மை பொறுப்புணர்வை கற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் அவர்கள் அறிவுறுத்துகின்றனர். அவர்களின் ஆலோசனைகளை படியுங்களேன்.
பொய் சொல்லக்கூடாது
பிள்ளைகளுக்கு பெற்றோர்கள்தான் சிறந்த முன் உதாரணம். எந்த சந்தர்ப்பத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அவர்களுக்கு நீங்கள்தான் கற்றுத்தரவேண்டும். பொய் சொல்வதனால் ஏற்படும் தீமைகளை பெற்றோர்கள்தான் கற்றுக்கொடுக்கவேண்டும். அதை விடுத்து யாரிடமாவது போனில் பேசும் போது வீட்டில் இருந்து கொண்டே வெளியூரில் இருப்பதாக கூறினால் அவசியத்திற்கு பொய் சொல்வது தப்பில்லை என்று நினைத்துக் கொள்வார்கள்.
நேர்மையாக இருப்பதனால் கிடைக்கும் நன்மைகள் குறித்து 'மரவெட்டியின் கதை' போன்ற நீதிக்கதைகளை கூறி பிள்ளைகளை மகிழ்வூட்டலாம்.
பொறுப்புணர்ச்சி அதிகரிக்க
வெளியிடங்களுக்கு குழந்தைகளை கூட்டிக்கொண்டு போவதானால் யாரிடமும் விட்டு விட்டு போகாதீர்கள். எங்கு போனாலும் கூட்டிக்கொண்டு போனால்தான் அவர்களுக்கும் எங்கு எப்படி நடந்து கொள்வது என்பது தெரியும்.
கோவிலுக்கு அழைத்துச் சென்றால் அங்கு விளையாடக்கூடாது என்று கூறி அழைத்துச் செல்லுங்கள். அப்பொழுதுதான் அங்கு அமைதியை கடைபிடிக்க வேண்டும் என்று அவர்களுக்குத் தெரியும். கண்ணை மூடி இறைவனை வழிபட்டால்மட்டுமே கோவிலின் அமைதி பாதுகாக்கப்படும் என்றும் அவர்களுக்குத் தெரியும்.
ஹோட்டலில் சில குழந்தைகள் ஓடி ஆடி விளையாடிக் கொண்டிருப்பார்கள். எதையாவது தட்டி உடைத்து விடுவார்கள். அதுமாதிரியான இடங்களுக்குச் சென்றால் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்று கற்றுக்கொடுங்களேன். அதேபோல் அடுத்தவர்கள் வீட்டிற்குப் போகும் போது எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்றும் பழக்கப் படுத்த வேண்டும்.
சூப்பர் மார்கெட் போன்ற இடங்களுக்கு பர்ச்சேஸ் செய்ய சென்றால் குழந்தைகளுக்கு ட்ராலி தள்ள கற்றுக்கொடுங்கள். அதுவே மிகப்பெரிய பொறுப்பை அவர்களுக்கு கொடுத்தது போல ஆகும். அதேசமயம் பார்க் போன்ற விளையாடும் இடங்களுக்குச் சென்றால் ஒடி ஆடி விளையாட விடுங்கள். அவர்களின் மகிழ்ச்சி இரட்டிப்பாகும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» தேங்க்ஸ் சொல்ல பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுங்கள்!
» டீன் ஏஜ் பிள்ளைகளுக்கு! உணவே மருந்து
» நேர்மை தரும் மேன்மை
» நேர்மை உன்னைக் காப்பாற்றும்
» நேர்மை நம்மைக் காக்கும்
» டீன் ஏஜ் பிள்ளைகளுக்கு! உணவே மருந்து
» நேர்மை தரும் மேன்மை
» நேர்மை உன்னைக் காப்பாற்றும்
» நேர்மை நம்மைக் காக்கும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum