தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மருத்துவ சீர்திருத்த மசோதா-அமெரிக்க வழியை இந்தியா பின்பற்றுமா?

Go down

மருத்துவ சீர்திருத்த மசோதா-அமெரிக்க வழியை இந்தியா பின்பற்றுமா? Empty மருத்துவ சீர்திருத்த மசோதா-அமெரிக்க வழியை இந்தியா பின்பற்றுமா?

Post  meenu Mon Feb 11, 2013 12:45 pm

மருத்துவர்களுக்கு மருந்து உற்பத்தி நிறுவனங்கள் தங்கள் மருந்துகளை நோயாளிகளுக்குப் பரிந்துரை செய்ய என்னவெல்லாம் கொடுக்கிறது என்பதை மருத்துவ நிறுவனங்கள் வெட்டவெளிச்சமாக்கவேண்டும் என்று அமெரிக்க காங்கிரஸ் 2013ஆம் ஆண்டு அமல் செய்யவுள்ள புதிய மருத்துவ சீர்த்திருத்த மசோதாவில் திட்டவட்டமாக உத்தரவிட்டுள்ளது.

இதன்படி இந்த மருந்து உற்பத்தி நிறுவனங்கள் தாங்கள் மருத்துவர்களுக்கு செலவழிக்கும் தொகையை, அதாவது அவர்களுக்கு அளிக்கும் உணவு (lunch, dinner and drinks) பரிசுப் பொருட்கள், பணம், மற்றும் பிற 'வசதி'கள் ஆகிய விவரங்களை அந்த நிறுவனங்கள் இணையதளத்தில் வெளியிடவேண்டும் என்ற நிர்பந்தத்தை அமெரிக்க அரசு உருவாக்கியுள்ளது.

இந்தியாவில் பெரும்பாலான மருத்துவர்கள் ஓன்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்களின் மிகப்பெரிய அளவிலான மருந்து விற்பனைக்கு 'உதவி' வருகின்றனர். . இவர்களில் பலரை நம் பன்னாட்டு, உள்நாட்டு மருந்து உற்பத்தி ஜாம்பவான்கள் மேற்கண்ட வழியில்தான் தங்கள் நிறுவன மருந்துகளுக்குச் சாதகமாகத்திருப்புகின்றன.

2009ஆம் ஆண்டு இந்திய மருத்துவக் கவுன்சில் மருத்துவர்களுக்கு ஒரு வழிகாட்டு நெறியை விதித்தது. அதாவது மருத்துவர்கள் எந்த ஒரு மருந்து நிறுவனத்தின் பரிசுப் பொருட்கள் அல்லது எந்த ஒரு சாதகங்களையும் ஏற்றுக் கொள்ளக்கூடாது என்று உத்தரவிட்டது. ஆனால் இது மருத்துவக் கவுன்சில் மட்டத்திலேயே நின்று விடக்கூடியது. மீறுபவர்களுக்கான தண்டனை இல்லை. மீறி மருத்துவர்களை பரிசு உள்ளிட்ட பொருட்களை வாங்க வைக்கும் நிறுவனக்களுக்கான தண்டனை என்ன என்பதெல்லாம் இதில் இல்லை. இது ஒரு வெறும் வழிகாட்டு நெறி மட்டுமே. அதனை சட்ட மசோதாவாக்கும் நல்லெண்ணம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இல்லை.

உதாரணமாக ஒன்றைக் கூறவேண்டுமென்றால், மருத்துவக் கல்லூரிகளில் அல்சர் பற்றிய பாடப்பகுதிகளில் அல்சர் என்றால் என்ன என்பதை விளக்குவதோடு அதற்கான மருந்துகளையும் கூறுகிறது. மருந்துப் பெயர்களை அதன் 'ஜானரிக்' (ரசாயனப்பெயர் Generic) பெயராக வெளியிடுகிறது. அதாவது அல்சருக்கு ராணிதிடின், ஃபேமோடிடின், ஓமிப்ரசோல் என்று அந்தந்த அல்சரின் தன்மைக்கேற்ப அது ஜானரிக் பெயர்களைக் குறிக்கிறது. ஆனால் அதில் குறிப்பிட்ட நிறுவனத்தின் மருந்துப் பெயரை குறிப்பிடுவது என்பதில் சிக்கல்கள் உள்ளன. உதாரணமாக ரானிதிடின் என்று குறிப்பிடலாம் ஆனால் அடைப்புக் குறிக்குள் கிளாக்சோ நிறுவனத்தின் புகழ் பெற்ற 'ஜின்டாக்' என்ற வணிகப்பெயரைக் குறிப்பிடலாகாது. ஏனெனில் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் வணிகப் பெயராகும் இது.

இப்போது அடைப்புக் குறிக்குள் 'ஜின்டாக்' என்ற வணிகப்பெயர் பாடப்புத்தகத்தில் நுழைகிறது என்றால்.... அது எப்படி என்பதை நாம் ஊகித்தறியலாம்.

அவ்வாறு பாடப்புத்தகத்தில் குறிப்பிடப்படும்போது மருத்துவப்படிப்பு காலங்களிலேயே அவர் வெளியில் வந்தால் என்ன பிராண்டை நோயாளிகளுக்குப் பரிந்துரை செய்யவேண்டும் என்பதற்கான ஒரு சூட்சுமக் குறிப்பும் அடங்கி விடுகிறது.

இது மிகப்பெரிய ஆராய்ச்சி நிறுவனங்கள் கடைபிடிக்கும் உத்தி. இதே மிகப்பெரிய நிறுவனங்கள் ஒரு புதிய மருந்தை அறிமுகம் செய்கிறது என்று வைத்துக் கொள்வோம். அந்த நிறுவனங்கள் என்ன செய்யும்? முக்கிய நகரங்களில் மிகப்பெரிய மாநாட்டிற்கு ஏற்பாடு செய்து அதற்கு மருத்துவர்களை அழைத்து அந்த மருந்து குறிப்பிட்ட நோய்க்கு எவ்வளவு திறம்பட வேளை செய்கிறது என்பதை அந்தத் துறையில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவரைக் கொண்டு படம்போட்டுக் காட்டி விளக்கும், பவர் பாயிண்ட் பிரசன்டேஷன் இத்யாதிகள் இதில் அடங்கும். இது வழக்கமான நடைமுறை என்றாலும் அந்த மாநாட்டிற்கு வருகை தரும் முக்கியமான மருத்துவர்களுக்கு காலை டிபன், மதிய உணவு, இரவு விருந்து ஆகியவற்றையும் அந்த நிறுவனங்கள் வழங்குவதும் நடைமுறையில் உள்ள பழக்கமாகும்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum