தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வேண்டினால் வேலை கிடைக்கும்

Go down

வேண்டினால் வேலை கிடைக்கும் Empty வேண்டினால் வேலை கிடைக்கும்

Post  amma Sun Jan 13, 2013 2:08 pm



108 வைணவ ஸ்தலங்களில் ஒன்றானது கள்ளழகர் கோவில். இக்கோவில் மதுரை அழகர்மலை அடிவாரத்தில் அமையப் பெற்றுள்ளது. பாண்டிய மன்னர் காலத்தில் அழகர் மலை கோவிலில் 7 பிரகாரங்கள் இருந்தன. அதில் 6-வது பரகாரத்தில், சப்தகன்னிமார் எழுந்தருளியுள்ளார். இக்கோவிலானது அழகர்மலை அடிவாரத்தில், கள்ளழகர் கோவில் அருகாமையில் உசிலைமரங்களுக்கு இடைப்பகுதியில், சிலம்பாறு தெற்கு கரையில் அமையப் பெற்றுள்ளது.

இந்த சப்த கன்னிமார் குறித்து அகஸ்திய நானூறு புராண புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது. 7 சப்த கன்னிகளும், நூபுர கங்கையில் புனித நீராடி வந்து, கள்ளழகரை நோக்கி தவம் செய்து அமர்ந்தருளியதாக வாமன புராணத்திலும் கூறப்பட்டுள்ளது. ஆழ்வார்கள் அழகரைப்பற்றி பாடியபோது, நூபுர கங்கை தீர்த்தத்தில் நீராடியதாக சப்த கன்னிமார்களையும் இணைத்து பாடியுள்ளார்கள்.

இதில் "சிலம்பார்க்க தெய்வ மகளிர்களோடு'' என்ற வரியில் புகழ்ந்து பாடப்பட்டுள்ளது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மாலை வேளையில் இந்த சப்த கன்னிமார்க்கு அபிஷேகம், ஆராதனைகள் நடத்தப்படும். தொடர்ந்து தேனும், தினை மாவும் படைக்கப்பட்டு, நெய்வேத்தியம் செய்து பக்தர்களுக்கு வழங்கப்படும்.

காலம் காலமாக இன்றும் நடைமுறையில் காண முடியும். இதுகுறித்து கள்ளழகர் கோவில் அம்பி என்ற சுந்தர நாராயணன் பட்டர் கூறியதாவது:-

தென் திருப்பதி என போற்றி அழைக்கப்படும் இந்த கள்ளழகர் கோவிலில் சப்த கன்னிமார்கள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள். தென் மாவட்டத்தில் வேறு பெருமாள் கோவிலில் சப்த கன்னிமார்கள் தெய்வம் இல்லை. இயற்கை எழிலும், பசுமையும் நிறைந்த மூலிகை வனமும் இணைந்த இந்த ஸ்தலத்தில் கிழக்கு முகம் பார்த்து அமர்ந்த நிலையில் அருள்பாலிக்கிறார்கள்.

திருமணத் தடை அகலும், குழந்தைபேறு கிட்டும், கடன் சுமை குறையும், முக்கியமாகமன அமைதியை தரும், வேலை வாய்ப்பு, இப்படி பல வேண்டுதலை நிறைவேற்றி தரும். இவ்வாறு அவர் கூறினார். மதுரையிலிருந்து 22 கி.மீ. தொலைவில் இக்கோவில் அமையப் பெற்றுள்ளது.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum