குழந்தைக்கு திடமான உணவு கொடுக்கலாம்-னு இருக்கீங்களா!!!
Page 1 of 1
குழந்தைக்கு திடமான உணவு கொடுக்கலாம்-னு இருக்கீங்களா!!!
Baby Food
குழந்தை பிறந்து 6 மாதங்களுக்குப் பிறகு அவர்களுக்கு கொடுக்கும் உணவுகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் இதுவரை குழந்தை தாய்ப் பாலை மட்டும் தான் குடித்துக் கொண்டிருந்தது, அவ்வாறு அந்த ஆரோக்கியமான பாலை குடித்துக் கொண்டிருந்த குழந்தைக்கு, திடீரென்று சற்று திடமான உணவுகளை பழக்க வேண்டும் என்று நினைத்து, சற்று திடமான உணவுகளை கொடுத்தால், குழந்தை சாப்பிட மறுத்து அழத் தொடங்கும். எவ்வளவு தான் தாய்ப்பால் ஆரோக்கியமானதாக இருந்தாலும் வளர்வதற்கு உடலுக்கு போதிய இதர சத்துக்களும் வேண்டும். ஆகவே எந்த வயதில் எந்த உணவைக் கொடுக்க வேண்டுமோ, அந்த உணவுகளை கொடுத்து வளர்க்க வேண்டும். அப்படி கொடுத்தால் தான், குழந்தை நன்கு வளர்ச்சி பெற்று ஆரோக்கியமாக வளரும். ஆகவே அப்படி குழந்தைக்கு உணவுகளை ஊட்ட சில டிப்ஸ் இருக்கிறது.
முதலில் குழந்தை திட உணவுகளை உண்ண தயாராக உள்ளதா என்று பார்க்க வேண்டும். ஏனெனின் குழந்தை பிறந்ததிலிருந்து, 6 மாதம் வரை தாய்ப்பாலை தான் குடித்துக் கொண்டிருக்கும். அதன் பின்னர் குழந்தைக்கு திட உணவுகளை சிறிது சிறிதாக கொடுக்க ஆரம்பித்து விட வேண்டும். அதிலும் குழந்தைக்கு பற்கள் முளைப்பது போல் தோன்றிவிட்டால், கண்டிப்பாக பயப்படாமல் திட உணவுகளைக் கொடுக்கலாம்.
முக்கியமாக குழந்தையை மிகவும் கட்டாயப்படுத்தி கொடுக்கக் கூடாது. இதனால் குழந்தை பயந்த, பின்னர் எவற்றையுமே சாப்பிடாமல் இருக்கும். ஏனெனில் எவற்றை கட்டாயப்படுத்தி கொடுத்தோமோ, அவற்றையே கொடுக்கிறார்கள் என்று நினைத்து எதையுமே சாப்பிடாமல் இருக்கும். ஏனென்றால் அனைத்து குழந்தைகளுக்கும் புரிந்து கொள்ளும் திறன் ஒரே போல் தான் தெரியும். ஆனால் அது தெரியாமல், நிறைய தாய்மார்கள் குழந்தைகளுக்கு செரலாக் மற்றும் மாட்டுப் பால் என்ற உணவுகளைக் கொடுத்து பழக்கிவிட்டுகின்றனர். ஆகவே மறுமுறை குழந்தைக்கு மற்றதை கொடுக்கும் போது, அந்த குழந்தை அந்த ருசியில் உணவு இல்லையென்றால் அதை சாப்பிடாமல் மறுக்கிறது. ஆகவே எப்போது குழந்தைகக்கு ஏற்ற உணவான பால் கலந்திருக்கும் உணவைக் கொடுக்க வேண்டும்.
இப்போது புதுவிதமான உணவை கொடுக்க வேண்டும் என்றால் அப்போது குழந்தையின் மனநிலையை மாற்றி உணவைக் கொடுத்தால், குழந்தை கண்டிப்பாக உண்ணும். இல்லையென்றால் குழிந்தையிடம் சில பொம்மைகள் கொடுத்து, விளையாடும் போது ஊட்டினாலும் குழந்தை நன்கு உண்ணும். அதிலும் குழந்தைக்கு ஒரே பொம்மைகளை கொடுப்பதை விட, சற்று வித்தியாசமாக இருக்கும் சில பொருட்களை கொடுத்தால், குழந்தை உணவில் கவனத்தை செலுத்தாமல், அந்த பொருளின் மீது கவனத்தை செலுத்தும். அதனால் ஈஸியாக உணவை ஊட்டலாம்.
இவற்றையெல்லாம் விட குழந்தை நன்கு சாப்பிட, குழந்தையையே அதன் கைகளாலே சாப்பிட வைக்கலாம். அதாவது ஒரு டேபிளின் மீது, உணவைத் தூவி, குழந்தையை விளையாடும் படி, அதை எடுத்து சாப்பிடச் சொல்லி செய்தால், குழந்தையும் விரும்பி உண்ணும். ஆகவே ஒரு பொம்மையை கொடுத்து அதன் மேல் கவனம் வைத்து குழந்தை சாப்பிடுவதை விட, குழந்தையையே அதன் பிஞ்சு விரல்களால் எடுத்து சாப்பிடச் சொன்னால், விரும்பி சாப்பிடும். முக்கியமாக உணவுகளை மிகவும் சிறியதாக, மென்மையாக இருக்க வேண்டும். கடினமான உணவுகளைக் கொடுத்தால், குழந்தையின் தொண்டையில் மாட்டி குழந்தைக்கு தொந்தரவை ஏற்படுத்தும். ஆகவே அவற்றில் கவனம் தேவை.
உணவுகளை குறைந்த அளவில் சிறு இடைவெளி விட்டு விட்டு கொடுக்க வேண்டும். இது மிகவும் முக்கியமான திட உணவுகளை கொடுக்கும் டிப்ஸ். இதனால் குழந்தைக்கு வயிறு நிறைவதோடு, அதன் ருசியும் பிடித்துவிடும்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம்.. குழந்தைகளுக்கான உணவு முறை.
» குழந்தைக்கு திட உணவு கொடுக்க தயாராகிடீங்களா
» குழந்தைகளுக்கு ஈவினிங் சாப்பிட ஆரோக்கியமா என்ன கொடுக்கலாம்!!!
» குட்டீஸ்களை நோய்கள் அண்டாமல் இருக்க என்ன கொடுக்கலாம்?
» குழந்தைகளுக்கு ஈவினிங் சாப்பிட ஆரோக்கியமா என்ன கொடுக்கலாம்!!!
» குழந்தைக்கு திட உணவு கொடுக்க தயாராகிடீங்களா
» குழந்தைகளுக்கு ஈவினிங் சாப்பிட ஆரோக்கியமா என்ன கொடுக்கலாம்!!!
» குட்டீஸ்களை நோய்கள் அண்டாமல் இருக்க என்ன கொடுக்கலாம்?
» குழந்தைகளுக்கு ஈவினிங் சாப்பிட ஆரோக்கியமா என்ன கொடுக்கலாம்!!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum