உங்களுக்கு நீரிழிவு இருக்கா? மூளைக்கு ஸ்டெரெஸ் கொடுக்காதீங்க!
Page 1 of 1

Diabetics
டைப் - 2 நீரிழிவு நோயினால் மூளை சுருங்கும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.
ரத்தத்தில் இன்ன அளவுதான் சர்க்கரை இருக்கலாம் என்பதை மருத்துவர்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டதாகவும் ஆய்வாளர்கள் எச்சரிக்கை மணி அடிக்கின்றனர்.
நீரிழிவு நோயினால் மனிதர்களின் நினைவுத் திறனில் ஏற்படும் பாதிப்பு பற்றி ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். டைப்- 2 நீரிழிவு நோயினால் மூளை சுருங்கும் வாய்ப்பு அதிகமிருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆய்வு பற்றி கருத்து கூறியுள்ள கான்பராவில் உள்ள பல்கலையின் மூளை ஆய்வுச் சோதனை சாலையின் தலைவர் நிகோலஸ் செருபுயின், "சாதாரணமாக ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவு கூட சர்க்கரை நோய் இல்லாதவர்கள் இடத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும் போது மூளை சுருங்கும் வாய்ப்பை கண்டுபிடித்துள்ளோம்" என்று தெரிவித்துள்ளார்.
கடந்த 4 ஆண்டுகளாக நிகோலஸ் செருபுயின் 60 முதல் 64 வயதுடைய நபர்களை சோதனை செய்து வந்தார். இவர்களின் ரத்தத்தில் சர்க்கரை அளவு லிட்டருக்க்கு 4- 6.1 மில்லிமோல்கள் இருந்து வந்துள்ளது.
ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவினால் 'ஹிப்போகேம்பஸ்' என்று அழைக்கப்படும் மூளையின் பின்புறமுள்ள இரு மேடுகளின் வால்யூம் குறைய வாய்ப்பிருப்பதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது. மேலும் சிறுமுள்ளையில் வாதுமைக் கொட்டை வடிவில் இருக்கும் சதை அளவில் சுருக்கம் போன்றவையும் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. ஹிப்போகேம்பஸ் மற்றும் சிறுமூளையில் உள்ள இந்த அமைப்பு இரண்டும்தான் ஞாபக சக்திக்கும், அறிதிறனுக்கும் முக்கியமான விஷயமாகும்.
நவீனமயமான வாழ்க்கையில் ஏற்படும் நெருக்கடிகள் மூளைக்கு சுமையை ஏற்றுவது ரத்தத்தில் சர்க்கரையின் அளவால் ஏற்படும் பாதிப்பில் தாக்கம் செலுத்துகிறது என்கிறார்கள் இந்த ஆய்வாளர்கள்.
மூளைச் சிதைவு நோய் (Dementia) ஏற்பட்டவர்களுக்கு இத்தகைய கோளாறு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஞாபகசக்தி மற்றும் அறிதிறனுக்கு உகந்த மூளைப்பகுதிகள் சுருங்குவதையும் ரத்தத்தின் சர்க்கரை அளவு தீர்மானிக்கிறது என்பதே இந்த ஆய்வாளர்களின் கருத்து.
இந்த புதிய ஆய்வினை ஊக்குவிக்கும் மற்ற ஆய்வுகளும் இதற்கு வலு சேர்க்குமானால் ரத்தத்தில் சர்க்கரை அளவு பற்றிய தற்போதைய அளவுகளை தீவிர மறுபரிசீலனைக்கு உட்படுத்தவேண்டும் என்று இந்த ஆய்வாளர்கள் கூறுகின்றனர்
ஆரோக்கியமான வாழ்க்கை முறை, மூளைக்கு 'ஸ்ட்ரெஸ்' கொடுக்காத வாழ்முறை, உடற்பயிற்சி, சரியான உணவு பழக்கம் போன்றவைகளை பின்பற்றினால் நீரிழிவை தடுப்பதோடு மூளையையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளலாம் என்கின்றனர் இந்த ஆய்வாளர்கள்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» நீரிழிவு நோய் இருக்கா? கோவைக்காய் சாப்பிடுங்க...
» நீரிழிவு இருக்கா? இந்த காய்கறிளை சாப்பிடுங்க...
» நீரிழிவு இருக்கா? காதையும் கொஞ்சம் கவனிங்க!
» நீரிழிவு நோய் இருக்கா? அப்ப வெண்டைக்காய் சாப்பிடுங்க...
» நீரிழிவு இருக்கா ? மனச் சோர்வு வரும் எச்சரிக்கை!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum