குறிவைக்கும் 'வில்லன்கள்'-20 வயது இளம் பெண்களே உஷார்!
Page 1 of 1

Acne
டீன் ஏஜ் எனப்படும் பதின் பருவத்தினரையும் இருபதுகளில் இருக்கும் இளம் வயது பெண்களையும் குறிவைத்து தாக்கும் 'வில்லன்கள்' இருக்கின்றனர். அந்த 'வில்லன்களிடம்' இருந்து நம்மை தற்காத்துக்கொண்டால் உடல்நலத்துடன் மனநலமும் பாதுகாக்கப்படும். அந்த வில்லன்கள் வேறு யாருமல்ல - பருக்கள்தான்.
முகத்தை குறிவைக்கும் பருக்கள்
பளிச்சென்ற முகத்திற்காக எத்தனையோ மெனக்கெடல்கள் இருந்தாலும் பளபளமுகத்தில் முத்துப்போல் முகப்பரு எட்டிப்பார்த்தால் இளவயதினர் சோர்வடைவது இயற்கை. இந்த வகையான முகப்பருவிற்கு அடல்ட் ஷக்னி! என்று பெயர். இருபது வயதைத் தொட்டுவிட்டு போகிறவர்களை இது சுலபத்தில் தாக்கும்.
ஹார்மோன் மாற்றங்களினாலேயே இந்த முகப்பருக்கள் ஏற்படுகின்றன. அந்த வயதில் வருகிற முகப்பருக்களுக்கும் ஆயில் என்பதற்கும் தொடர்பில்லை. பொதுவாக தாடைப்பக்கம் வருகிற முகப்பருக்களுக்கு ஹார்மோன் மாற்றங்கள் காரணம். முன் நெற்றியில் வருகிற முகப்பருக்களுக்கு தலைப்பொடுகு காரணம்.
பருக்களில் இருந்து பாதுகாக்க
மருத்துவரிடம் ஹார்மோன் டெஸ்ட் உள்ளிட்ட பரிசோதனைகள் செய்வது அவசியம். இதன் மூலம் உங்கள் டாக்டருக்கு சரியான மருந்துகளை பரிந்துரைக்க வசதியாக இருக்கும். லேசர் சிகிச்சைகள் செய்வதன் மூலம் நோய்த்தொற்று குறைந்து, ஆரோக்கியமான செல்களை உற்பத்தி செய்ய முடியும். மைக்ரோ டெர்மப்ரேஷன், பீல்ஸ், கொலஜன் மாஸ்க் போன்ற சில சிகிச்சைகளும் உதவி செய்யும். ஆயில் தலை முடியை முக்கியமாக கவனிக்க வேண்டும். தலையை ஷாம்பூ வாஷ் செய்து முன் பக்கம் ஹெட்பேனட் போடுவது நல்லது. உணவோடு சேர்த்து சத்தான பானங்களையும் வைட்டமின் A.E உள்ள உணவுகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
நிறத்தை குறைக்கும் பிக்மென்டேஷன்
பிக்மென்டேஷனில் இரண்டு வகை இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்வோம். ஒன்று ஹைபோ. இதில் பாதிக்கப்பட்ட இடம் நிறம் குறைந்து காணப்படும். இரண்டாவது ஹைப்பர். பாதிக்கப்பட்ட இடம் கறுப்பு கூடி காணப்படும். இரண்டாவதுதான் அதிகமாகக் காணப்படுகின்ற நிலை. இது குழந்தை பிறப்பை தடுக்கும் மருந்துகளால் ஏற்படலாம். சூரியஒளி இந்த நிலையை அதிகப்படுத்தும்.
தோல்நோய் நிபுணர்
தோல்நோய் நிபுணரின் உதவியின்படிதான் இந்த நிலையை அணுக வேண்டும். இந்த சிகிச்சையின் முக்கியமான பிரச்சினை தொடர்ந்து நீங்கள் சிகிச்சையைத் தொடரவேண்டும் என்பதே. சன்ஸ்கிரீன் எந்த நேரத்திலும் விட மாட்டேன் என்று உறுதி எடுத்துக் கொண்டுதான் இந்த சிகிச்சையை தொடர வேண்டும். கூடவே ஆரஞ்ச், சாத்துக்குடி, கொய்யா போன்ற வைட்டமின் A.E நிறைந்த பழங்கள் அவசியம் உணவில் தேவை. நெல்லிக்கனியும் முக்கியம்.
மருத்துவ சிகிச்சையுடன் தினமும் ஒரு தடவை எலுமிச்சை ஜூஸை பாதிக்கப்பட்ட இடத்தில் அப்ளை செய்யுங்கள் . வினிகரை தேவையான அளவு, தேவையான தண்ணீரில் கலந்து பயன்படுத்துவதும் பலன் தரும்.
செல்லுலைட் எனப்படும் கொழுப்பு பாக்கெட்டுகள்
உடலில் கொழுப்பானது சிறு சிறு பாக்கெட்டுகளாக தோலுக்கு அடியில் உருவாகி சிக்கியிருக்கிற நிலை செல்லுலைட் எனப்படும். மோசமான சத்தற்ற உடல், மோசமாக உடலை கவனித்துக் கொள்வது, மன உளைச்சல் போன்றவை செல்லுலைட் உருவாக அடிப்படைக் காரணங்கள்.
ஆரோக்கியமான சமச்சீரான உணவை சாப்பிடப்பழகுவது செல்லுலைட்டை ஒழிக்க நல்ல ஆரம்ப வழி. நல்ல லோஷன், ஆயில் கொண்டு அந்த இடத்தை நீளமாக மசாஜ் செய்வது பயனளிக்கும்.
ஒரு லிட்டர் சீஸேம் ஆயிலில் தாமரை இலைகளையும், ஐவி இலைகளையும் போட்டு கொதிக்க வைத்து அதனால் நீண்ட மசாஜ் செய்யுங்கள். அதில் வேப்பிலை ஆயில், அஸ்வந்தா, பாதாம், ஆலிவ் போன்றவற்றையும் சில சொட்டுகள் சேர்க்கலாம்.
தோல் சுருக்கம்
சுருக்கம் என்பது ஜால்ட் நம் உணர்வுகளின் வெளிப்பாடு. இருபத்தி ஐந்து வயதில் ஆரம்பித்து மெல்ல மெல்ல அதிகரிக்கத் தொடங்கிவிடுகிறது. புகை பிடிப்பது, சூரியஒளி இரண்டும்தான் மிகப்பெரிய எதிரி. எடை மாற்றங்களும் தோலை பாதித்து சுருக்கங்களை உருவாக்க முக்கிய காரணம் என்கிறார்கள். இதனால் தோலின் கருப்புத்தன்மை பாதித்து விடுகிறது.
இருபது வயதிலேயே க்ளென்சிங், டோனிங், மாச்சுரைஸிங் செயலை செய்ய ஆரம்பித்து விடுங்கள். படுக்கும்முன் ரிங்கிள் கிரீம் பயன்படுத்துங்கள். தளர்ந்த தோலாக இருந்தால் ஸ்கின் டைட்டினிங், பீல்ஸ், மல்ட்டி வைட்டமின் பேசியல் போன்றவற்றை பயன்படுத்தலாம். புகைப்பிடித்தலை நிறுத்துவது முக்கியம்.
கரும்பு ஜூஸ் உடன் மசாஜ் கலந்து பேஸ்ட் உருவாக்குங்கள். இரண்டு நாளைக்கு ஒருமுறை அப்ளை செய்தால் முகச்சுருக்கம் காணாமல் போகும். எதுவந்தாலும் அசராமல் அதைப்பற்றியே நினைத்து மனம் வெதும்பாமல் எதிர்த்துப் போராடினால் எத்தகைய வில்லன்களையும் வீழ்த்தி வெற்றி பெறலாம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பெண்களே உஷார்
» பெண்களே இணையதளத்தில் அரட்டையா? உஷார்!
» பெண்களே உஷார்: துணிக்கடைகளின் உடை மாற்றும் அறையில் பொருத்தப்பட்டிருக்கும் கண்ணாடி
» இளம் வயது முக சுருக்கத்தை போக்க...
» 13 வயது இளம் பெண்ணை 2 ஆண்டுகளாக பலாத்காரம் செய்த அப்பா, அண்ணன் கைது!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum