அம்மனுக்கு உகந்த ஆடி மாதம்!
Page 1 of 1
அம்மனுக்கு உகந்த ஆடி மாதம்!
தமிழ் மாதங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு சிறப்புகள் உள்ளன. எனினும் இவை அனைத்தைக் காட்டிலும் ஆடி மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
'ஆடிச் செவ்வாய் தேடிக்குளி!' என்ற பழமொழி ஒன்றே இம்மாதத்தின் சிறப்பை உணர்த்துவதாக உள்ளது.
தமிழ் ஆண்டின் 4வது மாதமான ஆடி, தட்ஷிணாயனப் புண்ணிய காலத்தின் தொடக்கமாகவும் உள்ளது. அதாவது ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை தட்சிணாயன புண்ணிய காலம் எனவும், மார்கழி முதல் ஆனி முடிய உத்திராணயன புண்ணிய காலமாகவும் கருதப்படுகிறது.
தட்சிணாயன புண்ணிய காலம் என்பது தேவர்களின் இரவு நேரம் என்று இந்து மத புராண நூல்களில் விவரிக்கப்பட்டுள்ளது. இக்கால கட்டத்தில் பகல் பொழுது குறைவாக இருக்கும். பலத்த காற்றும், வெயில் குறைந்தும், மழைச்சாரலும் இருக்கும்.
பொதுவாக ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாகக் கருதப்படுகிறது. சிவனை அடையும் நோக்கில் அன்னை பராசக்தி இம்மாதத்தில் விரதம் இருந்து வரம் பெற்றார்.
ஆடி மாத செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் பெண்கள் விரதம் இருந்து அம்மனை வழிபட்டு வருவது காலம் காலமாக இருந்து வருகிறது.
ஆடி வெள்ளிக் கிழமைகளில் குத்து விளக்கு பூஜை செய்து, சுமங்கலிப் பெண்களுக்கு ரவிக்கை துணி, வெற்றிலை பாக்கு, தேங்காய் வைத்துக் கொடுப்பது நல்ல பலனைத் தரும்.
ஆடி செவ்வாய்க் கிழமைகளில் பெண்கள் எண்ணெய் தேய்த்து, மஞ்சள் பூசிக் குளித்து அம்மனை வழிபட்டு வந்தால் மாங்கல்ய பலம் கூடும் என்பது ஐதீகம்.
ஆடி மாதத்தில் வரும் அமாவாசை தினத்தன்று கடல் அல்லது நதிகளில் நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுப்பது பெரும் புண்ணியத்தை தரும்.
ஆடி மாதம் 18ஆம் நாள் 'ஆடிப் பெருக்கு' பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் நதிக்கரையோரங்களில், குறிப்பாக காவிரி படித்துறைகளில் மக்கள் திரண்டு வந்து வழிபாடு நடத்துவர்.
வாழை இலையை விரித்து, விளக்கேற்றி, பூஜைக்குரிய பொருட்கள் வைத்து, புது மஞ்சள் கயிறு, குங்குமம், மஞ்சள், சட்டைத்துணி போன்ற மங்கலப் பொருட்களும் வைத்து காவிரி அன்னையை பெண்கள் வணங்குவர்.
திருமணமாண பெண்கள் தாலிச்சரடு மாற்றிக் கொள்ளும் வழக்கம் பல மாவட்டங்களில் காணப்படுகிறது. திருமணமாகாத பெண்களுக்கும் மஞ்சள் நூல் கயிறை கட்டிக் கொள்வது வழக்கம்.
இதுதவிர ஆடி மாதத்திற்கு மேலும் பல சிறப்புகள் உள்ளன. ஆடிக் கிருத்திகை தமிழ் கடவுளான முருகனுக்கு உகந்த நாளாகும். இதேபோல் வைணவத் தலங்களில் ஆடிப்பூரம் விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது.
உழவர்கள் இம்மாதத்தில் தான் விதைகளை தூவி வேளாண் பணிகளை தொடங்குகின்றனர். இதைத்தான் 'ஆடிப்பட்டம் தேடி விதை' என்பார்கள்.
ஆடியில் வேறு எந்த காரியங்களும் செய்யக்கூடாது என்று ஒரு கருத்து நிலவுகிறது. அம்மனின் நினைவைத் தவிர வேறு எதையும் சிந்திக்கக் கூடாது என்பதை வலியுறுத்தவே இவ்வாறு கூறப்படுகிறது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» போன மாதம் நிச்சயதார்த்தம், இந்த மாதம் முறிவு: இது பூஜா காந்தி ஸ்டைல்
» மீனாட்சி அம்மனுக்கு ஏப்.,21ல் பட்டாபிஷேகம்!
» பத்ரகாளி அம்மனுக்கு 108 பால்குட அபிஷேகம்
» தை அமாவாசை திருவிழா திருக்கடையூர் அபிராமி அம்மனுக்கு ரூ.5 கோடி ரத்தின அங்கி சாத்தல்
» சரஸ்வதிக்கு உகந்த நைவேத்யம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum