தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

குழந்தைத் திருமணத் தடைச் சட்டம்

Go down

குழந்தைத் திருமணத் தடைச் சட்டம் Empty குழந்தைத் திருமணத் தடைச் சட்டம்

Post  meenu Thu Feb 07, 2013 2:36 pm


குழந்தைத்திருமணத் தடைச்சட்டத்தை, சாரதா சட்ட‍ம் என்று பரவ லாக அறியப்பட்டுள்ள செய்தியாகும். எனினும் அதற்குச் சாரதா சட்ட ம் என்னும் பெயர் எப்படி வந்தது என்பது ஒருபுறமிருக்க, அதனை நிறைவேற்றுவ தற்கு வெள்ளையர் அரசு எடுத்த முயற் சிகள் மற்றும் அதற்குத் துணையாக நின் ற திராவிட இயக்கத்தின் செயல்பாடுக ள், அதனைத் தடுத்து நிறுத்தப் பார்ப்பன ர்கள் செய்த பல்வேறு முயற்சிகள் ஆகி யன குறித்து, இன்றைய தலைமுறை, குறிப்பாகப் பெண்கள் அறிந்தி டல் வேண்டும்.
19ஆம் நூற்றாண்டின் இறுதியிலேயே, இதுபோன்ற ஒரு சட்டத்தைக் கொண்டுவர ஆங்கிலேய அரசு முயன் றது. குஜராத்தைச் சேர்ந்த, பி. எம்.மல பாரி என்பவர், அரசுக்கு எழுதிய கடிதம் முதல் தூண்டுதலாக இருந்தது. 1880 களில் அந்தக் கடிதம் எழுதப்பட்டது. 5 வயது, 6 வயதுப் பெண் குழந்தைகளுக் கெல்லாம் திருமணம் செய்யும் கொடு மையை அரசு தலையிட்டு உடனே நிறு த்த வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் மலபாரி குறிப்பிட்டி ருந்தார். அது லண்டன் வரை சென்று, பல விவா தங்களுக்கு உள்ளாகி, இறுதியில் 1891 ஜனவரியில் சட்ட முன்வடி வாக அரசினால் முன்வைக்கப்பட்டது.
வெகுண்டு எழுந்தார் பாலகங்காதர திலகர். தன்னுடைய கேசரி இத ழில் இது குறித்த மிகக் கடுமையான கண்ட னங்களையும், கட்டுரைகளையும் வெளியிட த் தொடங்கினார். இந்து மதத்தின் அடிப்படைக் கூறுகளில் எல்லாம் கைவைப்பதற்கு வெள் ளைக்காரர்களுக்கு எந்த உரிமையும் இல்லை என்று முழங்கினார். அவருடைய எழுத்து களுக்கு, அன்று இந்தியா முழுவதும் இருந்த, இந்துக்களிடையே பேராதரவு கிடைத்தது. இது போன்றதொரு சட்டத்தை எக்காரணம் கொண்டும் நிறைவேற்ற விடமாட்டோம் என் றார் திலகர்.
இவ்வளவுக்கும் அந்த சட்டம், ஒரு சாதாரண செய்தியைத் தான் முன் வைத்தது. 12 வயது நிறைவடைந்த பின்பே பெண்களுக்குத் திரும ணம் செய்ய வேண்டும் என்றும், பருவம டைந்த பின்பே உடலுறவுக்கு அவர்க ள் அனுமதிக்கப்பட வேண்டும் என்று ம் அந்தச் சட்டம் முன் மொழிந்தது. இது நியாயமாகத்தான் படுகிறது என் று மராட்டியத்தைச் சேர்ந்த டாக்டர் பண்டார்க்கர் போன்றவர்கள் கருத்து வெளியிட்டனர். நீதிபதி ராணடே, இந்தச் சட்டமுன்வடிவிற்கு ஆத ரவாகத் தன்னுடைய சர்வஜன சபாவில் தீர்மானமே நிறைவே ற்றினார். இவர்கள் இருவரும்கூட, பிறப்பால் பார்ப்பனர்களே எனி னும், சமூகச் சீர் திருத்த எண்ணம் கொ ண்டவர்களாக இருந்தனர். திலகரின் கடுமையான கண்டனத்திற்கு இவர்க ளும் தப்பவி ல்லை.
மலபாரி, பார்சி மதத்தைச் சார்ந்தவர் என்பதால், அவருக்கு இந்து மதப் பண் பாடுகளில் தலையிடுவதற்கு எந்த உரிமையும் இல்லை என்று திலகர் எடுத்துவைத்த வாதம் மக்களிடையே வெகுவாக வரவேற் பைப் பெற்றது. ஆதரவு குறைவாகவும், எதிர்ப்பு மிகக் கூடுதலாகவும் ஆகிவிட்ட நிலையில், அச்சட்ட முன்வடிவை அரசு திரும்பப் பெற்று க் கொண்டுவிட்டது.
மீண்டும் 1913இல் அதே மாதிரியான இன்னொரு சட்ட முன்வடிவை அரசு கொண்டுவந்தது. அப்போதும் ஆச்சார்யா போன்ற பார்ப்பனர் கள் சட்ட மன்றத்திலேயே கடுமையாக எதிர்த்த னர். ‘பூப்படையாத பெண்க ளுக்குத் திருமணம் செய்தால் சிறை த் தண்ட னை என்கிறது உங்கள் அரசு. பூப் படைவதற்குள் திருமணம் செய்ய வில்லை நரகத்திற்குப் போ வீர்கள் என்கிறது எங்கள் இந்து மதம். நாங்கள் என்ன செய்வது?’என்றார் ஆச்சார்யா. அச்சட்ட முன் வடிவை, மெய்யறம் என்னும் தன் நூலில் வ.உ.சி. வரவேற்று எழுத, அதே நூலின் முன்னு ரையில், சுப்பிரமணிய சிவா அதனைக் கண் டித்து எழுதி உள்ளதை நம்மில் பலர் அறி வோம். இப்படிப் பல்வேறு ஆதரவு எதிர் ப்புகளுக்கு ப்பின் மீண்டும் அது கிடப்பில் போடப்பட் டது.
1920களில் நீதிக்கட்சி ஆட்சிக்கு வந்தது. 1926இல் சுயமரியாதை இய க்கம் தந்தை பெரியாரால் தோற்றுவிக்கப்பட்டது. அத ன் பிறகுதான் தமிழ்நாட்டில் பெண் விடு தலை இயக்கங்கள் வீறுகொண்டு எழுந் தன. 19ஆம் நூற்றாண்டின் இறுதியிலே யே நீதிபதி மயூரம் வேதநாயகம் பிள்ளை போன்ற பெரியவர்களும், 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பாரதியார் போன்ற மாகவிஞ ர்களும் பெண்விடு தலைக்காக எழுதிக் குவித்தனர் என்றாலும்,
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி
பெரியாருக்குப் பிறகே அது ஓர் இயக்கக் கோட்பாடாக வளர்ச்சி பெற் றது. அதன் விளைவாகப் பெண் கள் பலரே போராட்டக் களத்திற்கு வந்துசேர்ந்தனர். சிறு வயதுப் பெண் குழந்தைகளுக்குத் திருமணம் செய் யும் கொடு மையைத் தகர்ப்போம் என்று முழங்கினர். டாக்டர் முத்து லட் சுமி ரெட்டி போன்ற வர்கள் அம் முயற்சியில் முன்னின்று பணியாற் றினர்.
இச்சூழலைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு, 1929இல் மீண்டும் ஒரு முயற்சி நடைபெற்றது. இம்முறை அச்சட்ட முன்வடிவை ஹாபி லாஸ் சார்தா என்னும் ஆங்கிலேயர் முன் மொழிந்தார். அதனால் தான் அச்சட்டம் சார்தா சட்டம் என்று அறியப்பட்டு, காலப்போக்கில் சாரதாச் சட்டம் ஆகிவிட்டது. 1929 செப்டம்பர் 28 ஆம் நாள் அது சட்டமாக நிறைவேற்ற ப்பட்டது. 1930 ஏப்ரல் 1 முதல் நடைமு றைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்ட து.
ஆனாலும் நடைமுறையில் குழந்தைத் திருமணங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் இருந்திருக் கின்றன. எப்படி வரதட்சணை தடைச் சட்டமும், வெளிப்படையாக வே வரதட்சணை வாங்கும் பழக்கமும் இன்று ஒருசேர நடைமு றையில் உள்ளனவோ, அது போல வே அன்றும் நடந்திருக்கிறது. 1929ஆம் ஆண்டு செங்கல்பட் டில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க முதல் மாநாடுதான், பெண் விடுத லை யில் பல புதிய மைல் கற்க ளை த் தொடக்கி வைத்துள்ளது. வெறும் சட்டங்களால் மட்டும் எல்லாவற் றையும் சாதித்து விட முடியா து என்பதைத் தந்தை பெரியார் அறிந்து வைத்திருந்தார். அதே வேளையில் சட்டத்தின் துணையும் அவசியத் தேவை என்பதையும் அவர் உணர்ந்திருந்தார். அதனால் தான் திரா விட இயக்கம் இருமு னைகளிலும் சமூக மாறுதலுக்காக முனைந்து பணியாற்றியது. சாரதாச் சட் டம் போன்ற பல்வேறு சட்டங்கள் அப்படி த்தான் உருப் பெற்றன.
மாற்றம் தேவை, மாற்றம் தேவை என்று பலரும் இன்று கூறிக்கொண்டிருக்கிறார் கள். மாற்றம் என்பது எப்போதும் வளர்ச் சியை நோ க்கியதாக இருக்க வேண்டும். இல்லையானால் அது ஏமாற்றமாக வோ, தடுமாற்றமாகவோதான் ஆகிவிடும். உண்மை யான, வளர்ச்சி நோக்கிய பல சமூக மாற்றங் கள் திராவிட இயக்க த்தினால்தான் இம்மண்ணில் ஏற்பட்டன என்பத ற்கு இன்னும் பல வரலாற்றுச் சான் றுகள் உண்டு
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum