கத்திரிக்காய் மிளகு வறுவல்
Page 1 of 1
கத்திரிக்காய் மிளகு வறுவல்
மழைக்காலங்களில் நன்கு காரசாரமாய் உண்ண வேண்டும் என்று தோன்றும். அப்படி நன்கு காரசாமாய், உடலுக்கு ஆரோக்கியமாய் இருக்கும் வகையில் ஈஸியாக செய்து சாப்பிட கத்திரிக்காய் மிளகு வறுவல் சிறந்தது. அது செய்வது மிகவும் எளிமையானது. இந்த வறுவல் மதிய வேலைகளில் உணவுக்கு சைடு டிஸ் ஆக சாப்பிட்டால் மிகவும் அருமையாக இருக்கும்.
தேவையான பொருட்கள் :
கத்திரிக்காய் - 1/4 கிலோ
வெங்காயம் - 1
பச்சைமிளகாய் - 2
கடுகு - 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
மஞ்சத்தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகுத்தூள் - 1 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை :
முதலில் வெங்காயத்தை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பிறகு கத்தரிக்காயை நீளமாக சற்று பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பின் பச்சை மிளகாயை நீளமாக நறுக்கிக் கொள்ளவும்.
பிறகு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அதில் கத்தரிக்காய், மஞ்சள் தூள் மற்றும் உப்பு போட்டு 5 நிமிடம் வேக வைத்து இறக்கி, நீரை வடிகட்டவும்.
பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, நறுக்கிய பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
பிறகு அதில் வெங்காயம் போட்டு நன்கு பொன்னிறமாக வதக்கவும். பின் வடிகட்டி வைத்த கத்தரிக்காய் சேர்த்து கிளறி, மிளகுத்தூளை அதோடு சேர்த்து நன்கு சுருள கிளறி இறக்க வேண்டும்.
இப்போது நன்கு காரசாரமான கத்தரிக்காய் மிளகு வறுவல் ரெடி!!!

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பெங்களூர் கத்திரிக்காய் மிளகு கூட்டு
» உருளைக்கிழங்கு மிளகு வறுவல்
» சிக்கன் மிளகு வறுவல்
» காலிப்ளவர் மிளகு வறுவல்
» உருளைக்கிழங்கு மிளகு வறுவல்
» உருளைக்கிழங்கு மிளகு வறுவல்
» சிக்கன் மிளகு வறுவல்
» காலிப்ளவர் மிளகு வறுவல்
» உருளைக்கிழங்கு மிளகு வறுவல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum