ஓணம் ரெசிபி!!! அரிசி புட்டு...
Page 1 of 1
ஓணம் ரெசிபி!!! அரிசி புட்டு...
ஓணம் பண்டிகையை முன்னிட்டு, கேரளாவில் இருக்கும் அனைவரும் மிகவும் சுவையான உணவுகளை சமைத்து சாப்பிடுவர். அதிலும் ஓணம் பண்டிகை பத்து நாட்கள் நடைபெறுவதால், ஒவ்வொரு நாளும் அனைவரது வீடுகளிலும், விதவிதமான உணவுகளை சமைத்து உண்பர். அதில் ஒன்று தான் அரிசி புட்டு. புட்டு என்றாலே அது கேரளா தான் என்று அனைவருக்குமே தெரிந்த விஷயம். அத்தகைய கேரளா உணவான அரிசி புட்டுவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
Rice puttu
தேவையான பொருட்கள் :
அரிசி மாவு - 4-5 கப்
தேங்காய் - 2-3 கப் (துருவியது)
தண்ணீர் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
முதலில் ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீரை ஊற்றி, அதில் சிறிது உப்பை போட்டு கொதிக்க விட்டு இறக்கவும்.
பின்னர் மற்றொரு பாத்திரத்தில் அரிசி மாவை போட்டு, அதில் கொதிக்க வைத்துள்ள உப்பு நீரை விட்டு, புட்டுக்கு ஏற்றவாறு கலந்து கொள்ளவும். (முக்கியமாக தண்ணீர் அதிகமாக ஊற்றிவிட வேண்டாம். அதற்காக மிகுந்த வறட்சியுடனும் இருக்கக் கூடாது.)
பின்னர் அந்த புட்டு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் 1- 1 1/2 கப் தண்ணீரை ஊற்றி, அந்த பாத்திரத்தில் கொடுத்திருக்கும் சிறு மூடியை வைத்து மூடி கொதிக்கவிடவும். பின்னர் புட்டு பாத்திரத்தில் நீளமாக இருக்கும் குழாயில், முதலில் சிறிது புட்டு மாவு சிறிது போட்டு, பின்னர் துருவிய தேங்காயை போட்டு, மறுபடியும் புட்டு மாவைப் போட்டு, குழாய் நிரம்பும் வரை தொடர்ந்து செய்யவும்.
பிறகு அந்த குழாயை புட்டு பாத்திரத்தின் மேல் வைத்து, 5-6 நிமிடம் ஆவியில் வேக வைக்கவும். பின்னர் அதனை வெளியில் எடுத்து பரிமாறவும்.
மற்றொரு முறை :
புட்டு பாத்திரத்திற்கு பதிலாக இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிட்டு, இட்லித் தட்டில் இட்லித் துணியை விரித்து, அதில் பிசைந்து வைத்துள்ள புட்டு மாவை தூவி, மூடி போட்டு வேக வைத்து இறக்கி பரிமாறலாம்.
இப்போது ஈஸியான அரிசிப் புட்டு ரெடி!!! இதனை சாம்பார் அல்லது சர்க்கரை தேங்காய் துருவல் துவியும் சாப்பிட்டால், மிகவும் சுவையாக இருக்கும்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஓணம் ஸ்பெஷல் ரெசிபி!!!
» கவுனி அரிசி புட்டு
» ஓணம் பண்டிகையின் ஸ்பெஷல்
» நா...ஊறும்... முட்டை ஸ்பாஞ்ச் ரெசிபி!!!
» ஓணம் பண்டிகையின் உணவு
» கவுனி அரிசி புட்டு
» ஓணம் பண்டிகையின் ஸ்பெஷல்
» நா...ஊறும்... முட்டை ஸ்பாஞ்ச் ரெசிபி!!!
» ஓணம் பண்டிகையின் உணவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum