சூப்பரான... வாழைக்காய் பஜ்ஜி
Page 1 of 1
சூப்பரான... வாழைக்காய் பஜ்ஜி
மாலை நேரத்தில் வீட்டில் டீ போட்டு குடித்தாலே, ஸ்நாக்ஸ் எதையாவது சாப்பிட வேண்டும் என்று தோன்றும். அந்த நேரத்தில் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து, சற்று சூடாகவும், உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும் வகையிலும், வாழைக்காயை வைத்து ஒரு பஜ்ஜி செய்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும். இப்போது அந்த வாழைக்காய் பஜ்ஜியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
வாழைக்காய் - 1
கடலை மாவு - 1/2 கப்
அரிசி மாவு - 1/2 கப்
மைதா மாவு - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
சோடா உப்பு - 1 சிட்டிகை
பெருங்காயத் தூள் - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் வாழைக்காயை நீளமாக சீவிக் கொள்ளவும். பிறகு ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, மைதா மாவு, மிளகாய் தூள், சோடா உப்பு, பெருங்காயத் தூள், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்து வைத்துக் கொள்ளவும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் சீவி வைத்துள்ள வாழைக்காய் துண்டுகளை, மாவில் முன்னும் பின்னும் பிரட்டி, எண்ணெயில் போட்டு, பொரித்து எடுக்க வேண்டும்.
இப்போது சுவையான வாழைக்காய் பஜ்ஜி ரெடி!!! இதனை தேங்காய் சட்னியுடன் தொட்டு சாப்பிட்டால், அருமையாக இருக்கும்.
குறிப்பு: சோடா உப்பு விரும்பாதவர்கள், ஒரு கரண்டி தோவை மாவை சேர்த்துக் கொள்ளலாம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சூப்பரான… வாழைக்காய் பஜ்ஜி
» சமையல்:வாழைக்காய் பஜ்ஜி
» சூப்பரான... சன்னா உசல்!!!
» ஓமவல்லி பஜ்ஜி
» சூப்பரான வெண்டைக்காய் பொரியல் செய்வது எப்படி?
» சமையல்:வாழைக்காய் பஜ்ஜி
» சூப்பரான... சன்னா உசல்!!!
» ஓமவல்லி பஜ்ஜி
» சூப்பரான வெண்டைக்காய் பொரியல் செய்வது எப்படி?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum