சுவையான... வெங்காய புலாவ்
Page 1 of 1
சுவையான... வெங்காய புலாவ்
எப்போதும் ஒரே மாதிரியான சாதம், குழம்பு, சாம்பார் என்று சமைத்து போர் அடித்து விட்டதா? அப்படி இருந்தால், அப்போது சற்று வித்தியாசமாக காலையிலோ அல்லது மதிய வேளையிலோ வெங்காயத்தை வைத்து ஒரு புலாவ் செய்து, அதற்கு உங்களுக்கு பிடித்த ஏதேனும் ஒரு கிரேவியுடன் சாப்பிட்டால், சுவையாக இருக்கும். இப்போது அந்த வெங்காய புலாவ் எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
பாசுமதி அரிசி - 2 கப் (1/2 மணிநேரம் ஊறவைத்தது)
வெங்காயம் - 2 (நறுக்கியது)
கேரட் - 1 (நறுக்கியது)
சீரகம் - 1 டீஸ்பூன்
கிராம்பு - 5
பட்டை - 1
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
நெய் - 1 டேபிள் ஸ்பூன்
சின்ன வெங்காயம் - 6 (தோலுரித்தது)
வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
சர்க்கரை - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
* ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து தண்ணீரை ஊற்றி கொதிக்க வைத்து, பின் அதில் சின்ன வெங்காயத்தை போட்டு 5 நிமிடம் வேக வைத்து இறக்கி, தனியாக வைத்துக் கொள்ளவும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து காய்ந்ததும் அதில் நெய்யை ஊற்றி, சீரகத்தை போட்டு தாளிக்கவும்.
* பின் அதில் வெங்காயத்தை போட்டு, கிராம்பு மற்றும் பட்டையை போட்டு, நன்கு 2-3 நிமிடம் வதக்க வேண்டும்.
* பிறகு அத்துடன் கேரட் மற்றும் பச்சை மிளகாயை போட்டு 2 நிமிடம் வதக்க வேண்டும்.
* பின் பாசுமதி அரிசியை கழுவி, அதோடு சேர்த்து 2 நிமிடம் தீயை குறைவில் வைத்து வதக்க வேண்டும். வதக்கியதும் அதில் 3 கப் தண்ணீரை ஊற்றி, தேவையான அளவு உப்பை சேர்த்து, ஒரு 10 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* அதே சமயம் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெயை போட்டு உருகியதும், சர்க்கரை மற்றும் வேக வைத்துள்ள சின்ன வெங்காயத்தை சேர்த்து, தீயை குறைவில் வைத்து, 3-4 நிமிடம் மூடி போட்டு வேக வைக்க வேண்டும்.
* வெங்காயம் நன்கு வதங்கியதும், அதனை வெந்து கொண்டிருக்கும் அரிசியுடன் சேர்த்து கலந்து, மற்றொரு 10 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
இப்போது சுவையான வெங்காய புலாவ் ரெடி!!! இதனை ஊறுகாய் அல்லது ஏதேனும் ஒரு சைடு டிஷ் உடன் சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சின்ன வெங்காய புலாவ்
» பூண்டு-வெங்காய புலாவ்
» சமையல்:பூண்டு-வெங்காய புலாவ்
» சுவையான மனிதர்கள், சுவையான சம்பவங்கள்
» வெங்காய தொக்கு
» பூண்டு-வெங்காய புலாவ்
» சமையல்:பூண்டு-வெங்காய புலாவ்
» சுவையான மனிதர்கள், சுவையான சம்பவங்கள்
» வெங்காய தொக்கு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum