சுவையான...வெண்ணெய் இறால்!!!
Page 1 of 1
சுவையான...வெண்ணெய் இறால்!!!
கடல் உணவானது உடலுக்கு மிகவும் சிறந்தது. அதிலும் இறாலை சமைத்தால், தொக்கு, கிரேவி என்று தான் செய்திருப்போம். ஆனால் இந்த இறாலை வைத்து வீட்டிலேயே சுவையான ஒரு மலேசியன் ஸ்டைல் உணவான வெண்ணெய் இறாலை செய்யலாம். அது எப்படியென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள் :
இறால் - 10
வெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 6
கிராம்பு - 3
பூண்டு - சிறிது
சர்க்கரை - 1 டீஸ்பூன்
சோயா சாஸ் - 1/2 டீஸ்பூன்
சைனீஸ் வைன் - 1 டேபிள் ஸ்பூன்
தேங்காய் - 1 கப்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை :
முதலில் இறாலின் தலையை வெட்டி நீக்கிவிடவும். பின் அந்த இறாலை சுத்தமாக கழுவி வைத்துக் கொள்ளவும். பின் பச்சை மிளகாய், கறிவேப்பிலை மற்றும் பூண்டை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி நன்கு சூடானதும், அந்த எண்ணெயில் இறாலைப் போட்டு வறுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
அடுத்து ஒரு சிறு வாணலியை அடுப்பில் வைத்து அதில் துருவிய தேங்காயைப் போட்டு பொன்னிறமாக வறுத்து வைத்துக் கொள்ளவும். பின் கிராம்பை தனியாக வறுத்து பொடி செய்து கொள்ளவும்.
பிறகு மற்றொரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து வெண்ணெய் ஊற்றி, உருகியதும் அதில் நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை, பூண்டு, கிராம்புப் பொடி மற்றும் உப்பு சேர்த்து நன்கு 2 நிமிடம் வதக்கவும்.
பிறகு அத்துடன் வறுத்த இறால், சர்க்கரை, சோயா சாஸ், சைனீஸ் வைன் மற்றும் வறுத்த தேங்காயை சேர்த்து 1-2 நிமிடம் நன்கு வதக்கி, அந்த சாறானது இறாலில் இறங்கும் வரை நன்கு கிளறி விட்டு இறக்கவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சுவையான இறால் மீன் வறுவல்
» சுவையான இறால் மீன் வறுவல்
» இன்றைய சமையல் சூடான சுவையான இறால் பொரியல்
» வெண்ணெய், நெய் வகை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum