தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அல்லாஹ்(ஜல்) நபியவர்களுக்கு அருள்புரிகிறான்.

Go down

அல்லாஹ்(ஜல்) நபியவர்களுக்கு அருள்புரிகிறான். Empty அல்லாஹ்(ஜல்) நபியவர்களுக்கு அருள்புரிகிறான்.

Post  amma Thu Dec 27, 2012 10:53 pm

அல்லாஹ்(ஜல்) நபியவர்களுக்கு அருள்புரிகிறான். மலக்குகள் நபியவர்களுக்காக துஆ செய்கின்றனர். நம்பிக்கையாளர்களே! நீங்களும் அந்த நபிமீது ஸலவாத் (என்னும் துஆவை) கூறுங்கள்! அவர்மீது ஸலாமும் கூறுங்கள்.” (அல்குர்ஆன்)

மேற்கூறிய வசனத்திற்கு நம் தமிழகத்தில் தவறாகவே பொருள் கொள்ளப்படுகின்றது. “அல்லாஹ் ஸலவாத் கூறுகிறான்” என்று பல தமிழக அறிஞர்கள் தவறாக பொருள் தருகின்றனர்.
அல்லாஹ் ஸலவாத் கூற முடியுமா?

“ஸலவாத்” என்று சில துஆக்களை நபி(ஸல்) அவர்கள் நமக்குக் கற்றுத் தந்தார்கள். அவை அனைத்துமே நபி(ஸல்) அவர்களுக்காக நாம் அல்லாஹ்விடம் துஆ செய்யும் விதமாகவே அமைந்துள்ளன. “ஸலவாத்” களில் மிகவும் உயர்ந்த “அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின், கமா ஸல்லைத்த” என்று தொடங்கும் ஸலவாத்துக்கு உரிய பொருளைப் பார்ப்போம்.

“யா அல்லாஹ்! இப்ராஹிம்(அலை) அவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் நீஅருள் புரிந்ததைப் போல், முஹம்மது(ஸல்) அவர்கள் மீதும், அவர்களின் குடும்பத்தினர் மீதும் நீ அருள் புரிவாயாக”

அதாவது ஸலவாத் சொல்வது என்றால் நாம் நபி(ஸல்), அவர்களுக்காக துஆ செய்கிறோம் என்பதுபொருள்.

“அல்லாஹ் ஸலவாத் சொல்கிறான்” என்று பொருள் கொண்டால் “அல்லாஹ் துஆ செய்கிறான்” என்று கருத்துக் கிடைக்கும். அல்லாஹ் எப்படி துஆ செய்ய முடியும்? இன்னொருவனை அழைத்து அருள்புரியுமாறு கேட்பவன் எப்படி இறைவனாக முடியும்?

அதனால்தான் திருக்குர்ஆனின் அனைத்து விரிவுரையாளர்களும் “அல்லாஹ்வுடன் ஸலவாத் என்ற பதம் இணையும்போது, அல்லாஹ் அருள் புரிகிறான் என்று பொருள் கொள்ள வேண்டும்” எனக் கூறியுள்ளனர். எனவே அல்லாஹ் ஸலவாத் கூறுகிறான் என்பவர்கள் தவறான கருத்திலேயே இருக்கின்றார்கள். அவன் இப்படி அருள்புரிவது நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மீது மட்டுமல்ல, எல்லா அடியார்களுக்கும் அவன் அருள் புரிந்து கொண்டே இருக்கிறான் (மூமின்களே)” உங்கள் மீது அவன் அருள்புரிகிறான்” (அல்குர்ஆன்) நபி அவர்களுக்குப் பயன்படுத்திய யுஸல்லூன என்ற பன்மைப் பதத்தி், ஒருமைப் பதமாகிய “யுஸல்லீ” என்ற பதத்தைப் பிரயோகம் செய்திருக்கிறான்.

மொத்தத்தில் அல்லாஹ்வுடைய ஸலவாத் என்ற அருள் மூமின்கள் அனைவருக்கும் பொதுவானது. நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுக்கு மட்டும் அல்லாஹ் அருள்புரியவில்லை, என்பதை மேற்கூறிய வசனத்திலிருந்து நாம் தெரியலாம்..
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum