தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சுவாமி விவே கானந்தர் ஆற்றிய அற்புத உரை

Go down

சுவாமி விவே கானந்தர் ஆற்றிய அற்புத உரை  Empty சுவாமி விவே கானந்தர் ஆற்றிய அற்புத உரை

Post  meenu Mon Feb 04, 2013 12:29 pm


1893 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதியன்று அமெரிக்கா வின் சிகாகோ நகரில் நடைபெற்ற‍ உலக ஆன் மீக மாநாட்டில் ஒன்றில் சுவாமி விவே கானந்தர் ஆற்றிய அற்புத உரையற்றினார். அந்த அற்புத உரையை, எனது அருமை அமெரிக்க‍ சகோதரிக ளே! சகோதரர்களே! என்று தொடங்கியிருப்பா ர். இந்த ஒற்றை வரிக்கு அமெரிக்கர்கள் அகமகி ழ்ந்து, நீண்ட நேரம் கரவொலி எழுப்பி தத்தமது மகிழ்ச் சியையும், பாராட்டுதல்களையும் தெரிவி த்த‍னர்.
அவர் ஆற்றிய உரையை, எழுத்துருவில் மட்டும் அல்லாமல் வீடியோ மற்றும் ஆடியோவாகவும் பகிர்ந்துள்ளேன். படித்துக் பார்த்துக் கேட் டு, அந்த வீரத்துறவி சுவாமி விவேகானந்தரின் திருவடிகளை வ‌ண ங்கி, அவர் வழி நடப்போம்
அமெரிக்க சகோதரிகளே, சகோதரர்க ளே!
இன்பமும் இதமும் கனிந்த உங்கள் வரவேற்புக்கு மறுமொழிகூற இப்போது உங்கள் முன் நிற்கிறேன். என் இதயத்தில் மகிழ்ச்சி பொங்குகிறது. அதனை வெளி யிட வார்த்தைகள் இல்லை. உலகத்தின் மிகப்பழமை வாய்ந்த துறவியர் பரம்ப ரையின் பெயரால் உங்களுக்கு நன்றி கூறுகிறேன். அனைத்து மதங்களின அன் னையின் பெய ரால் நன்றி கூறுகிறேன். பல்வேறு இனங்களையும் பிரிவுகளையு ம் சார்ந்த கோடிக் கணக்கான இந்துப் பெருமக்களின் பெயரால் நன்றி கூறுகிறேன்.
இந்த மேடையில் அமர்ந்துள்ள பேச்சாளர்களுள் சிலர் கீழ்த்திசை நாடுகளிலிருந்து வந்துள்ள பிரதிநிதிகளைப் பற்றிக் குறிப்பிடும்போ து, ‘வேற்று சமய நெறிகளை வெ றுக்காத பண்பினைப் பல நாடுக ளுக்கு எடுத்துச் சென்ற பெருமை, தொலைவிலுள்ள நாடுகளிலிரு ந்து வந்துள்ள இவர்களைத்தான் சாரும்’ என்று உங்களுக்குக் கூறினார்கள். அவர்க ளுக்கும் என் நன்றி. பிற சமயக் கொள்கை களை வெறுக்காமல் மதித்தல், அவற்றை எதிர்ப்பு இன்றி ஏற்றுக் கொள்ளு தல், ஆகிய இருபண்புகளை உலகத்திற்குப்புகட்டிய மத த்தைச் சார்ந் தவன் நான் என்பதில் பெருமை அடைகிறேன். எதையும் வெறுக் காமல் மதிக்க வேண்டும் என்னும் கொள்கையை நாங்கள் நம்புவ தோடு, எல்லா மதங்களும் உண்மை என்று ஒப்புக் கொள்ளவும் செய்கி றோம். உலகிலுள்ள அனைத்து நாடுகளாலு ம் அனைத்து மதங்களாலும் கொடுமைப் படுத்தப்பட்டவர்களுக்கும், நாட்டை விட்டு விரட்டி அடிக்கப்பட்டவர் களுக்கும் புகலிடம் அளித்த நாட்டைச் சேர்ந்தவன் நான் என்பதில் பெருமைப்படுகிறேன். ரோமானியரின் கொடுமையால், தங்கள் திரு க்கோயில் சிதைந்து சீரழிந்த அதே வருடம் தென்னிந் தி யா விற்கு வந்து எங்களிடம் தஞ்சமடைந்த அந்தக் கலப்ப ற்ற இஸ்ரேல் மரபினர்களுள் எஞ்சி நின்றவர்களை மன மாரத் தழுவி த் கொண்டவர்கள் நாங்கள் என்று கூறிக் கொள்வதில் பெருமைப்படுகி றேன். பெருமை மிக்க சொராஸ்டிரிய மதத்தின ரில் எஞ்சி யிருந்தோருக்கு அடை க்கலம் அளித்து, இன்னும் பேணிக் காத்து வருகின்ற சமயத் தைச் சார்ந்தவன் என்பதில் பெருமை கொள் கிறேன்.
என் அருமைச் சகோதரர்களே! பிள்ளைப் பருவத்திலிருந்தே நான் பாடிப் பயின்று வருவதும், கோடிக்கணக்கான மக்களால் நாள்தோ றும் இன்றும் தொடர்ந்து ஓதப்பட்டு வருவதுமான பாடலின் ஒரு சில வரிகளை இங்கு, உங்கள் முன் குறிப்பிட விரும்புகிறேன்:
“எங்கெங்கோ தோன்றுகின்ற ஓடையெல்லாம்
இறுதியிலே கடலில் சென்று
சங்கமாம் பான்மையினைப் போன்றுலகோர்
பின்பற்றும் தன்மை யாலே
துங்கமிகு நெறி பலவாய் நேராயும்
வளைவாயும் தோன்றி னாலும்
அங்கு அவைதாம் எம்பெரும! ஈற்றில் உனை
அடைகின்ற ஆறே யன்றோ!”
இதுவரை நடந்துள்ள மாநாடுகளில், மிக மிகச் சிறந்ததாகக் கருதக் கூடிய இப்பேரவை, கீதை யில் உபதேசிக்கப்பட்டுள்ள பின்வரும் அற்புதமா ன ஓர் உண்மையை உலகத்திற்குப் பிரகடனம் செய்துள்ளது என்பதைக் குறிப்பிட விரும்புகிறே ன்: ‘யார் எந்த வழியாக என்னிடம் வர முயன்றா லும், நான் அவர்களை அடைகிறேன். ஒவ்வொரு வரும் ஒவ்வொரு வழிகளில் என்னை அடைய முயல்கிறார்கள். அவை எல்லாம் இறுதியில் என்னையே அடைகி ன்றன.’
பிரிவினைவாதம், அளவுக்கு மீறிய மதப்பற்று, இவற்றால் உண்டான மதவெறி, இவை இந்த அழகிய உலகை நெடுநாளாக இறுகப் பற்றியு ள்ளன. அவை இந்த பூமியை நிரப்பியுள்ள ன. உலகை ரத்த வெள்ளத்தில் மீண்டும் மீண்டும் மூழ்கடித்து, நாகரீகத்தை அழித் து, எத்த னையோ நாடுகளை நிலைகுலை யச் செய்துவிட்டன. அந்தக் கொடிய அரக் கத்தனமான செயல்கள் இல்லாதிருந்தால் மனித சமுதாயம் இன்றிருப்பதை விடப் பல மடங்கு உயர்நிலை எய்தியிருக்கும்!
அவற்றிற்கு அழிவு காலம் வந்து விட்டது. இன்று காலையில் இந்தப் பேரவையின் ஆரம்பத்தைக் குறிப்பிட முழங்கிய மணி, மத வெறிகளுக்கும், வாளாலும் பேனாவா லும் நடைபெறுகின்ற கொடுமைகளுக்கும் , ஒரே குறிக்கோளை அடைய பல்வேறு வழிகளில் சென்று கொண் டிருக்கும் மக்களிடையே நிலவும் இரக்கமற்ற உணர்ச்சிகளுக்கும் சாவு மணியாகும் என்று நான் திடமாக நம்புகிறேன்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum