தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஆலய வழிபாடும் - பலன்களும்

Go down

ஆலய வழிபாடும் - பலன்களும் Empty ஆலய வழிபாடும் - பலன்களும்

Post  birundha Sun May 26, 2013 2:40 pm


நாள் வழிபாடு: குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தினசரி 4 கால பூஜை நடைபெறுகிறது. முற்பகலில் காலசந்தியும், பகலில் உச்சிக்காலப் பூஜையும், மாலையில் சாயரட்சை பூஜையும், இரவில் இராக்காலப் பூஜையும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

வார வழிபாடு:

ஒவ்வொரு வாரமும் செவ்வாய் தோறும் சிறப்பு பூஜை நடைபெறுகிறது. வெள்ளி தோறும் முற்பகல் 10.30 மணி முதல் 12 மணி வரை ராகுகால வழிபாடு மகளிரால் நடத்தப்படுகிறது.

மாத வழிபாடு:

தமிழ்மாதக் கடைசிச் செவ்வாய் தோறும் மாதாந்திர விழா மிகவும் சிறப்பாக நடைபெறுகிறது. அன்றைய இரவில் அன்னை முத்தாரம்மன் திருத்தேரில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றாள். பவுர்ணமி தோறும் திருவிளக்கு வழிபாடு நடைபெறுகிறது. திருவிளக்கு வழிபாட்டில் மகளிர் பெருமளவில் கலந்து கொண்டு அன்னையின் அருளைப் பெறுகின்றனர்.

ஆண்டு வழிபாடு:

ஆவணி மாதம் திருவோணம் நட்சத்திரத்தில் வருசாபிஷேகம் சிறப்பாக நடைபெறுகிறது. அன்றைய தினம் அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு இரவில் அன்னை திருத்தேரில் திருவீதியுலா எழுந்தருளுகின்றாள்.

மாத விழாக்களும், பெருவிழாவும்:

தமிழ்ப்புத்தாண்டு (சித்திரை விசு) அன்று சிறப்பு வழிபாடுகளும் அலங்காரத் தீபாராதனைகளும் நடைபெறுகின்றன. ஆடி மாதம் மூன்றாம் செவ்வாய்க் கிழமை கொடை விழா கொண்டாடப்படுகிறது. ஆடி மாதம் இரண்டாம் செவ்வாய் இரவில் முளை இடும் விழாவும், அதனைத் தொடர்ந்து திங்களில் மாக்காப்பும் செவ்வாயில் கொடை விழாவும், புதனில் மஞ்சள் நீராட்டு விழாவும் நடைபெறுகின்றன.

ஆவணி விநாயகர் சதுர்த்தி உற்சவமும், இங்குச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. புரட்டாசி தொடங்கும் நவராத்திரி தசரா விழாவே எல்லா விழாக்களிலும் மிகச் சிறப்பான ஒன்றாக நடைபெறுகிறது. இதுவே இத்திருக் கோவிலின் பெருவிழாவும் ஆகும். இவ்விழா, தூத்துக்குடி மாவட்டத்தின் தென்பகுதி முழுவதையும் திருவிழாக்கோலமடையச் செய்து ஊர்கள் தோறும், இல்லந்தோறும் கொண்டாடப்படும் ஒரு மாபெரும் விழாவாக அமைந்து விட்டது.

ஐப்பசி விசு அன்று சிறப்புத் தீபாராதனைகளும் அன்னாபிசேகமும் நடைபெறுகின்றன. திருக்கார்த்திகை அன்று சிறப்பு வழிபாடுகளும் அம்பாள் திருத்தேரில் எழுந்தருளிச் சொக்கப்பனைத் தீபம் ஏற்று தல் உற்சவமும் சிறப்பாக நடைபெறுகின்றன. மார்கழி மாதம் தனுர் மாத வழிபாடு சிறப்பாக நடைபெறுகிறது.

இம்மாதத்தில் அதிகாலை 3.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, அதிகாலை 5.00 மணிக்குத் தனுர் மாதப்பூசை நடைபெறுகிறது. தைப் பொங்கல் - தமிழர் பெரும் திருவிழா இங்குச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இது உத்திராயண கால வழிபாடு எனவும் போற்றப்படுகிறது. மாசி மாதம் மகா சிவராத்திரி விழா சிறப்பாக நடைபெறுகிறது.

``ஆலயம் தொழுவது சாலவும் நன்று'' என்னும் முதுமொழிக்கு ஏற்ப பக்தர்கள் ஆலயத்துக்கு வந்து இறைவன் - இறைவியைத் தரிசித்து விட்டு அடியிற் குறிப்பிடப்பட்ட வழிபாடுகள் செய்து பலன் பெறுகின்றனர்.

பொங்கல் வழிபாடு:

ஆன்மாவின் அகங்காரம், கோபம், மோகம் இவைகளை அன்னமாக வேக வைத்து இறைவனுக்கு சமர்ப்பணம் செய்வது. அபிஷேகங்கள்:..... எண்ணெய், மாப்பொடி, நெல்லிப்பொடி, மஞ்சள்பொடி பஞ்சகவ்வியம், பஞ்சாமிர்தம், பால், தயிர், தேன், கரும்பு, வாழைப்பழம், எலுமிச்சம் பழச்சாறு, இளநீர், அன்னம், விபூதி, சந்தனம் இவற்றை வரிசைப்படி அபிசேகம் செய்தால் வாழ்வின் அனைத்து நலனும் பெற்று வாழ்க்கை இனிக்கும்.

திருவிளக்கு வழிபாடு:

இறை வன் பக்தர்களுக்கு ஐம்பூதங்களான நிலம், நீர், தீ, வளி, காற்று வடிவத்தில் காட்சி கொடுத்து அருள் கொடுக்கின்றார். இறைவனை தீ வடிவில் வழிபாடு செய்து அனைத்து நலன்களையும் பெற்று உய்யத் திருவிளக்கு வழிபாடு பவுர்ணமி திதியில் பக்தர்களால் நடத்தப்படுகிறது.

மூலமந்திர சமர்ப்பணம் :

மூல மந்திரத்தை நூற்றெட்டு முறை உச்சரித்து இறைவனுக்கு வழிபாடு செய்தால் இறைவன் நமக்குப் பக்தி, முக்தியை அருளுகின்றான்.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum