தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மீடியாவை பார்த்து ஒதுங்குகிறேனா? : நித்யா மேனன் பதில்

Go down

மீடியாவை பார்த்து ஒதுங்குகிறேனா? : நித்யா மேனன் பதில் Empty மீடியாவை பார்த்து ஒதுங்குகிறேனா? : நித்யா மேனன் பதில்

Post  ishwarya Sat May 25, 2013 2:29 pm

தமிழில் 180 படத்தில் நடித்தவர் நித்யா மேனன். மலையாளம், தெலுங்கு, கன்னட படங்களில் நடித்து வருகிறார். அவர் கூறியதாவது: கேரளாதான் சொந்த மாநிலம். ஆனால் பிறந்து, வளர்ந்தது எல்லாம் பெங்களூரில். அதன் பிறகு சென்னையில் பல வருடங்கள் இருந்தேன். இதனால் மூன்று மொழிகளும் எனக்கு சரளமாக பேசத் தெரியும். இது இப்போது எனக்கு கைகொடுத்திருக்கிறது. ஒரே நேரத்தில் இந்த மூன்று மொழி படங்களிலும் நடிக்கும்போது, மூன்றிலும் வசனங்களை புரிந்துகொண்டு நடிக்க முடிகிறது. தெலுங்கு பொருத்தவரை, இஷ்க் படத்தில் நடித்த பிறகு தெலுங்கு கற்றுக்கொண்டேன். அதனால் அங்கும் பிரச்னை இல்லை. இப்போது கன்னடத்தில் மைனா படத்தில் நடிக்கிறேன்.

தமிழில் ஹிட்டான மைனா படத்தின் ரீமேக் இது. அமலா பால் வேடத்தை ஏற்றுள்ளேன். தமிழில் 2 படங்கள் உள்ளன. அதில் ஷரவானந்த் ஜோடியாக நடிக்கும் படம், தெலுங்கிலும் உருவாகிறது. நான் மீடியாவிலிருந்து ஒதுங்கிப்போவதாக சொல்கிறார்கள். எனது தனிப்பட்ட வாழ்க்கையில் ரகசியம் காப்பதாகவும் அதனால் ஒதுங்குவதாகவும் சொல்வதில் உண்மையில்லை. எனது வாழ்க்கை திறந்த புத்தகம் போலத்தான். எனது பேமிலி பற்றி ஏற்கனவே மீடியாவிடம் சொல்லியிருக்கிறேன். எனக்கு காதலர் யாரும் இல்லை என்பதும் எல்லோருக்கும் தெரியும். அதனால் மறைப்பதற்கு எதுவும் இல்லை. நான் சொல்லும் விஷயத்தை தவறாக புரிந்துகொண்டு, சிலர் வேறு அர்த்தத்தில் அதை வெளியிடுகிறார்கள். அதுபோல் நடந்திருக்கிறது. அதனால்தான் மீடியாவிலிருந்து ஒதுங்கி இருக்கிறேன்.


ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum