தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சர்வசக்தி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

Go down

  சர்வசக்தி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் Empty சர்வசக்தி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

Post  ishwarya Fri May 24, 2013 12:05 pm

திருவொற்றியூர்: மணலி அருகே மாத்தூர் எம்எம்டிஏ பகுதியில் உள்ள ஸ்ரீசர்வ சக்தி மாரியம்மன் கோயில் ரூ.80 லட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்டு இன்று கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. நேற்று முன்தினம் கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது. இன்று அதிகாலையில் நடை திறக்கப்பட்டு யாக சாலையில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. விநாயகர், மாரியம்மன், சிவனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. காலை 7 மணிக்கு கோபுரங்களுக்கு ஜம்புநாத சிவாச்சாரியார் புனிதநீர் ஊற்றினார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மணலி மண்டல குழு தலைவர் தங்கசிவம், கவுன்சிலர் பார்த்திபன், நிர்வாகிகள் துரைராஜ், கோவிந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum