தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கூந்தல் உதிர்வைத் தடுக்க சில வழிகள்?

Go down

கூந்தல் உதிர்வைத் தடுக்க சில வழிகள்? Empty கூந்தல் உதிர்வைத் தடுக்க சில வழிகள்?

Post  ishwarya Sat May 11, 2013 1:25 pm

இன்றைய கால கட்டத்தில் அனைவருக்கும் இருக்கும் பெரிய பிரச்னை கூந்தல் உதிர்வது இதற்கு முக்கிய காரணம் நம் உடலில் வைட்டமின் மற்றும் தாது உப்புக்கள் குறைவதே! இந்த குறைபாடுகளால்தான் முடி உதிர்வு, பொடுகு, பூச்சி வெட்டு மற்றும் பல பிரச்னைகள் ஏற்படுகின்றன. சத்தான உணவுகளை உட்கொண்டால் ஆரோக்கியமான கூந்தலை பெறலாம்.

புரதச்சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்கள், பருப்பு மற்றும் பயறு வகைகள், பால் பொருட்கள் ஆகியவற்றை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். அதிகமாக தண்ணீர் அருந்த வேண்டும் இவை முடியை நன்கு வளர வழி வகுக்கும். ரசாயனங்கள் அடங்கிய ஷாம்புகளை வாங்கக் கூடாது. நல்ல ஷாம்புகளை தேர்ந்தெடுத்து வாங்க வேண்டும்.

இயற்கை பொருட்களான சிகைக்காய், எலுமிச்சை, தேங்காய் எண்ணெய், வினிகர் போன்றவை கூந்தலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும். குளிக்கும் போது நீரில் சிறிதளவு ஆப்பிள் சிடர் வினிகர் கலந்து குளிக்கலாம் கூந்தல் மிருதுவாகவும், பளபளப்பாகவும் இருக்கும். நாம் உபயோகிக்கும் ஷாம்பு அதிக ரசாயனக் கலப்பு இல்லாதவையாக இருக்க வேண்டும். பொடுகு இருப்பவர்கள் ஒருநாள் விட்டு ஒருநாள் தலைக்கு குளிக்க வேண்டும். இதனால் பொடுகு தொல்லை நீங்கும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum