தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ரசிக்க.. ருசிக்க.. கீரை பிரைடு ரைஸ்

Go down

ரசிக்க.. ருசிக்க.. கீரை பிரைடு ரைஸ் Empty ரசிக்க.. ருசிக்க.. கீரை பிரைடு ரைஸ்

Post  ishwarya Wed May 08, 2013 12:34 pm

பிரைடு ரைஸ் நினைத்தாலே எச்சில் ஊறவைக்கும் மிகவும் ருசியான உணவாகும்.

நண்பர் கீரை பிரைடு ரைஸ் மிகவும் சுவையாக இருக்கும் அதை நீங்களும் செய்து பாருங்கள் என்று சமைக்க தேவையான பொருட்களையும், செய்முறை விளக்கத்தையும் எளிமையான முறையில் தொகுத்தளித்துள்ளார்.

ரசித்து சமைத்து உண்டு மகிழுங்கள்.


தேவையானப் பொருட்கள்:-

பாஸ்மதி அரிசி - 250 கிராம்
முளைக்கீரை - 1 கட்டு

பட்டை - ஒரு டீஸ்பூன்
கிராம்பு - ஒரு டீஸ்பூன்
ஏலக்காய் - ஒரு டீஸ்பூன்

கொத்தமல்லி - ஒரு டீஸ்பூன்
கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்

நெய் - 50 கிராம்
கடுகு & உளுத்தம்பருப்பு - தேவையான அளவு
பச்சை மிளகாய் - 2
வரமிளகாய் - 2

பூண்டு - 5
துவரம்பருப்பு - ஒரு கப்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:-

முளைக்கீரை ஒரு கட்டு பொடியாக நறுக்கி வைக்கவும்.

பாஸ்மதி அரிசி 200 கிராம் தண்ணீரில் ஊற வைக்கவும்.

பட்டை, கிராம்பு, ஏலக்காய் ஒரு டீஸ்பூன், கொத்தமல்லி, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு ஒரு டீஸ்பூன் எடுத்து வாணலியில் வறுத்து பொடியாக்கிக் கொள்ளவும்.

குக்கரில் 50 கிராம் நெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு சேர்த்து தாளிக்கவும்.

பச்சை மிளகாய், வரமிளகாய், பூண்டு சேர்க்கவும். இத்துடன் அரைத்த பொடிகள் சேர்த்து வதக்கி கீரை சேர்க்கவும்.

வேகவைத்த துவரம்பருப்பு ஒரு கப் சேர்த்து ஊற வைத்த அரிசியை சேர்த்து இரண்டு மடங்கு தண்ணீர் விட்டு, உப்பு போட்டு குக்கரை மூடி ஒரு விசில் விடவும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum