தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மார்பக புற்று நோயின் படி நிலைகள்

Go down

மார்பக புற்று நோயின் படி நிலைகள் Empty மார்பக புற்று நோயின் படி நிலைகள்

Post  meenu Wed Jan 23, 2013 1:41 pm

மார்பக புற்று நோயில் நான்கு படி நிலைகள் உள்ளன.

1. முதல் படி நிலை: முதல் படி நிலை என்றால் புற்று நோய் அணுக்கள் இன்னும் மார்பக்தைத் தவிர வேறெங்கும் பரவவில்லை என்றும் கட்டியின் சுற்றளவு 2, 5 செ, மீட்டரைக் காட்டிலும் அதிகமில்லை என்று பொருள்.

2. இரண்டாம் படி நிலை: அக்குளின் கீழேயுள்ள நெரிக்கட்டி (நிணநீர் கட்டி) களில் புற்று நோய் பரவி விட்டது என்றும் மார்பகக் கட்டியின் சுற்றளவு 2.5 செ.மீட்டரைக் கடந்து விட்டது என்றும் பொருள்.

3. மூன்றாம் படி நிலை பொதுவாக மூன்றாம் படி நிலையை முதிர்ந்த புற்று நோய் என்பார்கள். மார்பகக் கட்டியின் சுற்றளவு 5 செ.மீட்டரை கடந்து விட்டது என்றும் மார்பக சுவர் அல்லது மேல் தோலில் இதில் ஈடுபட்டுள்ளது என்றும் பொருள். இந்நிலையில் அக்குளின் கீழே உள்ள லிம்ப் நோட்களில் புற்று நோய் அணுக்கள் முற்றிலும் பரவி விடும்.

4. நான்காம்படி நிலை: இந்த நான்காம் படி நிலை முற்றிலும் பரவி விட்ட புற்று நோயாகும். புற்று நோய் மார்பகத்திலிருந்து உடலின் மற்ற பாகங்களான நுரையீரல், ஈரல், மூளை, எலும்புகள் மற்ற எல்லா லிம்ப் நோட் (நெரிகட்டிகள்)கள் அனைத்திலும் பரவிவிட்டது என்று பொருள்.

மீண்டும் வரும் புற்று நோய்.........

மீண்டும் வரும் புற்று நோய் என்றால் துவக்க மருத்துவத்திற்குப் பின்னரும் மீண்டு வரும் நோயாகும். மார்பகத்தில் உள்ள கட்டி முற்றிலும் அறுத்து அகற்றப்பட்ட பின்னரும் அல்லது அழிக்கப்பட்ட பின்னரும் சில நேரங்களில் கண்டு பிடிக்க முடியாத சில சிறு புற்று நோய்கள் மருத்துவத்திற்குப் பின்னரும் உடலில் விடுபட்டு இருந்தால் அல்லது மருத்துவத்திற்கு முன்னரே புற்று நோய் பரவி விட்டிருந்தால் புற்று நோய் மீண்டும் வரும்.

அறுவை மருத்துவம் என்றால் என்ன?

கட்டியின் அளவு, இருப்பிடம், பரிசோதனை காலையில் நடந்த பரிசோதனையின் முடிவுகள் நோய் உள்ள படி நிலை அல்லது அளவு இவற்றைப் பொறுத்து மார்பகப் புற்று நோய்க்கான மருத்துவம் நடைபெறும். இந்த மருத்துவம் மார்பகத்தில் மட்டும் அல்லது சிஸ்டமிக் (முழு உடலுக்கும்) கொடுக்கும் முறையில் இருக்கும். ஒருவர் ஒன்று அல்லது பல மருத்துவர்களை பெறுவார்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum