தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சோமவாரத்தில் தோன்றிய மதுரை.......

Go down

சோமவாரத்தில் தோன்றிய மதுரை....... Empty சோமவாரத்தில் தோன்றிய மதுரை.......

Post  amma Fri Jan 11, 2013 6:04 pm

சோமசுந்தரக் கடவுள் குலசேகரன் என்னும் பாண்டிய மன்னனுக்குக் கனவிலே தோன்றிக் கடம்பவனத்தை நகரமாக்குமாறு பணித்த தினம் சோமவாரமாகும். பாண்டியனுக்கு ராசதானியாய் விளங்கியது மணவூர் நகரம். அந்நகரத்திலே தனஞ்சயன் என்றொரு வணிகன் இருந்தான். அவன் பிறவூர் சென்று வாணிகம் செய்து தன்னூருக்கு திரும்பினான். கடம்பவனத்தை அடையும்போது சூரியன் மறைந்திருந்தது.

அப்போது ஒளிபொருந்திய விமான மொன்றை அவன் கண்டான். அதற்குச் சமீபமாகப் போய் அங்கு எழுந்தருளி இருக்கும் சோமசுந்தரக் கடவுளை வணங்கிக் கொண்டு இருந்தான். அன்று சோமவாரமாகையால் தேவர்கள் வந்து பூஜை செய்து வணங்கினர். இதனைத் தன் ஞான நோக்கினாலே அறிந்த தனஞ்செயன் பூஜாதிரவியங்களைப் பெற்றுத் தேவர்களிடத்திலே கொடுத்து விட்டுக் கோயிற்புறத்தேயிருந்து தனது இஷ்டலிங்கத்தைப் பூஜித்தான்.

சூரியன் உதித்த பின்னர் அங்கே எவரையும் காணாது சோமசுந்தரக் கடவுளையே கண்டு வணங்கிப் பாண்டியனிடம் சென்று நிகழ்ந்தவற்றைக் கூறினான். அன்றிரவு சோமசுந்தர கடவுள் பாண்டியன் கனவிலே தோன்றி, "கடம்பவனத்தை நகராக்கு'' எனத் திருவாய் மலர்ந்திருளினார். குலசேகரன் கடம்பவனத்தை நகராக்கிக் கோவில் அமைத்தான்.

சோமசுந்தரப் பெருமான் தமது திருச்சடையில் தரித்திருக்கும் சந்திரக்கலையிலுள்ள அமிர்தத்தைக் கங்கா ஜலத்தோடு கலந்து எங்கும் சிதறியருளினார். அது அந்த நகரம் முழுவதும் பரந்து தன்மயமாக்கிச் சாந்தி செய்தது. மிகவும் மதுரமான தன்மையினால் அது மதுரைமாநகரம் எனப்பெயர் ஏற்பட்டது.

அப்பம் படைத்து வணங்குங்கள்........

சோமவார விரத நாளில் சிவபெருமானுக்கு அப்பத்தை நைவேத்தயமாக படைப்பது வழக்கம். அப்பம் நீரோடு சேர்ந்து இருக்கும் போது எண்ணெயில் போட்டால் குதிக்கும். எண்ணெயில் போட்ட கொஞ்ச நேரத்தில் நீர் வற்றியபின் குதிக்காது. அதோடு நன்றாக வெந்து இருக்கும்.

அதுபோல, நாம் ஆசைகள் என்ற நீரோடு சேர்ந்திருந்தால் எண்ணெய் என்ற வாழ்க்கையில் சரியாக இல்லாமல் அங்கும், இங்கும் அலை பாய்ந்து வருவோம். அதே ஆசையை நீரைப்போல வற்றச் செய்து விட்டால் எண்ணெய் போன்ற வாழ்க்கையை சந்தோஷமாக அமைதியாக அனுபவிப்போம்.

அதோடு, மனமும் சோர்வுகள் எல்லாம் அப்பம் போல வெந்து பக்குவப்பட்டிருக்கும் என்பதை உணர்த்துவதற்காகத்தான் அப்பத்தை படைக்கின்றோம். சோமவார விரதத்தை கடைபிடித்து, திரிசங்கு மன்னன் பேரரசனானன். பகீரதன், தன் நாட்டை திரும்பப் பெற்றான்.

நாரதர் பன்னிரெண்டு ஆண்டுகள் இந்த விரதத்தை கடைபிடித்து சப்த ரிஷிகளைவிட உயர்ந்த ஆன்மீக நிலையை அடைந்தார். பல ஆண்டுகள் கடைபிடிக்க இயலாவிட்டாலும் இயன்ற அளவிலாவது இவ்விரதத்தை கடைபிடித்தால் நல்லது.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum