தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அப்பர் வேடத்தில் நடிப்பு: திருப்பத்தூர் சிவாஜி மன்றம் நடிகர் விவேக்குக்கு கண்டனம்

Go down

அப்பர் வேடத்தில் நடிப்பு: திருப்பத்தூர் சிவாஜி மன்றம் நடிகர் விவேக்குக்கு கண்டனம் Empty அப்பர் வேடத்தில் நடிப்பு: திருப்பத்தூர் சிவாஜி மன்றம் நடிகர் விவேக்குக்கு கண்டனம்

Post  ishwarya Sat May 04, 2013 4:36 pm

நடிகர் சிவாஜியின் பழைய படங்கள் மீண்டும் டிஜிட்டலில் வெளியிடப்படுகிறது. இதற்கு தமிழகம் முழுவதும் அவரது ரசிகர்கள் வரவேற்பு அளித்து வருகின்றனர்.

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ஜோலார்பேட்டையில் ‘வசந்த மாளிகை’ படம் டிஜிட்டலில் ரிலீசானது. அப்போது ரூபாய் 5 லட்சம் நோட்டுகள் மாலை போடப்பட்டன. தற்போது நடிகர் விவேக் அப்பர் வேடத்தில் சிவாஜி போல நடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து திருப்பத்தூர் சிவாஜி மன்றத்தினர் கூறியிருப்பதாவது:-

உலகிலேயே எந்த கலைஞராலும் நடிப்பில் தொடமுடியாத உச்சத்தை தொட்டு ‘திருவருட்செல்வர்’ படத்தில் அப்பர் பெருமானாக தத்ரூபமாக உலா வந்தார் நடிகர் திலகம் சிவாஜி. அந்த கதாபாத்திரத்தை அவர் தன் வாழ்வில் ஒரு பாக்கியமாக கருதி தனது முழுத் திறமையையும் வெளிப்படுத்தி நடித்த படம் அது. அந்த அப்பர் வேடத்தையும் காமெடி என்ற பெயரில் விவேக் தனது ரிலீசாகப் போகும் ஒரு படத்தில் கிண்டல் செய்திருப்பதாக தெரிகிறது.

அப்படத்தின் சுவரொட்டிகளில் சிவாஜியின் அப்பர் வேடத்தை போலவே விவேக் நடித்துள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே ‘பராசக்தி’, ‘முதல் மரியாதை’ போன்ற படங்களில் நடிகர் திலகம் நடித்த கதாபாத்திரங்களை விவேக் காப்பியடித்து கிண்டல் செய்தபோதே நாங்கள் அதை வன்மையாக கண்டித்தோம். ஆனால் விவேக் தனது போக்கை நிறுத்தவில்லை.

மேலும் மேலும் அந்த உலக நடிகரின் ரசிகர்களின் உள்ளங்களை புண்படுத்தி வருகிறார். இனியும் இதுபோன்ற மலிவான விளம்பரங்களில் விவேக் போதை கொள்ளாமல் தனது வேலைகளை இத்தோடு நிறுத்தி கொள்வது நல்லது. இல்லையேல் நடிகர் திலகத்தின் அன்பு ரசிகர்களாகிய நாங்கள் எதிர் நடவடிக்கையில் ஈடுபட நேரிடும் என்று விவேக்கை எரிச்சரிக்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
»  நடிகர்கள் ஜெய், சத்யன் வீடுகளில் முற்றுகை: சிவாஜி ரசிகர் மன்றம் அறிவிப்பு
» கார் கண்ணாடியில் கறுப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்ததால் நடிகர் விவேக்குக்கு அபராதம்: போக்குவரத்து போலீசார் நடவடிக்கை
» நடிகர் திலகம் சிவாஜி – பிறந்தநாள் நினைவலைகள்
» சேவை வரிவிதிப்பு: நடிகர் அஜீத் கண்டனம்
» ஆர்யாவை விமர்சித்த குகநாதனுக்கு நடிகர் சங்கம் கண்டனம்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum