தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஏ.ஆர்.ரகுமான் பாடலுக்கு ஆட கலைஞர்கள் மறுப்பு

Go down

ஏ.ஆர்.ரகுமான் பாடலுக்கு ஆட கலைஞர்கள் மறுப்பு Empty ஏ.ஆர்.ரகுமான் பாடலுக்கு ஆட கலைஞர்கள் மறுப்பு

Post  ishwarya Wed Apr 24, 2013 1:23 pm

காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளின் அறிமுக நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சி இடம்பெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் ஆட 6 கர்நாடக நாட்டிய கலைஞர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இது விளையாட்டு ஒருங்கமைப்பு அதிகாரிகளுக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. இந்த செய்தி, போட்டியாளர்களை மட்டுமின்றி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. காமன்வெல்த் போட்டிகளுக்கான பாடலுக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

துவக்க விழாவில் இந்த பாடலுக்கு நடனம் ஆட பிரபல கதக் நடன கலைஞர் பிர்ஜூ மகராஜ், ஒடிஷி நடன கலைஞர் சோனல் மான்சிங், பரதநாட்டிய கலைஞர் சரோஜா வைத்தியநாதன், குச்சிப்புடி நடன கலைஞர் ராஜா ரெட்டி உள்ளிட்ட பிரபலங்கள் மறுப்பு தெரிவித்துள்ளது பாலிவுட் மட்டுமின்றி கோலிவுட்டிலும் பலரின் மனதில் அதிர்ச்சியை அலையை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் அவர்கள் தங்களின் நடனங்களுக்கு ஏ.ஆர்.ரகுமானின் இசை பொருந்தாது எனவும் தெரிவித்துள்ளனர். தங்கள் நடன பணிக்கு ஏற்ற பாடல்களுக்கே தாங்கள் நடனம் ஆடப் போவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்த காமன்வெல்த் போட்டி மையநோக்கு பாடல், போட்டி ஒருங்கிணைப்பு குழுவிற்கு திருப்தி அளிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது பிரபல நடனக் கலைஞர்களும் ஏ.ஆர்.ரகுமானின் பாடலுக்கு ஆட மறுத்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum