தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நயன்தாரா- பிரபுதேவா துபாயில் குடியேற திட்டம்: நடன பள்ளி கட்ட இடம் பார்த்தனர்

Go down

நயன்தாரா- பிரபுதேவா துபாயில் குடியேற திட்டம்: நடன பள்ளி கட்ட இடம் பார்த்தனர் Empty நயன்தாரா- பிரபுதேவா துபாயில் குடியேற திட்டம்: நடன பள்ளி கட்ட இடம் பார்த்தனர்

Post  ishwarya Tue Apr 23, 2013 5:43 pm

நயன்தாராவும், பிரபு தேவாவும் திருமணத்துக்கு பிறகு ஐதராபாத்தில் குடியேற முடிவு செய்துள்ளனர் என்றும் இதற்காக அங்கு வீடு பார்க்கிறார்கள் என்றும் ஏற்கனவே செய்திகள் வந்தன.

பின்னர் இந்திப்படங்கள் இயக்க நிறைய வாய்ப்புகள் வருவதால் மும்பையிலேயே தங்கி விட யோசனை உள்ளது என்று பிரபுதேவா கூறினார்.

இந்த நிலையில் நயன் தாராவும், பிரபுதேவாவும் நடன பள்ளிக்கு இடம் பார்ப்பதற்காக ரகசியமாக துபாய் சென்று திரும்பிய தகவல் தற்போது வெளி யாகியுள்ளது. அங்குள்ள பிரபல புரோக்கர்கள் மூலம் இடத்தை அலசியுள்ளனர். இடம் தேர்வு செய்வதற்காக சில நாட்கள் துபாயிலேயே தங்கி இருக்கிறார்கள்.

புரோக்கர்கள் காட்டிய இடங்களை வீதி வீதியாக காரில் சென்று சுற்றி பார்த்துள்ளனர். காலி இடம், கட்டிடத்தோடு கூடிய இடம் போன்றவற் றையும் பார்த்து இருக்கிறார்கள்.

பத்துக்கும் மேற்பட்ட இடங்களை பார்த்து ஒரு இடத்தை தேர்வு செய் துள்ளார்களாம். வீட்டுடன் கூடிய பிரமாண்ட நடனப் பள்ளியை கட்ட திட்டமிட்டுள்ளனர். இதன் மூலம் இருவரும் துபாயில் குடியேற திட்ட மிட்டுள்ளது உறுதி யாகியுள்ளது.

முதல் மனைவி ரம்லத் குடும்ப நல கோர்ட்டில் நயன்தாரா, பிரபுதேவா திருமணத்துக்கு தடை விதிக்க வேண்டும் என வழக்கு தொடர்ந்துள்ளார். இருவரும் சேர்ந்து சுற்றுவ தற்கும் தடை கோரியுள்ளார்.

இந்த சிக்கலில் இருந்து தப்பிக்கவே துபாயில் குடியேற திட்ட மிட்டுள்ளார்களாம். இதற்காகவே நயன்தாரா புதுப்படங்களில் நடிக்க ஒப்புக் கொள்ளவில்லை. சினிமாவுக்கு முழுக்கு போட்டு விட்டதாகவே கூறப்படுகிறது. ரூ. 1 கோடி சம்பளத்துடன் அணுகிய கன்னட படமொன்றில் நடிக்க மறுத்து விட்டாராம்.

துபாயில் குடியேறிய பிறகு பிரபுதேவா மட்டும் இந்திப் படப்பிடிப்புக்காக மும்பைக்கும், துபாய்க்கும் வந்து செய்வது போல் திட்டம் வகுத்துள்ளனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum